ஓம் கால காலாய வித்மஹே! காலஹஸ்தாய தீமஹிதன்னோ கால பைரவ ப்ரச்சோதயாத்.
காலையில் எழுந்து குளித்துவிட்டு, சுத்தமான ஆடையை அணிந்துகொண்டு, மேலே உள்ள மந்திரத்தை மனதார 108 முறை ஜபிக்க வேண்டும்.
மந்திரத்தை ஜபித்த பின்பு பைரவரிடம் துன்பங்கள் அனைத்தையும் விலக்கி அருளும்படி மனதார வேண்டிக்கொள்ள வேண்டும். இந்த மந்திரத்தை ஜெபிக்கும் சமயங்களில் நிச்சயம் உடலும் மனமும் சுத்தமாக இருக்க வேண்டும். எண்ணத்தை எங்கோ வைத்துக்கொண்டு இம்மந்திரத்தை ஜபிப்பதால் எந்த பயனும் இல்லை.பைரவர் வழிபாடு- மூவுலகங்களையும் அச்சுறுத்தி வந்த அரக்கர்களை அழிக்க சிவபெருமானின் தத்புருஷ முகத்திலிருந்து தோன்றிய தெய்வம் தான் பைரவ மூர்த்தி. மொத்தம் 64 வகையான போகிறவர்கள் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. எனினும் இவற்றில் அஷ்ட பைரவர்கள் மட்டுமே பக்தர்களால் அதிகம் வணங்கப்படுகின்றனர்.
வாழ்வில் ஏற்படும் கஷ்ட நிலைகளில் சிக்கி தவிப்பவர்கள் பைரவரை மனதில் நினைத்து வணங்க அனைத்தும் நீக்கும் சக்தி வாய்ந்த தெய்வமாக பைரவ மூர்த்தி இருக்கிறார்.பைரவர் வழிபாட்டிற்குரிய தினங்கள்பைரவ மூர்த்தியை அனைத்து தினங்களிலும் வழிபாடு செய்யலாம் என்றாலும் மாதத்தில் வருகின்ற தேய்பிறை அஷ்டமி பைரவ வழிபாட்டிற்குரிய சிறப்பான தினமாக இருக்கிறது.
இந்த தேய்பிறை அஷ்டமி தினத்தன்று மாலை வேளையில் சிவன் கோவிலில் இருக்கும் பைரவருக்கு சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, செவ்வரளி மலர்கள் சமர்ப்பித்து, செவ்வாழைப் பழம் நைவேத்தியம் வைத்து, தேங்காய் அல்லது பூசணிக்காயில் நெய் ஊற்றி, தீபமேற்றி வழிபாடு செய்து வருபவர்களுக்கு வாழ்வில் துன்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பங்கள் பெருகும்.பைரவர் வழிபாடு பயன்கள்பைரவரை தேய்பிறை அஷ்டமி தினத்தன்று பைரவருக்குரிய காயத்ரி மந்திரங்களை 108 முறை முதல்1008 முறை வரை துதித்து வணங்குபவர்களுக்கு உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும்.
எதிரிகளால் ஏற்படும் தொந்தரவுகள் நீங்கும். துஷ்ட சக்திகளின் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும். ஆபத்துகளை அறவே நீக்கும். தரித்திரங்கள், பீடைகள் ஒழியும். தொழில், வியாபாரங்களில் நஷ்ட நிலை நீங்கி லாபங்கள் பெருகும். பணம் பொருள் ஆகியவற்றின் சேமிப்பு அதிகரிக்கும். திருமணம் தாமதமவர்களுக்கு நல்ல முறையில் திருமணம் விரைவில் நடைபெறும்......