காஞ்சிவரதராஜன் பெருமாள்

praveen

Life is a dream
Staff member
காஞ்சிவரதராஜன் பெருமாள்

பத்தி முதலாமவற்றுள் பதி எனக்கு கூடாமல்
எத்திசையும் உழன்று ஓடி இளைத்து விழும் காகம் போல்
முத்தி தரும் நகரெழில் முக்கியமாம் கச்சி தன்னில்
அத்திகிரி அருளாளர்க்கு அடைக்கலம் நான் புகுந்தேனே...!


1. புராணங்களில் இத்தலம் ஸத்யவ்ருத ஷேத்திரம் என்றே அறியப்படுகிறது.
இங்கு செய்யும்
பாவ புண்ணியங்களுக்கு 100 மடங்கு பலன் என்பதாலேயே அப்பெயர்.


2. காஞ்சி மாநகர் சோழ பல்லவ ஆட்சி காலத்தில், நான்கு நகரங்களாக பிரிக்கப்பட்டிருந்தது: புத்த காஞ்சி, ஜைன காஞ்சி , சிவ காஞ்சி மற்றும் விஷ்ணு காஞ்சி. காஞ்சிபுரத்தின் மையமான தேரடி வீதிக்கு தெற்கே விஷ்ணு காஞ்சியும், வடக்கே சிவ காஞ்சியும் அமைந்துள்ளன.


3. ப்ரம்மா யாகம் செய்தது, கோவிலுக்குள் நுழைந்தவுடன் இடப்பக்கம் இருக்கும் திருகுளத்து கரை மண்டபத்தில். சரஸ்வதி நதியின் சீற்றத்தை ஆதிசேஷன் ஆயிரம் தலை கொண்டு தடுத்ததால்,
அனந்த சரஸ் என்று பெயர்கொண்டது அந்த குளம்.


4. யாகத்தின் இறுதியில், யாக குண்டத்தில் தோன்றியவர் தான் தேவாதிராஜன் என்று இன்றும் வணங்கப்படும் உற்சவர்.
நெருப்பினால் உண்டான வடுக்களை இன்றும் ஸ்வாமியின் திருமுகம் தெளிவாக காணலாம்.


5.மற்ற எந்த திவ்ய தேசங்களிலும் இல்லாத மகிமையாய், இங்கு இவர் ராஜாதி ராஜனாக
ஆட்சி செய்கிறார். தேசத்தை ஆளும்மன்னருக்குண்டான அனைத்துசடங்குகளும் இவருக்கு உண்டு.
பெருமாள் என்பதை விட ராஜன் என்றே அதிகம் கொண்டாடப்படுகிறார். பெருந்தேவி தாயார் பட்டமகிஷி.


6. பெருமாள் மீது பெரும்பக்தி கொண்ட கஜேந்திரன் என்ற யானையை, முதலையின் வாயிலிருந்து மீட்டு மோட்ஷம் கொடுத்த உண்மை சம்பவம் நடந்தது இத்தலத்தில் தான். 'கஜேந்திர மோட்ஷம்' காஞ்சி சாசனம்.


7. 'ப்ரம்மா' ஒவ்வொரு வருடமும் வந்து பூஜிக்கும் பத்து நாட்களும் 'ப்ரம்ம உட்சவமாக கொண்டாடப்படுவது தொடங்கியது இங்கே தான். 10 நாட்களுக்கான பூஜை முறைகள் ப்ரம்மாவகுத்த விதி. இதை பின்பற்றியே அனைத்து வைணவ கோவில்களிலும் இந்த உட்சவம் நடக்கிறது.


8. கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளும் விசேஷமும்
முதல் முதலில் தொடங்கியது இங்கே தான்.
காஞ்சி கருடசேவை என்பது உலகப்பிரசித்தம் .


9. ராமானுஜர் அவதரித்த ஸ்ரீபெரும்புதூர் அருகில் இருப்பது போலவே,
வேதாந்த தேசிகர் அவதரித்த 'தூப்புல்' என்ற தலமும் மிக அருகிலேயே உள்ளது.


10. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பரமபதத்தை சேவிக்க முடியாது, ஏனெனில் அது பூலோகத்தில் இல்லை. ஆகவே
வருடத்திற்கு ஒருமுறை,
தேவாதிராஜன்
பரமபத நாதனாக
சேவை சாதிக்கிறான், ப்ரம்ம உட்சவத்தின் பொது சேஷ வாகனத்தில்.


பத்தி முதலாமவற்றுள் பதி எனக்கு கூடாமல்
எத்திசையும் உழன்று ஓடி இளைத்து விழும் காகம் போல்
முத்தி தரும் நகரெழில் முக்கியமாம் கச்சி தன்னில்
அத்திகிரி அருளாளர்க்கு அடைக்கலம் நான் புகுந்தேனே...!
 
Back
Top