ஓம் ஸ்ரீ ராமாய துப்4யம் நம :
வைகுண்டே2 நக3ரே ஸுரத்3ருமதலே ஆனந்த3வரபராந்தரே
நானாரத்ன விநிர்மிதஸ்புடபடுப்ரகார ஸம்வேஷ்டிதே |
ஸௌதே4ந்தூ3 பலசேஷதல்பலலிதே நீலோத்பலாச்சா2தி3தே
பர்யங்கேச'யினம் ரமாதி3ஸஹிதம் ராமம் ப4ஜே தாரகம் || (9 )
வைகுண்ட நகரத்தில், கற்பக மரங்களின் தலத்தில், ஆனந்தகரமான பிராகார நடுவில், பற்பல ரத்தினங்களால் அமைக்கப்பட்ட பிராகாரத்தால் சூழப்பட்ட உப்பரிகையில், சந்திரகாந்தமணி மேடை மீது சேஷ சயனத்தால் சுந்தரமானதும், நீலோத்பல மலர்கள் பரப்பப்பட்டதுமான மஞ்சத்தில் சயனித்தவரும், லக்ஷ்மி முதலியவர்களுடன் இருப்பவரான தாரக ராமரை நான் சேவிக்கின்றேன்.
வைதே3ஹீயுதவாமபா4க3மதுலம் வந்தா3ருமந்தா3ரகம்
ராமம் ப்ரஸ்துத கீர்த்திவாஸித தருச்சா2யானுகாரிப்ரப4ம் |
வைதே3ஹீ குசகுங்குமாங்கித மகோரஸ்கம் மஹாபூ4ஷணம்
வேதாந்தைருபகீ3யமா நமஸ்க்ருத்ஸீதாஸமேதம் ப4ஜே || (10)
ஸீதா தேவியைத் தன் இடப் பக்கத்தில் கொண்டவர்; ஸாமியமில்லாதவர்; தன்னை நமஸ்கரிப்பவர்களுக்கு கற்பக விருக்ஷம் போன்றவர்; ஸ்துதிக்கப்பட்ட கீர்த்தியால் விருக்ஷத்தின் சோபையை அனுசரித்த காந்தியை உடையவர்; சீதையின் ஸ்தனங்களின் குங்குமக் குறியை உடைய அகன்ற மார்பை உடையவர்; அணிகலன்களால் அலங்கரிக்கப் பட்டவர்; உபநிஷத்துக்களால் கொண்டாடப் படுபவர்; ஸீதா ஸமேதர் ஆகிய ஸ்ரீ ராமனை நான் நமஸ்கரிக்கின்றேன்.