• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஒன்றுக்கும் உதவாத உதிய மரமே

Status
Not open for further replies.
ஒன்றுக்கும் உதவாத உதிய மரமே

ஒன்றுக்கும் உதவாத உதிய மரமே


தஞ்சை, நவ.27 (1977): தஞ்சை மாவட்டத்தில் புயல் வீசி மரங்கள் சாய்ந்தன. இவைகள் சாலைப் போக்குவரத்தைப் பாதித்ததால், சாலையின் குறுக்கே விழுந்து கிடக்கும் மரங்களை பொது மக்கள் இலவசமாக எடுத்துச் செல்லலாம் என்று கலெக்டர் அறிவித்தார். உடனே ஏழை எளிய மக்கள் அவைகளை வெட்டி வீட்டுக்குக் கொண்டு சென்றனர். சில அரசு ஊழியர்கள் பணி முடிந்த்ததும் ஒரே வெட்டில் வெட்டக் கூடிய உதிய மரங்களை வெட்டி, சைக்கிளின் பின்னால் பெரிய மரங்களாக வைத்துச் சென்றனர். அவர்களை சட்ட மன்ற கொறடா துரை கோவிந்தராஜன் வழிமறித்து ஏன் பெரிய மரங்களை கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டார். அவர்கள் ,”கலெக்டர் அறிவித்ததால் நாங்கள் எடுத்துச் செல்கிறோம்” என்று பதில் சொன்னார்கள். உடனே கொறடா, புளிய மரக் கிளைகளை எடுத்துச் சென்றாலும் அடுப்பு எரிக்க உதவும். இவைகள் உதிய மரங்கள். அடுப்பில் வைதாலும் எரியாது, புகை தான் வரும், ஒன்றுக்கும் உபயோகம் இல்லாதவர்களை “ ஒன்றுக்கும் உதவாத உதிய மரமே” என்று கிராமங்களில் சொல்லுவதை நீங்கள் கேட்டதில்லையா என்றவுடன் அவர்கள் வெட்கமடைந்து அந்த பெரிய மரங்களை சாலை ஓரமாக போட்டுவிட்டுச் சென்றனர். (29-11-1977 தினமணி செய்தியின் சுருக்கம்).

உதிய மரமும் ஒதிய மரமும் ஒன்றும் என்று சொல்லுவார்கள். ஆனால் இரண்டுக்கும் வெவ்வேறு தாவரவியல் பெயர்கள் கொடுக்கப்பட்டிருப்பதால் அது சரியா என்று சொல்ல முடியவில்லை.

உதிய மரம் உத்தரம் செய்யக்கூட பயன்படாது என்று கிராமப்புறத்தில் பழமொழி உள்ளத்.. எதற்கும் ஆகாத ஆட்களை, ஆள் உதுயமரம் போல வளந்திருக்கானே தவிர ஒரு பிரயோஜனமும் இல்லை என்று அப்பா, அம்மாக்கள் அலுத்துக்கொள்வதையும் பார்க்கலாம்.
ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ? (பழமொழி)

உடம்பைக் கடம்பால் அடி

katampa-tree.jpg

மதுரை மீனாட்சி கோவிலும் கடம்ப மரமும்

கடம்ப மரம் உடலுக்கு நன்மை பயக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. உடம்பைக் கடம்பால அடி என்ற பழமொழி இதற்குச் சான்று. மதுரை நகரத்தைக் கட்டுவதற்கு முன் அந்த இடம் ஒரு பெரிய கடம்பவனக் காடாக இருந்தது. ஒரு நாள் இரவில் தனஞ்செயன் என்ற வணிகன் அக்காட்டு வழியே செல்கையில் இரவு நேரத்தில் அதிசய ஒளியைக் கண்டான். இந்திராதி தேவர்கள் காட்டின் நடுவே இருந்த சிவலிங்கத்துக்குப் பூஜை செய்வதைப் பார்த்து மறுநாள் பாண்டிய மன்னனுக்கு அறிவிக்கவே அங்கே கோவில் கட்டினான் என்று ஸ்தல புராணம் கூறுகிறது. இன்றும் மதுரை மீனாட்சி கோவிலில் காய்ந்து போன ஒரு கடம்ப மரத்தை வேலி கட்டி பாதுகாத்து வருகின்றனர்.

(என் பாட்டி கடம்ப மரத்தால் செய்யப்பட்ட கட்டிலில் படுத்து உறங்குவாள். அவள் இறுதி மூச்சு வரை நோய் நொடி இல்லாமல் வாழ்ந்தாள். நாங்கள் எனக்குத்தான இறுதிக் காலத்தில் இந்த கட்டில் சொந்தம் என்று சகோதரர்களுக்குள் “ஜோக்” அடித்துக் கொள்வோம்! அக்கட்டில் இன்னும் மதுரையில் இருக்கிறது.)
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

  • For rent 2BHK APT WANTED.
    2BHK APT wanted.
    • rckappu (+0 /0 /-0)
    • Updated:
  • Wanted Chanting class.
    Sloka chanting teacher wanted.
    • rckappu (+0 /0 /-0)
    • Updated:
  • Announcement Hobby Classes.
    Hobby art classes are conducted by an experienced senior lady for high school children and adult...
    • rckappu (+0 /0 /-0)
    • Updated:
  • Wanted Shan
    Required female Brahmin cook to prepare lunch and dinner for 2 people
    • Bsmugan (+0 /0 /-0)
    • Updated:
    • Expires
  • For rent Shanmuganathan
    3BHK INDEPENDENT HOUSE IN NEELANKARI
    • Bsmugan (+0 /0 /-0)
    • Updated:
    • Expires
Back
Top