• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

காங்., அரசு தோல்வி அடைந்து விட்டது: வாய் கு&#2

Status
Not open for further replies.
காங்., அரசு தோல்வி அடைந்து விட்டது: வாய் கு&#2

Slip of tongue? May be costly indeed!

காங்., அரசு தோல்வி அடைந்து விட்டது: வாய் குளறிய சோனியா

ஐதராபாத் : ஆந்திராவில் கூட்டம் ஒன்றில் பேசிய காங்., தலைவர் சோனியா, கடந்த இரண்டு ஆண்டு கால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி தோல்வி அடைந்து விட்டதாக வாய் குளறி பே்சிவிட்டா். சோனியாவின் இந்த பேச்சு, கூட்டத்தில் கலந்து கொண்ட காங்., நிர்வாகிகள் பலரை அதிர்ச்சி அடைய வைத்தது.

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு காங்கிரஸ் சார்பில் ஆந்திராவில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு கூட்டத்தில் காங்., தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முதலில் பேசிய ராகுல், தனக்கு எழுதி கொடுக்கப்பட்டபடி, ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வது பெருமையளிக்கிறது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க காங்., அரசு பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், தற்போதைய அரசு அதை கண்டுகொள்ளவில்லை என தெரிவித்தார்.


பின்னர் பேசிய கட்சியின் தலைவர் சோனியா, தான் கொண்டு வந்த பேப்பரில் எழுதப்பட்டிருந்ததை அப்படியே படித்தார். அப்போது, கடந்த 2 ஆண்டு கால ஐக்கிய முற்போக்கு கூட்டணி (காங்கிரஸ்) அரசு எந்த பிரச்னையையும் தீர்க்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அனைத்து வகைகளிலும் தோல்வி அடைந்து விட்டது என குறிப்பிட்டார். சோனியாவே காங்., அரசை தாக்கி பேசிய இந்த நிகழ்ச்சி வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.


தேசிய ஜனநாயக கூட்டணி (பா.ஜ.,) அரசு என்பதற்கு பதிலாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி என சோனியா, தங்கள் கட்சி தலைமையிலான அரசை குறை கூறி பேசியது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. சிலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. சோனியா பேசிவிட்டு அமர்ந்த பிறகு கட்சி நிர்வாகிகள் அவரிடம் விளக்கினர்.
அதிர்ச்சி அடைந்து தான் வாசித்த பேப்பரை சரிபார்த்த சோனியா, சிறிது நேரம் சிரித்து சமாளித்து விட்டு, புறப்பட்டுச் சென்றார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1479803
 
hi

சில நேரங்களில் உண்மைகள் தான் அறியாமல் வந்து விடும்.....பொய் மறைபதற்கு ரொம்ப கஷ்டம்...
 
hi

சில நேரங்களில் உண்மைகள் தான் அறியாமல் வந்து விடும்.....பொய் மறைபதற்கு ரொம்ப கஷ்டம்...

Public speakers should have dedication and involvement to the occasions.

However one thing is clear. Hereafter BJP could not accuse Sonia of misrepresenting the truth.
 
Status
Not open for further replies.
Back
Top