கண்களுக்கு ஒளிதரும் பீட்ரூட் கீரைகள்!

Status
Not open for further replies.
கண்களுக்கு ஒளிதரும் பீட்ரூட் கீரைகள்!

[h=1]கண்களுக்கு ஒளிதரும் பீட்ரூட் கீரைகள்![/h]அன்றாட உணவில் பயன்படுத்தப்படும் காய்கறியான பீட்ரூட்டில் இருந்து கிடைக்கும் இலைகளான பீட்ரூட் கீரைகள் ஊட்டச்சத்து நிறைந்ததாகும். இது மருத்துவ குணம் கொண்டதாகவும் உள்ளது.

பீட்ரூட்டை உணவில் சேர்த்துக்கொள்கின்ற அளவிற்கு பீட்ரூட் கீரையை நாம் பயன்படுத்துவதில்லை. ஆனால் ஐரோப்பியர்கள் இக்கீரையை விரும்பி தங்கள் உணவை சேர்த்துக் கொள்கின்றனர். இது ஐரோப்பா கண்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட போதிலும் சமீபத்தில்தான் உலகம் முழுவதும் பயிரிடப்பட்டு வருகிறது.

ஐரோப்பாவிலும், வடஅமெரிக்காவிலும், கீரைக்காகவே பீட்ரூட்டைப் பயிரிடுகின்றனர்.. சைபீரியாவில் கால்நடைகளின் உணவிற்காகவே முற்காலத்தில் இந்த கீரையும் கிழங்கும் பயிரிடப்பட்டது எனச் சொல்லப்படுகிறது. கோழிகள் இக்கீரையை விரும்பி உண்கின்றன. எனவே இது ஒரு கோழித் தீவனமாகவும் பயன்படுகின்றன

சுவையான கீரை

பீட்ரூட்டுக்கு சுகந்தா என்ற என்ற வேறு பெயரும் உண்டு. இந்தியாவில் கூட கிழங்குக்காக மட்டுமின்றி கீரைக்காகவும் இதனை பயிரிடுகின்றனர். இக்கீரையை பொரியலாகவோ, துவரம் பரும்புடன் சேர்த்து கூட்டாகவோ செய்யலாம். பாசிப்பயறு, தட்டைப்பயிறு, முதலியவற்றுடன் சேர்த்துக் கூட்டுக்கறிகள் ஆக்கலாம். இப்பயிர்களுடன் சேர்க்கப்பட்ட கீரை மிகவும் சுவையாக இருக்கும். சாலட் செய்யவும் இக்கீரை பயன்படுகிறது.

கரோட்டின் உயிர்சத்து

பீட்ரூட் கீரைகளில் நரம்புகள் அதிகம் உள்ளது. இந்நரம்புகள் அதிகம் உள்ளது. இந்நரம்புகளில் கரோட்டின் எண்ணும் உயிர்சத்து அதிகம் உள்ளது. இந்த கரோட்டின் வைட்டமின் ஏ சத்தை அதிகம் சேர்த்து வைக்கின்றன. எனவே இதனை வைட்டமின் ஏயின் சேமிப்புப் பட்டரை என்றே கூறலாம். பச்சையாக உண்பதால் வைட்டமின் ஏ நேரடியாக நம் உடலில் சேருகிறது. இதனை கத்தியைக் கொண்டு பறிக்கக் கூடாது. கையால் திருகி பறிக்கவேண்டும்.

புரதம், தாது உப்புக்கள்

பீட்ரூட் கீரை ஒரு சிறந்த உணவாக அமைவதோடு புரதம் மற்றும் தாது உப்புகள் உயிர்சத்துக்கள் நிறைந்த கீரையாகும். தையாமின், ரிபோஃப்ளோவின், நிக்கோடின் அமிலம், வைட்டமின் சி போன்றவை அதிகம் உள்ளது.

பீட்ரூட் கீரை சிறுநீரைப் பெருக்கி அதனை மிதமாக வெளியேற்றுகிறது. மலத்தை இளக்கி வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. மலச்சிக்கலைத் தவிர்க்கும் இக்கீரை கல்லீரலுக்கு வலிவு கொடுக்கிறது.

