• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

ஐப்பசி மாத பண்டிகைகள்.

Status
Not open for further replies.

kgopalan

Active member
ஐப்பசி மாத பண்டிகைகள்.

ஐப்பசி மாத பண்டிகைகள்.

16-10-2014 ராதா ஜயந்தி.
கண்ணன் பிறந்த அடுத்த மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமியில் விசாக நக்ஷத்திரத்தில் பானுகோபர் கீர்த்திகா தேவிக்கு ப்ருந்தாவனம் கோவர்த்தன் அருகே பர்ஸானா (வ்ருஷ பானுபுரி) என்ற கிராமத்தில் உதித்தவள் ராதா.

தேவீ பாகவதம் கணேச ஜனனி, துர்கா, ராதா, லக்ஷிமி, ஸரஸ்வதி, ஸாவித்ரீ ச ஸ்ருஷ்டி விதெள ப்ரக்ருதி: பஞ்சதா ஸ்ம்ருத: என்று ராதையை பஞ்ச ப்ர்க்ருதிகளுக்குள் ஒன்றாக துர்கா, லக்ஷ்மி, ஸரஸ்வதியுடன் ராதை, ஸாவித்ரி, ஆகியோரையும் சேர்த்து ஐந்தாக கூறுகிறது.

மேலும் ராத்னோதி ஸகலான் காமான் தஸ்மாத் ராதேதி கீர்த்திதா: என்று அனைத்து விருப்பத்தையும் பூர்த்தி செய்வதாலும் ராதா என்று கூறப்படுகிறாள். ..ஶ்ரீ ராதே பிறந்த இந்நன்ணாளில் நாமும் ராதே க்ருஷ்ணா ராதே க்ருஷ்ணா என்று பகவன் நாமாவை சொல்வோம்.

வைகாசி மாதம் விசாக நக்ஷத்திரம் பெளர்ணமி அன்றே ராதைக்கும் கண்ணனுக்கும் ப்ருந்தாவனத்தில் பாண்டீர வனத்தில் ப்ருஹ்மா முன்னின்று கல்யானம் செய்வித்தார் என்று கர்க ஸம்ஹிதையும் ப்ருஹ்ம வைவர்த்த புராணமும் கூறுகிறது.

ஶ்ரீ ராதாயை ஸ்வாஹா என்பது ஆறு அக்ஷரம் கொண்டது. ராதையின் பூஜை இல்லாமல் க்ருஷ்ணர் பூஜை பயன் தராது .ராதனம் என்றால் பேறுகளை சித்திக்க செய்வது என்று அர்த்தம். பக்தர்களுக்கு பேறுகளை அளிப்பதால் ராதா என்று வழங்க படுகிறாள்.

பரமேஸ்வரியின் அம்சம். ஒரு கலசத்தில் ராதிகா தேவியை தியானித்து 16 உபசார பூஜைகள் செய்ய வேண்டும். அஷ்ட திக் பாலகர்கள் பூஜை செய்ய வேண்டும். பிறகு ப்ரதக்ஷிணமாக கிழக்கு முதல் ஈசான்யம் வரை எட்டு

திக்குகளிலும் மாலாவதி, மாதவி, ரத்னமாலை, சுசீலகை, சசிகலை, பாரிஜாதை, பராவதி, பிரியகாரணி ஆகியவர்களையும் அவர்களுக்கு வெளிப்பக்கத்திலும், புறம்பிலும் பிரமன் முதலிய திக்பாலகர்களையும், வஜ்ரம்

முதலான ஆயுதங்களையும் போற்றி பூஜிக்க வேண்டும். ஸஹஸ்ரநாம அர்ச்சனை, ராஜ உபசாரம் செய்ய வேண்டும். ராதா மந்திரத்தை ஆயிரம் உரு ஜபிக்க வேண்டும். கார்த்திகை மாதத்தில் பெளர்ணமியில் ராதை பிறந்த விழாவை கொண்டாட வேண்டும். 6-12-2014.

