கடைபிடி

Status
Not open for further replies.
சிங்கத்திடம் இருந்து ஒன்றையும்,
கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறு விஷயங்களையும் நாம் கற்று கொள்ள வேண்டும்

சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.

கொக்கு ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்து நிற்கும்,
அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன்,காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.

களைப்புற்றாலும் கழுதை தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டு பட்டிருக்கும். ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்

விடியற்காலை எழுதல்,
தைரியமாக சண்டையிடுதல்,
அவர் அவர்க்கு தேவையானவற்றை பிரித்து கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்

.
கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல்,நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல்

உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து
கற்று கொள்ள வேண்டும்.

எவன் ஒருவன்,மேலே சொன்ன இருபது விஷயங்களை கடைபிடிக்கிறானோ அவன் எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.




Varadha Rajan

Varadha Rajan
 
குடுமி பிடி (சரியான சொல்)
தவிடு பொடி (சரியான சொல்)

கடை பிடி ( தவறான சொல்)
கடைப் பிடி (சரியான சொல்!)

சந்தியைச் சிறிதும் சிந்தியாமல்
சந்தியில் விட்டுவிட்டது ஏனோ?
 
நாம் சரியாகப் பேசும் போது நமக்கே தெரியும் எங்கெங்கு

க் , ச், ட், த் , ப், ம் போன்ற எழுத்துக்கள் வர வேண்டும்
அல்லது அவைகள் வர வேண்டாம் என்று!
 
ரொம்ப சரி மேடம்.திருத்திக்கொள்கிரேன்

மிக்க நன்றி
 


ரொம்ப சரி மேடம்.


"திருத்திக் கொள்கிறேன்"

திருத்திக்கொள்கிரேன்


மிக்க நன்றி

நிறையத் திருத்திக் கொள்ள வேண்டும் போலிருக்கிறதே!
 
என்ன செய்வது நான் தமிழ் படிக்கவில்லையே.ஆகையால்தான் இம்மாதிரி தவறுகள் ஏற்படுகின்றன. இதையும் கொஞ்சம் விவரியும்.குடிமி பிடி- இதில் சந்தி ப் கிடையாதா.அதைப்போல தவிடு பொடி யில் சந்தி ப் கிடையாதா.திருத்திகொள்கிறேன் என்ற சொல்லில் றே விற்கும் ரே விற்கும் ஏன் எதற்கு அந்த வித்தியாசம் இதைப்பற்றி தாங்கள் tuition எடுக்கவேண்டும்போல் தெரிகிறது.இந்த டெக்ஸ்ட்டிலும் பல தவறுகளை நீங்கள் குறிப்பிடலாம்.மன்னிக்கவும்
 
என்ன செய்வது நான் தமிழ் படிக்கவில்லையே.ஆகையால்தான் இம்மாதிரி தவறுகள் ஏற்படுகின்றன. இதையும் கொஞ்சம் விவரியும்.குடிமி பிடி- இதில் சந்தி ப்கிடையாதா.அதைப்போல தவிடு பொடி யில் சந்தி ப் கிடையாதா.திருத்திகொள்கிறேன் என்ற சொல்லில் றே விற்கும் ரே விற்கும் ஏன் எதற்கு அந்த வித்தியாசம் இதைப்பற்றி தாங்கள் tuition எடுக்கவேண்டும்போல் தெரிகிறது.இந்த டெக்ஸ்ட்டிலும் பல தவறுகளை நீங்கள் குறிப்பிடலாம்.மன்னிக்கவும்

தாமதம் ஆனாலும் பரவாயில்லை - எதையும்

நாமாக வேண்டாம் என்று சொல்லாத வரை!



( meaning "Better late than never!)


படியுங்கள் நிறைய நல்ல தமிழ்ப் புத்தகங்களை.

சோ காவின் ஃ பேஸ் புக் கவிதைகளை அல்ல! :nono:


படிக்கும்போது கவனியுங்கள் தமிழ் எழுத்துக்களை;

விசேஷமாக "ல, ள, ழ, ர, ற, ந, ன, ண" இவைகளை.

(Practice makes perfect!)

There is no Pain without Gain. There is no Gain without Pain! :thumb:
 
Last edited:
சமீபத்தில் தினம் தினம் கேட்ட வசனம் இது!

".......................கொலை, கொல்லை, வலிப்பறி ........"

தமிழைக் கொலை செய்து, அதன் பெருமையைக் கொள்ளையடித்துக்

கொல்லையில் கொண்டு புதைக்க இந்த ஒரு வாக்கியமே போதும்! :frusty:
 

திருத்தி (ச்) சாெ( காெ )ல் ( ள் )லு ( ளு )ங்களேன்!
 
