கார்த்திகைத் தீபம்

Status
Not open for further replies.
கார்த்திகைத் தீபம்

கார்த்திகைத் தீபம்

நவம்பர் 17 முதல் டிசம்பர் 15 வரையில், தமிழ் மாதமான கார்த்திகை மாதம் நிகழ்கிறது. இம்மாதத்தில் தீபம் ஏற்றுவது, இந்தியாவின் பல பகுதிகளில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

ஒரு வருடத்தின் இந்த பாகத்தை, தக்ஷிணாயனம் (அ) சாதனா பாதை என்று அழைப்பர். இதில் இந்த கார்த்திகை மாதத்தில் தான் நாம் ‘கைவல்ய பாதைக்குள்’ மெதுமெதுவாக அடி எடுத்து வைக்கும் நேரம். யோக சாதனா செய்யும் வகையில், தக்ஷிணாயனம் என்பது தீவிரமாக யோக சாதனாவில் ஈடுபட்டு, நம்மை சுத்திகரித்துக் கொள்வதற்கான நேரம். உத்தராயணமோ ஞானோதயம் பெறுவதற்கான நேரம். சாதனா பாதையில் உழுவை செய்து, விதை விதைத்து, பயிர் செய்தாயிற்று. இப்போது நீங்கள் செய்த ‘சாதனா’விற்கான பலன்களை அறுவடை செய்யும் நேரம். இந்த நேரத்தில் தான் உங்கள் சாதனாவின் பலன்களை உங்களுக்கு பயன்படும் விதத்தில் நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த கார்த்திகை மாதம், சாதனா பாதையில் இருந்து கைவல்ய பாதைக்கு மெதுவாக மாறும் நேரம். இந்நேரத்தில் விளக்குகள், அதில் இருந்து வெளிவரும் ஒளி, ஞானோதயம், விழிப்புணர்வு, முக்திக்கான அடையாளக் குறியீடுகள். இதைக் குறிப்பதற்குத் தான் வீட்டிலே பல விளக்குகள் ஏற்றி வைக்கிறோம்.



தீப ஒளியின் தாத்பர்யம் நம்முன் இருக்கும் அஞ்ஞான இருணைப் போக்கி மெய்ஞானத்தைத்தருவதாகும்.

இன்றும் தினமும் காசியிலும், ஹரித்துவாரிலும் மாலையில் தீபம் ஏற்றி இலையில் வைத்துபூக்களுடன்
ஆ ற்றில் விடும் பழக்கம் இருந்து வருகிறது. கங்கைக்கு தீபம் காட்டி வழிபடுவதுஇன்றும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது -

சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற சங்க நூல்களில் பாவை விளக்குகள் பற்றி முக்கியமாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.'' கார்த்திகை தீபக்காட்சிக் கண்டு களித்தவர்களின் கண்கள்தான் கண்கள். மற்றவர்களின்கண்கள் வெறும் புண்கள் '' என்று பொங்கையாழ்வார் கார்த்திகை தீபத்தைப் பற்றிச்சிறப்பாக குறிப்பிடுகிறார்.

திரிசங்கு மன்னன் இழந்த தன்னுடைய நாட்டைக் கார்த்திகை தீப விரதமிருந்து பெற்றான். -

குத்து விளக்கில் இருக்கும் ஐந்து முகங்களையும் ஏற்றி வைத்தால் அந்த இடம் இலட்சுரமாக இருக்கும். ஐந்து முகங்களையும் பெண்களின் மன உறுதி, நிதானம், சமயோசித புத்தி,சகிப்புத் தன்மை, அன்பு இவற்றிக்கு ஒப்பிடுவார்கள் -

அகல், எண்ணெய், திரிம் சுடர் இவை நான்கும் ஒன்று சேரும்போது 'விளக்கு' என்றுஅழைக்கப்படுகிறது. இவை அறம், பொருள், வீடு என்ற குறள் நெறியை உணர்த்துகின்றன.இவையே சரியை, கிரியை,யோகம், ஞானம் ஆகும்.இந்த அறவொளியையேத் தீபமாக, தீபசக்தியாக நாம் வணங்குகிறோம்.முருகப் பெருமானைக் கார்த்திகைப் பெண்கள் சீராட்டி வளர்த்தனர். அம்பிகை அருளால்முருகப்பெருமான் கார்த்திகேயனாக ஒருமுகக் கடவுளானார். இதன் காரணமாக 'பரணி தீபம்' கொண்டாடப்படுகிறது. -

கீதையில் கிருஷ்ண பகவான், விளக்கின் ஒளி போன்று மனதை ஆடாமல்,அசையாமல் சஞ்சமற்று ஒரு நிலைப்படுத்த வேண்டும் என்கிறார் -

தீபம் ஏற்றி வழிபடமுடியாத இடங்களில் சொக்கப்பானை வேய்ந்து பனை ஒலையால்
சுவாமியை எழுந்தருளச் செய்து சொக்கப்பானைக் கொளுத்துவர்.
''சொக்கப்பானையை வணங்வது சொக்கப்பனையாகும்'' சொக்கப்பனாகிய சிவனை
ஒளிவடிவாகக் காண்பிப்பதால் இது சொக்கப்பனை ஆகும். -

முற்பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தி எலியாக பிறந்திருந்தது. தான் அறியாமலேயே,
தினமும் விளக்கில் இருக்கும் எண்ணெய் குடித்து வரும்போது, திரி தூண்டி வந்தது.
இதன் காரணமாக கர்ப்பக்கிரகத்தினுள் சர்வகாலமும் விளக்குப் பிரகாசமாக ஒளி நிறைந்து விளங்கிற்று. அறியாமலே எலி செய்த புண்ணிய காரியத்தினால் அடுத்த பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறவியை அடைந்தது. இறைவன் மகாபலிக்கு முக்தி கொடுத்தபோது
மகாபலியின் விருப்பப்படி, கார்த்திகை தீபம் எல்லா இடங்களிலும் சிறப்பாக நடைபெற
இறைவன் திருவுளம் கொண்டான். -

அதனால் கார்த்திகை தீபத்தன்று அனைவரின் வீடுகளிலும் மாலையில் தீபமேற்றி நெல்
பொரியில் உருண்டை செய்து இறைவனுக்கு நைவேத்தியம் வைத்து வழிபடுகிறார்கள். -



கார்த்திகை தீபவிழா ஆணவ இருளை நீக்கிää ஞான ஒளியை நம்முள் பெருக்க
உகந்த விழா கும். -

??????? ???????????: ???????????? ?????

Karthigai deepam | Isha Tamil Blog
 
A nice information. Thank you. Pori is for agni. That is why the first homam is performed in the marriage ceremony by the young couple combined together . This is called Laaja homam.
 
A nice information. Thank you. Pori is for agni. That is why the first homam is performed in the marriage ceremony by the young couple combined together . This is called Laaja homam.

Thanks for your additional Information Sir
 
Status
Not open for further replies.
Back
Top