ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு ஜோதிடம் அவசிய&

Given explanation Acceptable

  • Yes

    Votes: 0 0.0%
  • Somehow

    Votes: 0 0.0%

  • Total voters
    1
  • Poll closed .
Status
Not open for further replies.
ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு ஜோதிடம் அவசிய&

என்று ஒரு கேள்வியை கேட்டால் அதற்கான பதிலை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கலாம். தெரிந்த ஊர்களுக்குப் போகும்போது நாம் யாரிடமும் அந்த ஊருக்குப் போக வழி கேட்பதில்லை. அதுபோல் தெளிவான, யதார்த்தமான சிந்தனையோடு, நன்கு அனுபவம் உள்ள செயல்களில் ஈடுபடும்போது நமக்கு குழப்பம் வருவதில்லை. யதார்த்தமான சிந்தனை என்பது - நம் படிப்பிற்கும் அனுபவத்திற்கும் திறமைக்கும் ஏற்ற பணியையும் ஊதியத்தையும் நாடுவதுபோல் அனைத்து வகையிலும் நம் சக்தி சாமர்த்தியம் சூழ்நிலைகளுக்கேற்ற பலனையே நாடி செயல்புரியும்போது குழப்பம் ஏற்படாது. எந்த ஒரு வகையிலும் நம் நிலைமையை மீறிய விஷயங்களில் ஈடுபடும்போது குழப்பம் வருகிறது. குழப்பம் வரும்போது தெளிவு பெற பிறரின் அறிவை நாட வேண்டியுள்ளது. அந்த மற்றொருவர் நன்கறிந்த நண்பராய் இருந்தால் ‘இது உன் சக்திக்கு மீறிய செயல் யோசித்துச் செய் அல்லது செய்ய வேண்டாம்” என்று அறிவுரை கூறுவார். ஆசை அதிகமாகும்போது அப்படிப்பட்டவர்களின் அறிவுரையையும் ஏற்கும் எண்ணம் வராது. அந்த நிலையில் நம் பிறந்த நேர ஜாதகத்தில் என்ன பலன் இருக்கிறது என்று அறிந்து கொள்ள தோன்றுகிறது. இந்த நிலையில் உள்ள மனிதருக்கே ஜோதிடம் அவசியமாகிறது.

zodiac.jpg
ஜோதிடம் என்பது ஒரு அனுபவ அறிவு. வானத்தில் கருமேகங்கள் திரண்டிருந்து, குளிர்ச்சியான காற்று வீசுகிறதென்றால் எங்கோ அருகில் மழை பெய்துகொண்டிருக்கிறது, இங்கும் சிறிது நேரத்தில் பெய்யக்கூடும் என்பதை ஒருவன் அனுபவ அறிவினால் அறிகிறான்.
அதுபோலவே, ஜோதிட அறிவும். இந்த க்ரஹ அமைப்பில் பிறந்தவன் இந்த மனோபாவத்தில் செயல்படுவான், இன்னின்ன குணாதிசயங்களைக் கொண்டிருப்பான் என்பது அனுபவ பூர்வமாக உணரப்பட்டு பெரும்பான்மையோரால் ஒப்புக்கொள்ளப்பட்டு பின் அது விதியாக எழுதப்பட்டது. கால ஓட்டத்தில் அனுபவ ரீதியாக ஏற்பட்ட மாற்றங்கள் விதிகளில் புகுத்தப்பட்டு ஒரு கால கட்டத்தில் தெய்வ அனுக்ரஹத்துடன் விருப்பு வெறுப்பு - பாரபட்சமற்ற, சாதுர்யம் மிக்க, அற்பணிப்பு உணர்வுடன் கூடிய மஹான்கள் இந்த உலக மக்களின்பால் கருணைகொண்டு ஜோதிட சாஸ்திரத்தை உருவாக்கி அளித்தனர்.
ஜோதிடத்தில் வரும் 27 நக்ஷத்திரங்களுக்கும் வானத்தில் காணப்படும் நக்ஷத்திரங்களுக்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை. ஒரு ராசியில் 13.33 பங்குள்ள பிரிவுக்கு நக்ஷத்திரம் என்ற அளவீட்டை பயன்படுத்துகின்றனர்.
மிகப்பெரிய இந்திய நிலப்பரப்பை ஆளுவதற்கு எளிமை வேண்டி ஒத்த பல பண்புகளையுடைய ப்ரதேசத்தை மாநிலமாக, மாவட்டமாக, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என்று பல வகையாக பிரித்துக் கொள்வதுபோல, உருண்டையான உலகப் பரப்பை 12 சம பாகங்களாகப் பிரித்து ஒவ்வொன்றையும் ஒரு ராசி என்றும் மேலும் அதை நக்ஷத்திரம், பாதம், நவாம்சம், தசாம்சம், துவாதசாம்சம் என்று பல கூறுகளாக பிரித்துக்கொள்ளும்போது சிறு பகுதியைக்கொண்டு அறியப்படும் தகவல்கள் துல்லியத்தன்மை உடையனவாகவும், பெரும் பகுதியைக் கொண்டு அறியப்படும் தகவல்கள் துல்லியமற்றதாகவும் உள்ளன. எனவேதான் ராசியை மட்டும் வைத்துக்கொண்டு பொதுப்படையாக பலன்கள் கூறப்படும்போது பலன்கள் பெரும்பகுதி துல்லியமற்றதாக அமைகிறது.

 
Status
Not open for further replies.
Back
Top