என்ன செய்வது நான் தமிழ் படிக்கவில்லையே.ஆகையால்தான் இம்மாதிரி தவறுகள் ஏற்படுகின்றன. இதையும் கொஞ்சம் விவரியும்.குடிமி பிடி- இதில் சந்தி ப்கிடையாதா.அதைப்போல தவிடு பொடி யில் சந்தி ப் கிடையாதா.திருத்திகொள்கிறேன் என்ற சொல்லில் றே விற்கும் ரே விற்கும் ஏன் எதற்கு அந்த வித்தியாசம் இதைப்பற்றி தாங்கள் tuition எடுக்கவேண்டும்போல் தெரிகிறது.இந்த டெக்ஸ்ட்டிலும் பல தவறுகளை நீங்கள் குறிப்பிடலாம்.மன்னிக்கவும்

'குடுமிப் பிடி' என்னும் போது எங்கோ இறுக்குகின்றது. :whoo:

'தவிடுப் பொடி' என்னும் போது எங்கோ இடிக்கின்றது. :ballchain:

'கடை பிடி' என்றால் தொள தொள என்று லூசாக இருக்கிறது. :bowl:

'கடை'யும் 'பிடி'யும் தனித் தனியாக கழன்று ஓடிவிடுமோ என்பது போல!

நீங்கள் இது போல உணரவில்லையா???


 
அம்மணி இந்த வயதில் என்னால் படித்து தெரிந்துகொள்ளமுடியுமா.? முயற்சி உடையார் (சரியான வார்த்தையா?)இகழ்ச்சி அடையார் என்ற வாக்குப்படி என்னால் முடிந்த அளவு முயற்சிக்கிறேன். தங்களுடைய அறிவுரைக்கு மிக்க நன்றி.
 
என்ன செய்வது நான் தமிழ் படிக்கவில்லையே.ஆகையால்தான் இம்மாதிரி தவறுகள் ஏற்படுகின்றன. இதையும் கொஞ்சம் விவரியும்.குடிமி பிடி- இதில் சந்தி ப்கிடையாதா.அதைப்போல தவிடு பொடி யில் சந்தி ப் கிடையாதா.திருத்திகொள்கிறேன் என்ற சொல்லில் றே விற்கும் ரே விற்கும் ஏன் எதற்கு அந்த வித்தியாசம் இதைப்பற்றி தாங்கள் tuition எடுக்கவேண்டும்போல் தெரிகிறது.இந்த டெக்ஸ்ட்டிலும் பல தவறுகளை நீங்கள் குறிப்பிடலாம்.மன்னிக்கவும்

சாெற்குற்றம் - செய்யுள் / உரை நயம் கருதி மன்னிக்கபடும் - But never பாெருள் குற்றம் - நெற்றிக்கண் திறந்தாலும் - குற்றம்தான் - That is நக்கீரன் - I think Tamil Spell check software should be devloped to overcome this difficulty - continue with you wrting adventure in Tamil! with out சதி செய்யும் புணர்ச்சி விதி!
 
அடக் கடவுளே! மனிதனிடமிருந்து கற்றுக்கொள்ள ஒன்றுமே இல்லையோ?? :sad:
 
..............
படியுங்கள் நிறைய நல்ல தமிழ்ப் புத்தகங்களை.

சோ காவின் ஃ பேஸ் புக் கவிதைகளை அல்ல!

படிக்கும்போது கவனியுங்கள் தமிழ் எழுத்துக்களை;

விசேஷமாக "ல, ள, ழ, ர, ற, ந, ன, ண" இவைகளை. ........
ஐயா அவர்களுக்கு வரும் ஐயங்களின் வகையே வேறு! ;)

தாங்கள் மற்ற இழைகளைப் பார்க்காததால் அறியமாட்டீர்! :(

அது போகட்டும். பிழையின்றித் தமிழ் எழுதுவது எளிதா என்ன? :typing:
 
அடக் கடவுளே! மனிதனிடமிருந்து கற்றுக்கொள்ள ஒன்றுமே இல்லையோ?? :sad:
ஏன் இல்லை நிறைய இருக்கிறதே. பொய்சொல்லல், புறம் பேசுதல்,எமாற்டுதல்,பொண்டாட்டி பேச்சை கேட்டு பெற்றோர்களை புறக்கணித்தல்,மற்றும் பல தீய குணங்களை கடைபிடித்தல் இவை எல்லாம் மற்றவர்களை பார்த்து கடைப்பிடிக்கத்தான் வேண்டும்.கவலை படாதீர்.
 


மேலே கூறியவைகள் பித்ரு சாபத்திற்கு உட்பட்டவை. பித்ரு சாபம் என்றால் என்ன?


5) பித்ரு சாபம்:

முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்ப
வைப்பதும், பித்ரு சாபத்தை ஏற்படுத்தும்.

பித்ரு சாபம்
பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும்.
 
Status
Not open for further replies.
Back
Top