ஓர் விண்ணப்பம்

Status
Not open for further replies.
ஓர் விண்ணப்பம்

பெரு மதிப்பிக்குரிய அங்கத்தினர்களுக்கு :
அடியேனுக்கு 2 பாடல்கள் முழுமையாக தெரியவில்லை. அவைகளின் விளக்கங்கள் மாத்திரம் தெரியும். அவைகளில்
ஒன்று 1. பனைமரத்தின் விதை பெரியதாக இருப்பினும் அதன் மரம் நீண்டு உயர்ந்து வளர்திருப்பினும் ஒருவர் இருக்க நிழல் இருக்காதாம்.
இந்த பாடலின் கடைசி வரி " ஒருவரிருக்க நிழலாகாதே"
2. ஆல மர பழத்தின் உள்ள விதை மிக சிறியதாக இருப்பினும் அது வளர்ந்து பெரிய ஆல மரமாகி படர்ந்து தனது காலாட்படையுடன் அரசன் அதன் கீழ் தங்கிருக்க நிழல் கொடுக்குமாம்.இதன் கடைசி வரி
"காலாட்படையுடன் மன்னன் இருக்க நிழலாகும்மே"

இந்த இரு அல்லது ஒரு பாடல்கள் தெரிந்தவர்கள் அவை யாரால் எந்த தலைப்பில் பாடப்பட்டவை என்பதை தெரிவிக்க கோருகிறேன் .
 
வெற்றி வேற்கை/நறுந்தொகை யில் வரும் அந்த பொருள் பொதிந்த வரிகள்:

1. தேம்படு பனையின் திரள் பழத்தொரு விதை
வானுற வோங்கி வளம்பெற வளரினும்
ஒருவர்க்கிருக்க நிழலாகாதே

2. தெள்ளிய ஆலின் சிறுபழத்தொரு விதை
தெண்ணீர்க்கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதேயாயினும் அண்ணல் யானை
அணிதேர்புரவி ஆட்பெரும்படையொடு
மன்னர்க்கிருக்க நிழலாகும்மே.

3. பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்
சிறியோரெல்லாம் சிறியரும் அல்லர்

பாடியவர் அதிவீரராம பாண்டியர்.
 
Last edited:
Status
Not open for further replies.
Back
Top