காதலில் அழகு : பெண்கள் !!!

Status
Not open for further replies.
காதலில் அழகு : பெண்கள் !!!

அவளின் காதல் என் காதலை விட அழகுதான்....!!!

என் கைகோர்த்து நடக்க ....
என் மடிசாய்ந்து உறங்க ....
என்னுடன் மனம் விட்டு பேச ...
இப்படி கணக்கில்லா ஆசைகள் இருந்தும்
என்னருகில் இருக்கும் பொழுது
யாதும் அறியாதவளாய் என்னை
மௌனத்துடன் இம்சிக்கும் அழகு !!!
அவளின் காதல் என் காதலை விட அழகுதான்....!!!

தொடக்கத்தில் ஒரு வார்த்தையாவது பேசமாட்டாளா
என்று ஏங்கிய என்னை...
இன்று....
அவளின் துறு துறு பேச்சுக்களில் கொள்ளை கொள்ளும் அழகில் !!!
அவளின் காதல் என் காதலை விட அழகுதான்....

தலைவலி என சிறு பொய்யை சொல்லி
அவளின் ஆத்மார்த்தமான அன்பு மழையில்
நனையும் பொழுது ....
அவளின் காதல் என் காதலை விட அழகுதான்....

அலைபேசியில் ஆயிரம் முத்தங்கள் கொடுத்துவிட்டு
நேரில் ஒரு முத்தத்திற்கு எனை தவிக்கவிடும்
அவளின் காதல் என் காதலை விட அழகுதான்....!!!!

யாரேனும் என்னை தவறாக பேசியபொழுது
அமைதிகாப்பவள் ... பின்னர் தனிமையில்
அவள் என்னை கடியும் அக்கறையில்.....
அவளின் காதல் என் காதலை விட அழகுதான்....

பிறந்தநாள் பரிசுகளாக அவள் விருப்பத்தில்
டைரி மில்க் சாக்லேட்டும் ஒரு கிரீட்டிங் கார்டு என
என் செலவை சிக்கனத்தில் முடிக்கும்
அவளின் காதல் என் காதலை விட அழகுதான்.... !!!

உறவுகளிடம் பகிர்ந்து கொள்ள முடியாத பல விஷயங்களை
நாணத்துடன் என்னிடம் தனிமையில் உறவாடும் அவள் பரிவில்
அவளின் காதல் என் காதலை விட அழகுதான்....!!!

செல்ல மொழி பேசி அழைக்கச் சொல்லி அவளிடம்
கெஞ்சும் பொழுது என்னுடன் பிடிவாதம் இருந்து மறுப்பவள்
ஊடல்களின் விளிம்பில் அவள் அழைக்கும் மழலை
மொழியின் வனப்பில் ....
அவளின் காதல் என் காதலை விட அழகுதான்....!!!!

அலுவலகம் விட்டு திரும்பி அவளின் யாழிசை போன்ற
குரலுக்காக எதிர்பார்க்கும் நொடிகளிலும் சரி,
பெற்றோருக்கு பயந்து , எனதன்புக்கு அடிமையாய்
அவள் பேசும் ஈனஸ்வர காதல் மொழிகளும் சரி ...
அவளின் காதல் என் காதலை விட அழகுதான்....!!!!!

ஆயிரம் உறவுகளை காதலுக்காக தூக்கி எறியும் போதும்
அல்லது உறவுகளுக்காக காதலை தூக்கி எறியும் போதும்
தளராமல் அன்றாட வாழ்வியலை புரிந்த நேர்த்தியில்...
அவளின் காதல் என் காதலை விட அழகுதான்....!!!!!

சுதந்திரமான இந்த காதல் வானில், சிறகொடிந்த
பெண் பறவைகளே அதிகம் என்பேன்...
ஆம் !!!
கணவன் ஒருவன் ...!!
காதலன் ஒருவன் ....!!
என நரக வாழ்கையில் வாழும் அவளின்
பரிசுத்தமான அன்பில் ...!!
அவளின் காதல் என் காதலை விட அழகுதான்....!!!!!


நன்றிகளுடன் ....
அசோக்
 
கவிதை நன்று!

தொடர்ந்து படைப்புக்களை அளிப்பதாக இருந்தால், ஒரு அழகிய தலைப்பில் 'நூல்' (thread) ஆரம்பித்து, அதிலேயே

எல்லாவற்றையும் இடலாம். படிப்பவர்களுக்கும் எளிதாக இருக்கும்.
இந்த யோசனை, வேறு சில புது முகங்களுக்கும்

நான்
சொன்னதுதான்!! :thumb:
 
உண்மையிலேயே நீங்கள் 2007 இல் பத்தாவது படித்திருந்தால்

இப்போது உங்கள் வயது ~ 20 !

