ஒரே தலத்தில் 22 புண்ணிய தீர்த்தங்கள்!

Status
Not open for further replies.
ஒரே தலத்தில் 22 புண்ணிய தீர்த்தங்கள்!

ஒரே தலத்தில் 22 புண்ணிய தீர்த்தங்கள்!

ராமபிரான் புண்ணிய தீர்த்ததில் நீராடி, சிவலிங்க பூஜை செய்து, பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட்ட தலம் ராமேஸ்வரம். இங்கு தான் 22 புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன.

TN_165502000000.jpg





22 புண்ணிய
தீர்த்தங்களும், நீராடினால் கிடைக்கும் பலன்களும்:


மகாலக்ஷ்மி தீர்த்தம் - சகல ஐஸ்வரியங்கள் பெருகும்


சாவித்திரி, காயத்ரி, சரஸ்வதி தீர்த்தங்கள் - சடங்குகளைச் செய்யாதவர்களும், சந்ததி இல்லாதவர்களும் நற்கதி பெறலாம்.


சங்கு தீர்த்தம் - நன்றி மறந்த பாவம் நீங்கும்.


சக்கர தீர்த்தம் - தீராதி நோயும் தீரும்.


சேது மாதவ தீர்த்தம் - செல்வம் கொழிக்கும்.


நள தீர்த்தம் - இறையருளைப் பெற்ற சொர்க்கத்தை அடையலாம்.


நீல தீர்த்தம் - யாகப் பலன் கிட்டும்.


கவாய தீர்த்தம் - மனவலிமை பெறலாம்.


கவாட்ச தீர்த்தம் - தேக ஆரோக்கியம் உண்டாகும்.


கந்தமான தீர்த்த - தரித்திரம் நீங்கும்


பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம் - பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்; பில்லி சூனியப் பிரச்சனைகள் விலகும்.


சந்திர தீர்த்தம் - கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.


சூரிய தீர்த்தம் - ஞானம் பெறலாம்.


சாத்யாம்ருத தீர்த்தம் - தேவதைகளில் கோபத்தில் இருந்து விடுபடலாம்.


சிவ தீர்த்தம் - சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம்.


சர்வ தீர்த்தம் - அனைத்து யோகங்களும் கைகூடும்


கயா, யமுனா மற்றும் கங்கா தீர்த்தங்கள் - பிறவிப்பயனை அடையலாம்.
இறுதியாக,


கோடி தீர்த்தம் - ஸ்ரீராமர், சிவலிங்க அபிஷேகத்துக்குப் பயன்படுத்திய தீர்த்தம் இது.

சிவனாரின் அருளையும் ஸ்ரீராமரின் அருளையும் பெற்றுப் பெருவாழ்வு வாழவைக்கும் மகா தீர்த்தம் இது.

இந்த 22 தீர்த்தங்களையும் தவிர, கடலிலேயே கலந்திருக்கிறது அக்னி தீர்த்தம். இதில் நீராடிவிட்டே ஆலய தரிசனத்துக்குச் செல்கிறார்கள் பக்தர்கள்.



22 Punitha theertham | Rameswaram | Ramanathapuram | ??? ???????? 22 ??????? ????????????!
 
Status
Not open for further replies.
Back
Top