ஓர் ஓவியக் கண்காட்சி
ஓர் ஓவியக் கண்காட்சி நடத்தப்பட்டது. சரியாக நூறு ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன. அழகான இயற்கைக் காட்சிகள் ஏராளம். பெண்மையின் யவனத்தையும், குழந்தைகளின் குதூகலத்தையும் துல்லியமாகக் காட்சிப்படுத்தியிருந்தன பல ஓவியங்கள். தாஜ்மஹால் போன்ற மனித சாதனைகள் அபாரமாகத் தீட்டப்பட்டிருந்தன. ஆனால் அனைவரின் ஒட்டுமொத்த கவனத்தையும் கவர்ந்தது ஒரே ஓர் ஓவியம்.
பெண் இருந்தாளா அதில்? இல்லை. மழலை இருந்ததா? ஊஹூம். வனப்புமிகு பசுமைக் காடுகள்...? இல்லவே இல்லை.
பின் என்னதான் இருந்தது? விலை மதிப்பற்ற மனித உயிர்களைக் காவு வாங்கும் கொடிய கொலைகார ஆயுதம் தான் அது. கம்பீரமாக நின்று கொண்டிருந்தது பீரங்கி. அதற்கா இத்தனை வசீகரம்? அதற்கா இத்தனை கவர்ச்சி? ஆமாம். ஆனால் அது தனித்து இருந்ததினால் அல்ல, அதன் வாயில் ஒரு புறா கூடு கட்டி தனது குஞ்சுகளுடன் அமர்ந்திருந்ததினால்!