கண்நோய்கள் குணமாகும்

உடலில் ஏற்படும் எரிச்சலுக்கு இந்த இலையில் சாற்றினை தடவ எரிச்சல் தணியும். வைட்டமின் ஏ அதிகமாக இருப்பதால் கண் நோய்களை இக்கீரை போக்குகிறது. கண்ணுக்கு தெளிவையும், பார்வையும், கூர்மையும் ஏற்படுகிறது.

உடற்சூட்டால் ஏற்படும் கண் வீக்கம், அழற்சி முதலியவற்றுக்கு இக்கீரையின் சாற்றை கண் இமைகளில் பூச குணம் கிடைக்கும். கீரையை உணவாக உட்கொண்டாலும், கண் நோய்கள் குணமடையும் என்றும் உணவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

நன்றி
 
In Kolkatta Nokkol is available with keerai and we have cooked the keerai and it is very tasty and used as subji for chappatti. whereas, I have not seen beetroot with keerai.
 
Beetroot keerai Fry...!!!

Beetroot Keerai Fry :

Ingredients:


Beetroot with keerai ( leaves ) : 2
Kadalai paruppu ( bengal gram dal ) : 2 spoon
Ulutham paruppu ( black gram dal ) : ½ spoon
Mustard : ¼ spoon
Oil : 6 spoon
Chilli powder : 4 spoon
Onion : 50 gm
Tomato : 2
Salt : as needed


Method


Cut beetroot keerai and beetroot finely.
Cut onion, tomato finely.
Heat oil in a frying pan.
Add mustard, bengal gram dal and black gram dal.
When mustard splutters, add onion, beetroot leaves, beetroot and fry.
Add tomato, salt and chilli powder.
When the keerai is cooked, remove the pan from the stove.
This can be served as a side dish for poori and chappathi.



So tasty !! Healthy too....!!!







In Kolkatta Nokkol is available with keerai and we have cooked the keerai and it is very tasty and used as subji for chappatti. whereas, I have not seen beetroot with keerai.
 
திரு. ராமநாதன் அவர்களே...

நான் மும்பையில் பல இடங்களில் பார்த்திருக்கிறேன் , குறிப்பாக வெங்காயக் கீரைகளையும் கண்டு சமைத்தும் இருக்கிறே
ன்....!!! :hungry:

நோக்கோல் (பருப்புக் கீரை ???!!) - நான் பார்த்ததே இல்லை...

தினத் தந்தியில் வரும் காய்கறி மார்க்கெட் நிலவரத்தில் அதன் பெயரும் விலையும் போட்டிருப்பார்கள்... அதை படித்ததோடு மட்டும் சரி....

:)

நன்றிகளுடன்
அசோக் குமார்
 
திரு. ராமநாதன் அவர்களே...

நான் மும்பையில் பல இடங்களில் பார்த்திருக்கிறேன் , குறிப்பாக வெங்காயக் கீரைகளையும் கண்டு சமைத்தும் இருக்கிறே
ன்....!!! :hungry:





நோக்கோல் (பருப்புக் கீரை ???!!) - நான் பார்த்ததே இல்லை...

தினத் தந்தியில் வரும் காய்கறி மார்க்கெட் நிலவரத்தில் அதன் பெயரும் விலையும் போட்டிருப்பார்கள்... அதை படித்ததோடு மட்டும் சரி....

:)

நன்றிகளுடன்
அசோக் குமார்

images
this is knol knol with keerai,
beetroot420.jpg
this is beetroot about which you have been giving the details about and recipe here, mr ashok try to post the pictures it helps many to follow the recipe well...sunkan
 
மிக்க நன்றி !!!

கண்டிப்பாக வரும் நூல்களில் படத்தையும் சேர்த்து இணைத்துக் கொடுக்கிறேன்....
:thumb:


நன்றிகளுடன்
அசோக் குமார்









[







QUOTE=sunkan;128971]
images
this is knol knol with keerai,
beetroot420.jpg
this is beetroot about which you have been giving the details about and recipe here, mr ashok try to post the pictures it helps many to follow the recipe well...sunkan[/QUOTE]
 
Status
Not open for further replies.
Back
Top