கி.வா.ஜ என்றழைக்கப்பட்ட கி.வா.ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் சமயச்சொற்பொழிவாளர். இவர் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் மாணாக்கராவார். இவர் “கலைமகள்” என்ற இலக்கிய இதழை நடத்தி, பல புதிய படைப்பாளிகளை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தினார். 1967இல் இவரது “வீரர் உலகம்” என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. கம்பன் கழகம் இவரது நினைவாக கி.வா.ஜ பரிசை நிறுவி வழங்கி வருகிறது. இவரின் பல நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளது. இவர் சொல்லின் செல்வராக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் சிலேடை புலியாகவும் இருந்தார.
1. புடவையின் சிறப்பு...
ஒரு நண்பர் வீட்டிற்குக் கி.வா.ஜ. சென்றார். நண்பர் அடுக்குமாடியில் குடியிருந்தார். புடவை உலர்த்துவதற்கு வெய்யில் படுகிற வகையில் வசதியான இடம் அந்த வீட்டில் இருக்கவில்லை.
வாசல் பக்கத்தில்தான் வெய்யில் அடித்துக் கொண்டிருந்தது. நண்பரின் மனைவி வாசல் கதவைத் திறந்து வைத்து வெய்யில் படும்படியாகத் துவைத்த புடவையை அதன் மேல் காயப் போட்டிருந்தார். புடவையைப் பார்த்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்த கி.வா.ஜ.,
'இது என்ன புடவை தெரியுமா?' என்று நண்பரைக் கேட்டார்.
'ஏன் சாதாரணப் புடவைதானே?' என்றார் நண்பர்.
'அல்ல இந்தப் புடவைக்கு ஒரு விசேஷச் சிறப்பு உண்டு. இதுதான் உண்மையான வாயில் புடவை!' என்றார் கி.வா.ஜ.
2. வெளுத்துக்கட்டிவிட்டீர்கள்
சென்னையில் குமரி அனந்தனும், கி.வா.ஜ.வும் கலந்து கொண்ட ஒரு கூட்டம். முதலில் பிரமாதமாகப் பேசிவிட்டு அமர்ந்தார் குமரி அனந்தன். பலத்த கைதட்டல். அடுத்து பேச வந்தார் கி.வா.ஜ.
“குமரி அனந்தன் அருமையாகப் பேசினார்” என்று பாராட்டிவிட்டு, அவரிடம் “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார்.
“வண்ணாரப்பேட்டையிலிருந்து” என்றார் அவர். உட்னே சொன்னார் கி.வா.ஜ.
“அதான் இப்படி வெளுத்துக்கட்டிவிட்டீர்கள்” சபையில் கைதட்டல் அடங்க வெகுநேரமாயிற்று!