கணவன் மனைவி ஒற்றுமைக்கு எளிய வழிபாடு; பிரிந்த தம்பதியை சேர்க்கும் மந்திர பிரார்த்தனை!

தம்பதி ஒற்றுமையே மேலோங்கச் செய்வதற்கும் மேம்படச் செய்வதற்கும் வழிபாடுகள் பெரிதும் பக்கபலமாக இருக்கின்றன.

ஆலய வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் தம்பதி இடையே ஒற்றுமையை ஏற்படுத்த வல்லவை என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

இதேபோல், மந்திரங்களுக்கும் சக்தி உண்டு.

உரிய மந்திரங்களைச் சொல்லச் சொல்ல,தம்பதி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பரஸ்பரம் விட்டுக்கொடுக்கும் எண்ணம் வலுப்பெறும். அதையும் விட முக்கியமாக, பிரிந்த தம்பதி கூட ஒன்று சேருவார்கள் என்பது ஐதீகம்.

தினமும் அதிகாலையில் கிழக்கு முகமாக அமர்ந்து

''ஓம் சௌம் பார்வதி தேவி நமஹ''

என்று ஆத்மார்த்தமாக சொல்லி வாருங்கள். பூஜையறையில் அமர்ந்து சொல்லி வாருங்கள். 54 முறை அல்லது 108 முறை ஜபித்து வாருங்கள். இதேபோல்,

''ஓம் க்லீம் ஸ்ரீ ரதி தேவி சமேத ஸ்ரீ காமதேவாய நமஹ''

என்று மூன்று முறை ஜபித்து, பெண்கள் குங்குமத்தை இட்டுக்கொண்டு வாருங்கள்.

தம்பதி ஒற்றுமை மேலோங்கும். குடும்பத்தில் நிம்மதி பரவும். பிரிந்த தம்பதி விரைவில் ஒன்று சேருவார்கள்,

அதேபோல், கணவன் மனைவி ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் அர்த்தநாரீஸ்வரரை மனதால் வணங்குங்கள்.

அர்த்தநாரீஸ்வர மந்திரம் :

ஓம் ஹும் ஜும் சஹ
அர்த்தநாரீஸ்வர ரூபே
ஹ்ரீம் ஸ்வாஹா

இந்த மந்திரத்தை கணவன் அல்லது மனைவி இருவருமே சொல்லி வரலாம்.

விரைவில் தம்பதி இடையே இருந்து வந்த பிணக்குகள் தீரும்.

புரிந்துகொண்டு விட்டுக்கொடுப்பார்கள்.

ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வார்கள்.

பெண்கள் ஜபிக்க வேண்டிய மந்திரம் :

ஓம் க்லீம் காமதேவாய
ரதிநாதாய
மோகனாய
மம பதிம் மே வசமாநாய நமஹ

ஓம் க்லீம் காமதேவாய வித்மஹே
புஷ்பபாணாய தீமஹி
தந்நோ அநங்க ப்ரசோதயாத்

இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வாருங்கள்.

தாலிச்சரடில் குங்குமம் இட்டுக்கொண்டு அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்யுங்கள்.

விரைவில் தம்பதி ஒற்றுமை அதிகரிக்கும்.

குடும்பத்தில் இதுவரை இருந்த குழப்பங்களும் பிணக்குகளும் நீங்கும்,
 
Back
Top