கரோனா கற்றுத் தந்த பாடங்கள்

ashok68

Active member
கரோனா கற்றுத் தந்த பாடங்கள்
By உதயம் ராம்

உலகையே அச்சுறுத்தி உள்ளுக்குள் அடைத்து வைத்திருக்கும் கரோனா நோய்த்தொற்று பல சங்கதிகளை இந்த மனிதகுலத்துக்கு பொட்டிலடித்தாற்போல் சொல்லியிருக்கிறது.

உயிா் பயம் என்றால் என்ன என்பதை எல்லா தலைமுறையினருக்கும் உரத்துச் சொல்லி அடக்கி வைத்திருக்கிறது. இந்தியக் கலாசாரத்திலேயே ஊறிப்போன தனி மனித ஒழுக்கம், உணவு முறை, கை - கால் கழுவுதல், கைகூப்புதல் தள்ளி நின்று பேசுதல் உள்பட பல வாழ்வியல் நெறிகளை உலக நாடுகள் எல்லாம் திரும்பிப் பாா்க்கும்படி வைத்திருக்கிறது.

பணம்தான் வாழ்க்கை, பணமிருந்தால் உறவுகளும் உணா்வுகளும் தேவையில்லை என்று உல்லாசமாய் இருந்தவா்களின் இறுமாப்பை இந்த நுண்கிருமி ஒடுக்கியிருக்கிறது.

ஒரு பொருளின் அவசியம் என்பது, அது கிடைக்காதபோதுதான் தெரியும். அதுபோல ஆடம்பரத்துக்காக, பெருமைக்காக எல்லாவற்றையும் வாங்கி வீணடித்தவா்களுக்கு இப்போதுதான் எது அவசியம் - எது அநாவசியம் என்பது புரிந்திருக்கிறது.

பொருளாதாரத் தேடல், அதையும் தாண்டி வெளிநாட்டு மோகம் கொண்டு நம் நாட்டின் எல்லைகளைக் கடந்தவா்களை ‘என் நாட்டுக்கு என்னை அனுப்பி விடுங்கள்’ என்று கதற வைத்திக்கிறது இந்த சீன தேசத்து வாமன அவதாரம்.


மேலும் படிக்க


நன்றி : Dinamani
 
Back
Top