ராதிகா தேவி மகிழக் கூடிய ஸ்தோத்ரம்
.
நமஸ்தே பரமேஸாநி ராஸ மண்டல வாஸிநி ராஸேஸ்வரி நமஸ்தேயஸ்து க்ருஷ்ண ப்ராணாதிகப்ரியே;
நமஸ்த்ரைலோக்ய ஜநநி ப்ரஸீத கருணார்ணவே. பிரஹ்ம விஷ்ண்வாதி பிர்தேவைர் வந்தியமான பதாம் புஜே

நம: ஸரஸ்வதிரூபே நம: ஸாவித்ரீ சங்கரீ கங்கா பத்மாவதி ரூபே சஷ்டி மங்கள சண்டிகே, நமஸ்தே துளஸி ரூபே ,நமோ லக்ஷ்மி ஸ்வரூபிணி

நமோ துர்கே பகவதீ நமஸ்தே ஸர்வரூபிணி மூலப்ரக்ருதி ரூபாந்த்வாம் பஜாம: கருணார்னவாம் ஸம்ஸார ஸாகராதஸ் மாதுத்தராம தயாம் குரு.

இந்த துதியை தினமும் மூன்று தடவை ராதிகாவை தியானித்து ஓத வேண்டும். என்கிறது தேவி பாகவதம். ஒன்பதாவது ஸ்கந்தம்.

20-10-2014.கோவத்ஸ த்வாதஸி.
ஐப்பசி மாதம் க்ருஷ்ண பக்ஷ த்வாதசிக்கு கோவத்ஸ த்வாதசி என்று பெயர்.

இன்று கன்று குட்டியுடன் கூடிய பசுவை பூஜை செய வேண்டும். பசுவை குளிப்பாட்டி சந்தனம் புஷ்பங்களால் அலங்கரித்து வைக்கோல், புல் முதலானவற்றை தந்து விரிவாக பூஜை செய்ய வேண்டும். இன்று பால் கறக்காமல் கன்றுகுட்டியை இஷ்டப்படி பால் குடிக்க விட வேன்டும்
.
கோக்ஷீரம், கோ க்ருதம், சைவ ததி தக்ரம் ச வர்ஜயேத் ( நிர்ணய சிந்து-147)

· என்பதாக இன்று ஒரு நாள் மட்டும் பசும்பால், பசும்தயிர், பசுமோர், பசு நெய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
இந்த ஸ்லோகம் சொல்லி பசுமாட்டிற்கு சாப்பிட புல் தர வேண்டும்.
ஸுரபி த்வம் ஜகந்மாதர் தேவி விஷ்ணுபதே ஸ்திதா ஸர்வ தேவ மயே க்ராஸம் மயா தத்தம் இமம் க்ரஸ

இந்த ஸ்லோகம் சொல்லி பசுமாட்டை ப்ரார்தித்து கொள்ளவும். ஸர்வ தேவ மயே தேவி ஸர்வதேவைஸ்ச ஸத்க்ருதா மாதர் மமாபிலஷிதம் ஸ பலம் குரு நந்தினி..

பசு மாட்டை கழுத்து பகுதியை சொறிந்து கொடுக்கலாம் .பசு மாட்டை நமஸ்காரமாவது செய்யலாம்.. இதனால் குடும்பத்தில் மங்களமும் அழியா செல்வமும் ஏற்படும்..

இந்திரன் காமதேனுவை தோத்தரித்த ஸ்தோத்ரம்.. தேவி பாகவதம் ஸ்காந்தம் 9.

நமோ தேவ்யை, மஹா தேவ்யை ஸுரப்யைஸ்ச நமோ நம:
கவாம் பீஜஸ்வரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே
நமோ ராதா ப்ரியாயைஸ்ச பத்மஸாயை நமோ நம:

நம: க்ருஷ்ண ப்ரியாயைஸ் ச கவாம் மாத்ரே நமோ நம:
கல்ப வ்ருக்ஷ்ஸ்வ ரூபாயை ஸர்வேஷாம் ஸததம்பரே
க்ஷீர தாயை தன தாயை புத்தி தாயை நமோ நம:

ஸுபாயைஸ்ச ஸு பத்ராயை கோ ப்ரதாயை நமோ நம:
யஸோதாயை கீர்த்திதாயை தர்மதாயை நமோ நம:

· ஶ்ரீ சுரப்யை நம: எனும் மூல மந்திர ஜபம், பூஜை காமதேனுவிற்கு செய்ய வேண்டும்.. பசுக்களுக்கு அதிஷ்டானமானவளும் பசுக்களை முதலில் பெற்றவளும் முக்கியமானவளும் கோ லோகத்தில் படைப்புக்குமுன்
·
· பிறந்தவளூமான சுரபியை மாலையில் தீபத்தோடு பூஜிக்க வேண்டும்..
· மறுநாள் முற்பகலில் தீபத்தோடு பூஜிக்க வேண்டும்.


