• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

ஒரு பெங்களூர் அனுபவங்கள்....

Status
Not open for further replies.

kk4646

Active member
ஒரு பெங்களூர் அனுபவங்கள்....

1. பெங்களூருவில் நீங்க ரோட்டில் ஒரு கல்லை குத்துமதிப்பா விட்டு எறிஞ்சீங்கனா ஒண்ணு அது ஒரு நாயை அடிக்கும், இல்லைன்னா ஒரு சாப்ட்வேர் எஞ்சினியர் மண்டையை உடைக்கும். ஏன்னா, அந்தளவுக்கு ரெண்டு பேருமே அங்க ஜாஸ்தி....

2. இந்தியாவில் லெப்ட் சைட்ல மட்டும்தான் டிரைவ் பண்ணனும் அப்படிங்கறது விதி. ஆனா, பெங்களூரில் நீங்க லெப்ட் ஆப் தி ரோட்டில் மட்டும்தான் டிரைவ் பண்ண முடியும்...

3. பெங்களூருவில் ஒரு ஆக்சிடெண்டை ஏற்படுத்தனும்னா டிராபிக் ரூல்ஸை மட்டும் பாலோ பண்ணினா போதும்

4. பெங்களூருவில் வீடு பார்க்கப் போன ஒரு பையன் தான் 'இன்போசிஸ்'ல வேலை பார்க்கறேனு சொல்லியும் அவனுக்கு வீடு கிடைக்கலை. ஏன்னா,வீட்டுக்காரங்க அது ஒரு பஸ் கம்பெனினு நினைச்சுட்டாங்க. பெங்களூரில் இன்போசிஸ் பஸ்தான் கவர்மெண்ட் பஸ்ஸைவிட அதிகம். அதான், அவங்களே கன்ப்யூஸ் ஆய்ட்டாங்க பாவம்...

5. பெங்களூருவில் முதல் பிசினஸே பேயிங் கெஸ்டிங் என்னும் ஹாஸ்டல்கள்தான். ஐடி கூட ரெண்டாவது இடத்தில்தான் இருக்கு.

6. பெங்களூரில் யாராவது மழை பெய்யுதுனு சொன்னாங்கனா எந்த ஏரியால, எந்த குறுக்குச் சந்தில், எந்த ரோட்டில் பெய்யுதுனு கேட்க மறக்காதீங்க. அந்த அளவுக்கு ஆங்காங்கே.. அப்பப்ப. அளவளவா பெய்யுது

7. ஒரு பெங்களூரு வாசி டிராபிக் லைட்டை பார்த்து வண்டியை நிறுத்தினா மத்தவங்களும் அதுக்கு பின்னாடியே, நிறுத்திடுவாங்க. ஏன்னா, அவர் போலீஸ்காரர்கிட்ட மாட்டிகிட்டார், நாம மாட்டக் கூடாதுனு நினைச்சுதான். டிராபிக் சிக்னலில் நின்றால் கூட போலீஸ் புடிக்கிறாங்கப்பா..

8. பெங்களூருவில் மட்டும்தான் தூரத்தினை அந்தந்த நேரத்தினைப் பொறுத்து கணக்கில் எடுத்துக்கறாங்க. காலை 7 மணிக்கா அப்ப 10 கிலோ மீட்டரை அரை மணி நேரத்தில் கடக்கலாம்.. அதுவே ராத்திரி 7 மணியா.. ஒரு - 2 மணி நேரமாகும்...

9. ரிக்‌ஷா டிரைவர்ல இருந்து, சாதாரண பொட்டிக் கடைக்காரர் வரை உங்களுக்கு 1 லட்சம் சம்பளம்னு நினைப்பாங்க நீங்க ஐ.டில வேலை பார்க்கறேனு சொன்னீங்கனா....

10. பெங்களூருவில் இருக்கும் 100 க்கு 90 எஞ்சினியர்கள் ஒண்ணு கடும் மன உளைச்சலில் இருப்பாங்க இல்லை பாய் ப்ரெண்ட், கேர்ள் ப்ரெண்ட் கூட இருப்பாங்க (கழுதை, ரெண்டும் ஒண்ணுதான்னு பலருக்கும் புரிவதில்லை).

11. பிரேக்கினை விட பெங்களூரில் ஹார்ன் யூஸ் பண்ற பஸ் டிரைவர்கள்தான் அதிகம்...

12. கன்னட மொழியினை விட "சி" மொழி தெரிந்தவர்களை அதிகம் கொண்ட நகரம். பெங்களூரின் யுனிவெர்சல் பதில் எப்பவுமே, "கொஞ்சம் அட்ஜஸ்ட் மாடி"...



Tvk
 
Sir,

It is Bengaluru, the silicon valley of India, our neighbouring State. We are dependant on Cauvery water. "கொஞ்சம் அட்ஜஸ்ட் மாடி"... :-)
 
Status
Not open for further replies.
Back
Top