கந்தசஷ்டி விழா

கந்தசஷ்டி விழா

பிறக்கும் போதே தாயின் வயிற்றில் உள்ள சேற்றில் மிதக்கிறோம்! வெளி வந்து செய்யும் கர்ம வினைகள் எல்லாம், உடனே சேற்றைப் போல் நம் மீது ஒட்டிக் கொள்கிறது!


ஏதோ கொஞ்சமாகக் கழுவிக் கொண்டாலும், கறை அவ்வளவு சுலபமாகப் போக மாட்டேங்குது!


உஜாலா, சர்ஃப் எக்செல் எதுவும் வேலைக்காவது!


இப்படிப் பிறவிச் சேற்றில் சிக்க வைத்தானா முருகன்? இல்லையில்லை!


கருணை என்னும் கங்கையை நம் மேல் பாய்ச்சி, நம் சேற்றைக் கழுவுபவன் தான் முருகன்! சேற்றைக் கழிய வழி விட்டவா!


சேற்றைக் கழுவிய பின், தூய்மை வந்து விட்டது! வழி பிறந்து விட்டது! இனி என்ன? ஒவ்வொன்றாய் அலங்காரம் தான்! நமக்கும் அலங்காரம், கந்தனுக்கும் அலங்காரம்!! கந்தனுக்கு எந்நாளும் அலங்காரமே! அரகரோகரா.


கந்தசஷ்டி விழா 8 நவம்பர் முதல் 13 வரை. விரதம் இருப்பவர்கள் இரு முறை குளித்து ஒரு மனதுடன் கந்தனின்


கந்தர் சஷ்டிக் கவச மிதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்துநீ றணிய
அட்டதிக் குள்ளோ ரடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங் கருளுவர். எல்லோரும் சொல்வோமே.
 
Back
Top