21-10-2014 நோயை விரட்டும் யம தீபம்.
ஆஸ்வினஸ் யாஸிதே பக்ஷே த்ரயோதஸ்யாம் நிசாமுகே யம தீபம் பஹிர்தத்யாத் அப ம்ருத்யு விநஸ்யதி. ஆஸ்வின மாதம் தீபாவளிக்கு முன்பு வரும் த்ரயோதசிக்கு யம தீப த்ரயோதசி என்று பெயர்.

இன்று மாலை சூர்ய அஸ்தமனத்திற்கு பின் (5-45 மணிக்கு பின்). மண் அகலில் நல்ல எண்ணைய் விட்டு விளக்குகள் வீட்டுக்கு வெளியில் ஏற்றி வைத்தல் அறியாமல் செய்த பாபங்களையும் ம்ருத்யு பயத்தையும் போக்கும்.

ஸங்கல்பம்:-- மம ஸர்வாரிஷ்ட நிவ்ருத்தி பூர்வகம் அபம்ருத்யு நிவாரண த்வாரா யம ராஜ ப்ரீத்யர்த்தம் தீப தானம் கரிஷ்யே என்று சங்கல்பம் சொல்லி தான், தனது குழந்தைகள் என வீட்டில் எவ்வளவு நபர்கள்

இருக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் தலா ஒவ்வொரு மண் அகல் தீபம் அவர்களே ஏற்றி வைத்து ( தனது வீட்டு வாசலிலோ அல்லது பக்கத்தில் உள்ள ஆலயங்களிலோ) தீபத்தை நோக்கி நமஸ்காரம் செய்து ஒவ்வொருவரும் அவரவர் தீபத்தை நோக்கி கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி ப்ரார்த்தித்துக் கொள்ள வேண்டும்,.

ம்ருத்யுர் பாச தண்டாப்யாம் காலேந ச்யாமயா ஸஹ த்ர்யோதச்யாம் தீப தாநாத் ஸூர்யஜ: ப்ரீயதாம் மம.

இது வாஹன விபத்து நோய் முதலியவற்றால் ஏற்படும் அபம்ருத்யு எனும் தோஷத்தை போக்கடித்து வியாதியற்ற நீண்ட ஆயுளை தரும் என்கிறது ஸ்காந்த புராணம்.

பாசம் தண்டம் இவைகளை கைகளில் ஏந்திக்கொண்டு சியாமா தேவி மற்றும் கால தேவனுடன் ப்ரகாசிக்கும் ஸூர்ய தேவனின் புத்ரரான யம தர்ம ராஜாவானவர் , நான் செய்யும் இந்த த்ரயோதசி தீப தானத்தால் ஸந்தோஷ மடையட்டும் என ப்ரார்த்தித்துக் கொள்ளவும்.


21-10-2014:- தன்வந்திரி ஜயந்தி.
தேவர்களும் அஸுரர்களும் ஒன்று சேர்ந்து பாற்கடலை கடைந்த போது
ஹாலாஹாலம் எனு விஷம், காமதேனு, உச்சைஸ்ச்ரவஸ் எனும் குதிரை, ஐராவதம், பாரிஜாதம், அப்சர ஸ்த்ரீகள், மஹா லக்ஷிமி, முதலான

பலவும் ஒன்றன் பின் ஒன்றாக தோன்றின. அம்ருத கலசத்துடன் தன்வந்திரி பகவானும் தோன்றினார். . இவரே ஆயுர்வேத மருத்துவ ஸ்தாபகர்.. இன்று ஶ்ரீ தன்வந்திரி பகவானின் படம் வைத்து 16 உபசார பூஜை செய்வதால் ப்ரார்த்திப் பதால் தீராத அனைத்து வியாதிகளும் நீங்கும்..
 
21-10-2014 தீபாவளி- பின் இரவு ஸ்நானம்.
பூமாதேவியின் புதல்வன் சுசீலன் நரகம் செல்வதற்கு தேவையான அனைத்து அதர்ம செயல்களை செய்து நரகாஸுரன் என பெயர் பெற்றவன்.