அதற்குள் இவ்வளவு அனுபவங்களா ???
:shocked:
 
மோதிரக் கரங்கள் உள்ளே நுழைந்தபின்
தேவை இல்லை உங்கள் நூலில் நான்! :wave:

பதில் எழுதாவிட்டாலும் கவிதைகளை
படித்து ரசித்துக் கொண்டிருப்பேன்! :ranger:

வாழ்க! வளர்க! மிகவும் மதிக்கும்
அன்னையை பெருமிதப் படுத்துக!
:thumb:
 
அம்மா

இது சுத்த கற்பனை கவிதை .....

அதில் உள்ள வரிகளுக்கும் என் வாழ்க்கைக்கும் சம்மந்தமே இல்லை..

:)

நம்புங்கள் அம்மா

நன்றிகளுடன்
அசோக்



தாய்க்குப்பின் தாரம் சரிதானே??? :)
 
அம்மா...

தவறாக எழுதிவிட்டேன் ... 2004 ல் நான் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டேன்.... 2007 என தவறாக எழுதிவிட்டேன்... 15 .06 .1989 என்னுடைய பிறந்த தேதி ....

நன்றிகளுடன்
அசோக்



உண்மையிலேயே நீங்கள் 2007 இல் பத்தாவது படித்திருந்தால்

இப்போது உங்கள் வயது ~ 20 !

அதற்குள் இவ்வளவு அனுபவங்களா ???
:shocked:
 
மோதிரக் கரங்கள் உள்ளே நுழைந்தபின் தேவை இல்லை உங்கள் நூலில் நான்!..........
'மோதிரக் கரங்கள்' என்றால் அசோக் புரிந்துகொள்வாரா? :decision:
 
இல்லை அதைத்தான் யோசித்து கொண்டு இருந்தேன்...

நீங்களே சொல்லுங்கள் ...!!!
 
நம் இணையதளத்தின் நட்சத்திர அங்கத்தினர்களில் ஒருவர்.

உங்களது
இந்தக் கவிதைக்கு முதலில் 'Like' அளித்தவர்!! :)
 
எனக்கு எல்லா கரங்களும் ஒன்றுதான் .... மோதிரம் இருந்தாலும் சரி ... இல்லையென்றாலும் சரி.... !!!

:)
 
"ஆக்கவும், காக்கவும், அழிக்கவல்லவர் நீரே!
ஏக்கம் தவிர்த்து வினை தாக்கி தயவுடனே (காக்கவென்றோ) "

என்று ஒரு பாடலின் அனுபல்லவி நினைவுக்கு வருகிறது!!!
 
நீங்கள் மட்டும் அவ்வாறு நினைத்தால் போதுமா? :nono:

எனக்கு எல்லா கரங்களும் ஒன்றுதான் .... மோதிரம் இருந்தாலும் சரி ... இல்லையென்றாலும் சரி.... !!!

:)
 
"கிங் மேக்கர்" என்று கேட்டிருப்பீர்கள்.

இங்கே சிலர் "ஸ்டார் மேக்கர்ஸ்"!!!
B68
B68
B68
B68


இல்லை அதைத்தான் யோசித்து கொண்டு இருந்தேன்...

நீங்களே சொல்லுங்கள் ...!!!
 
இங்கு எழுதப் படாத விதிகள் சில உண்டு. :high5:

நான் இருந்தால் சிலர் அங்கே நுழைய மாட்டார்கள். :bolt:

அவர்கள் இருந்தால் நான் நுழைவது பிடிக்காது.
:hand:

போகப் போகப் புரியும் உங்களுக்கே
:rolleyes:
 
உங்களின் கருத்துரைகள் இல்லாமல் என்னால் ஏதும் செய்ய முடியாது....
 
Registered for 7 days...

posts 20 !

points 263 !!

level 2 !!! :clap2:

உங்களுக்கு யார் உதவியும் தேவைப்படாது!
:nono:

உங்களின் கருத்துரைகள் இல்லாமல் என்னால் ஏதும் செய்ய முடியாது....
 
இதோ என் கற்பனை:
:baby: யாக இருந்தவர் :clap2: வாங்குமளவு சிறப்பாகி,

:angel: களை :cool: என்று சொல்ல வைத்தார்!
 
You ARE a cool and fast story fabricator for sure!

QUOTE=Raji Ram;127259]இதோ என் கற்பனை:
:baby: யாக இருந்தவர் :clap2: வாங்குமளவு சிறப்பாகி,

:angel: களை :cool: என்று சொல்ல வைத்தார்!
[/QUOTE]
 
Status
Not open for further replies.
Back
Top