கடன் தொல்லை தீர்க்கும் நரசிம்ஹர் ருண விமோசன ஸ்தோத்திரம்

Maha52

Active member
கடன் தொல்லை தீர்க்கும் நரசிம்ஹர் ருண விமோசன ஸ்தோத்திரம்

1572103290110.png



கடன் தொல்லையால் அவதிபடுவோர் இந்த சுலோகத்தை தினமும் காலை மாலை இருவேளையும் சிரத்தையுடன் பாராயணம் செய்தால் பலன் கிடைக்கும்.

கடன் தொல்லையால் அவதிபடுவோர் அந்த கடன் தொல்லையில் இருந்துவிடுபடவும், வாழ்வில் மனநிம்மதி பெறவும், இந்த சுலோகத்தை காலை மாலை இருவேளையும் பகவான் மீது நம்பிக்கையுடன் நரசிம்ம பகவான் படத்தின் முன் அகல்விளக்கில் நெய்தீபம் ஏற்றி பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்து பின் பாலில் கல்கண்டு சேர்த்து பகவானுக்கு நைவேத்தியம் செய்து தீபாரதனை செய்து வரவும். இப்படி செய்து வந்தால் கடன் தொல்லையில் இருந்து விடுதலை பெறலாம்.

ஸ்ரீ ந்ருஸிம்ஹ விமோசன ஸ்தோத்திரம் :

தேவதாகார்ய ஸத்யர்த்தம் ஸபாஸ்தம்பம் ஸமுத்பம்

ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே

Read more at: https://www.maalaimalar.com/devotio...2017/12/01144316/1132063/narasimha-mantra.vpf.
-------------------------------------------------------

கடன் தீர்க்கும் ருண விமோசன ஸ்தோத்திரம்


Read more at: http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=12558
 
தீராத கடன் தொல்லையா? கவலை வேண்டாம். ருண விமோசன பிரதோஷ வழிபாடு செய்யுங்க!

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: இன்று பிரதோசமாகும். பொதுவாக செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷம் ருணவிமோசன பிரதோஷமாக அனுஷ்டிக்கப்படுகிறது. பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். ஸர்ப தோஷம் உட்பட எந்த தோஷமாக இருந்தாலும் நீங்கிவிடும். சிவனை தேவர்கள், மூவர்கள் வழிபடுவது ஒரு பிரதோஷ காலம். உலகை காப்பதற்க்காக ஆலகால விஷத்தை அருந்திய காலம். நந்தி பகவான் அன்றைய தினத்தில் தனது தவத்தை துறந்துவிட்டு மக்களுக்காக எல்லாவற்றையும் செய்யக்கூடியவர். அதனால்தான் பிரதோஷம் அன்று சிலர் நந்தியினுடைய காதில் தங்கள் ப்ரார்தனைகளை ரகசியமாக சொல்வார்கள்.



1572103745125.png


பிரதோஷ தினத்தன்று அபிஷேகம் பொதுவாக பிரதோஷம் அன்று கறந்த பசும்பால் கொடுத்து வழிபட்டால் நல்லது. ஏனென்றால் சிவன் அபிஷேகப் பிரியன். அதனால் கறந்த பசும்பால் கொடுக்கலாம். இல்லையென்றால் இளநீர் வாங்கித் தரலாம். ஏனென்றால் சிவனை அபிஷேகப் பொருளாலும், அர்ச்சனைப் பொருளாலும் வணங்க வேண்டும். இறைவன் எப்பொழுதுமே இயற்கையை விரும்பக்கூடியவன். இயற்கையான வில்வ இலை. அதற்கடுத்து பசும்பால். இது எல்லாவற்றையும் விட தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் சகல தோஷங்களும், அதாவது ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்று நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் கடைபிடித்தால் எல்லா வகைகளிலும் சிறப்பாக இருக்கும்.

கடன் பிரச்சினை தீரும் செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷம் ருண விமோசன பிரதோஷம் ஆகும். ருணம் என்பது கடனை குறிக்க கூடியது. வேறு விதமாக கூறினால் தோஷங்களை குறிக்கும் எனலாம். பணமாக பெறப்படும் கடன் மட்டுமல்ல. தேவ, பூத,பித்ரு,ஆசார்ய, மனுஷ்ய தோஷம் என்ற வகைப்படும் இவைகளை களைய, இந்நாளில் நந்தியெம்பெருமானை வேண்டி வணங்கி அருகம்புல் மாலைசாற்றி, நெய் தீபம் ஏற்றி,பின் பிரதோஷ வேளையில் சிவபெருமானை பிரதோஷ மூர்த்தியாய் தரிசிப்பது மேற்கூறிய அனைத்து தோஷங்களில் இருந்தும் விடுதலை பெறலாம். கிடைத்தற்கரிய நாள் இது.

Read more at: https://tamil.oneindia.com/astrolog...ear-debts/articlecontent-pf265738-297441.html
 
Back
Top