ஒரு சிலர் அவன் தாய் பூமா தேவியை ( பல அரசர்கள் மாறி மாறி ஆக்ஷி செய்வதால்) துர்வ்ருத்தை எனப்பேச அதை கேட்டு கோபமடைந்த நரகாஸுரன்

அனைத்து பெண்களையும் ப்ராக்ஜோதிஷபுரம் எனும் தனது நகரத்தில் சிறையில் அடைத்து வைத்தான்.. .அதனால் அந்த பெண்கள் கஷ்டம் அனுபவித்தனர்.

மேலும் நரகாஸுரன் மஹா லக்ஷிமியை அபகரிக்க முற்பட்டான். மஹா லக்ஷ்மி அக்னியிலும், கங்கை நதியிலும் ப்ரவேசித்து விட்டாள். பிறகு பகவான் ஶ்ரீ க்ருஷ்ணர் ஆச்வயுஜ மாத க்ருஷ்ண பக்ஷ சதுர்தசியன்று

ப்ராஹ்ம முஹூர்தத்தில் நரகாஸுரனை கொன்றார். இன்று தான் அனைத்து பெண்களுக்கும் விடுதலை கிடைத்தது..

ஆகவே இன்று தீபத்தில் மஹா லக்ஷிமியை ஆவாஹனம் செய்து பூஜை செய்ய வேன்டும். அக்னி சம்பந்தப்பட்ட சூடேற்றப்பட்ட வெந்நீரில் ஸ்நானம் செய்ய வேண்டும்.

தைலேஷு லக்ஷ்மீர் தீபேஷு ததா தீர்த்தேஷூ ஸா பரா துஷ்டா வஸதி வைகுண்டா தாகத்ய ஸ்வயமேவ ஸா. என்கின்ற படி தீபாவளியன்று

மஹாலக்ஷிமி தானாகவே பூமிக்கு வந்து தீபச்சுடர், நல்லெண்ணய் தீர்த்தங்கள் ஆகியவற்றில் சந்தோஷத்தோடு வசிக்கிறாள்.

ஆச்வயுக் க்ருஷ்ண பக்ஷஸ்ய சதுர்தஸ்யாம் விதூதயே தில தைலேந கர்தவ்யம் ஸ்நானம் நரக பீருணா ( நிர்ணய ஸிந்து-147)

ஆஸ்வயுஜ மாத க்ருஷ்ண பக்ஷ சதுர்தசியன்று பின்னிரவில் சந்திரன் இருக்கும் போது நரக உபாதைகளிலிருந்தும், அனைத்து துன்பங்களினின்றும் விடுபட வேண்டும் என எண்ணுபவர்கள்

நல்லெண்ணய் தேய்த்து கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும்.. இன்று அதிகாலை சுமார் 4-30 மணிக்கும் முன்பாக அனைவரும் உடல் முழுவதும் சுத்தமான நல்லெண்ணய் தேய்த்துக்கொண்டு சுடுநீரில் ஸ்நானம் செய்ய வேண்டும்.

இன்று காலை 4 மணிக்கு எழுந்திருந்து பல் தேய்த்துவிட்டு ஸ்வாமி சன்னதியில் கோலம் போட்ட ஆசனத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து வயதான ஸுமங்கலி பெண்கள் மூலம் தலையில் நன்கு மிளகு,

வெற்றிலை, போட்டு காய்ச்சிய நல்லெண்ணய் வைக்க சொல்லி உடல் முழுவதும் தேய்த்துகொண்டு மந்திரம் சொல்லி நாயுருவி செடியால் அல்லது இலையால் தலையை மூன்று தடவை சுற்றி வாசலில் எறிந்து

விட்டு இலைகள் போட்டு கொதிக்க வைத்த வெந்நீரில் ஸ்நானம் செய்ய வேண்டும்.

பிறகு பெரியோர்கள் மூலம் ஆசீர்வாதம் செய்து தரச்சொல்லி அவர்களை நமஸ்கரித்து புதிய ஆடைகள் பெற்றுக்கொண்டு , உடுத்தி கொண்டு நெற்றிக்கு இட்டுக்கொண்டு ( ஸந்தியா வந்தனம், ஸமிதாதானம், தர்பணம்

ஒளபாஸனம், , தேவ பூஜை, முதலியவற்றை செய்து விட்டு) உறவினர்கள் ஆசி பெற்று ஆலயம் சென்று வந்து மதியம் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு , மாலையில் மஹாலக்ஷிமி பூஜை செய்து , தீபங்கள் வரிசை வரிசையாக நிறைய ஏற்றி வைத்து ஸந்தோஷமாக இருக்க வேண்டும்

தீபாவளி நாளுக்கு சாஸ்திரங்களில் அலக்ஷிமி நிர்ஹரண தினம் என்று பெயர். அதாவது சாஸ்திரங்களில் அபாமார்க்கம் என்னும் நாயுருவி

செடிக்கு ஏழ்மையை போக்கடிக்கும் சக்தியும், விரோதிகளை விலக்கு சக்தியும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அபாமார்க்க மதோ தும்பீம் ப்ர்புன்னாட மதாபராம் ப்ராம்யேத் ஸ்நான மத்யே து நரகஸ்ய க்ஷயாய வை.

அபாமார்கம் என்னும் நாயுருவி செடி அல்லது தும்பீம் எனப்படும் சுரைக்காய் கொடியை ஸ்நானம் செய்யும் போது தலையை மூன்று முறை சுற்றி தூக்கி எறிய வேண்டும்.

இதனால் நரக பயமும் , நரகத்திற்கு ஸமமான துக்கமும் நம்மை விட்டு விலகும். என்கிறது இந்த வாக்கியம்.

இதன்படி தீபாவளியன்று அதிகாலை நல்லெண்ணையால் ஸ்நானம் செய்யு முன்பாக நாயுருவி செடியை கையில் வைத்துக்கொண்டு
அபாமார்க லதே தேவி அபவர்க ப்ரதே சுபே அலக்ஷ்மீம் நாசய மே கே ஹே

ம்ருத்யும் வாரய வாரய போ ஸீதா லோஷ்ட ஸமாயுக்த ஸ
கண்ட க தளான்வித ஹர பாப மபாமார்க்கம் ப்ராம்யமாண: புந;புந: (நிர்ணய ஸிந்து 148).

என்னும் ஸ்லோகம் சொல்லி தலையை மூன்று தடவை நாயுருவி செடியால் சுற்றி வாசலில் போட்டு விட வேண்டும்.

பிறகு முறையாக முன் கூறியபடி நலெண்ணைய் தேய்த்து வெந்நீரில் ஸ்நானம் செய்து புது வஸ்த்ரம் அணிந்துகொண்டு தீபாவளி கொன்டாட வேண்டும். இதனால் –ஏழ்மை, துக்கம், விரோதிகள் விலகி லக்ஷிமி கடாக்ஷம் ஸுகம் ஏற்படும்.

தீபோத்ஸவ சதுர்தஸ்யாம் கார்யம் து யம தர்பணம் என்னும் வசனப்படி
தீபாவளியன்று யம தர்ம ராஜாவுக்கு தர்பணம் செய்ய வேண்டும். இன்று காலை ஸ்நானம் சந்தியா வந்தனம் முடித்துவிட்டு, காலை 7 மணிக்குள்

கிழக்கு நோக்கி அமர்ந்துகொண்டு ஆஸ்வயுஜ க்ருஷ்ன பக்ஷ சதுர்தசீ புண்ய காலே யமதர்பணம் கரிஷ்யே என்று ஸங்கல்பம் செய்து கொண்டு பூணல் வலம் மஞ்சள் கலந்த சோபன அக்ஷதையால் சுத்த ஜலத்தால் தர்பணம் செய்யவும். பூணல் இடம் கிடையாது. எள்ளு கிடையாது.

ஜீவத் பிதாபி குர்வீத தர்பணம் யம பீஷ்ம யோஹோ என்னும் வசனப்படி தந்தை இருப்பவர்கள் தந்தை இல்லாதவர்கள் எல்லோரும் இதை செய்ய வேண்டும்.

யமாய நம: யமம் தர்பயாமி; தர்மராஜாய நம: தர்மராஜம் தர்பயாமி; ம்ருத்யவே நம: ம்ருத்யும் தர்பயாமி[; அந்தகாய நம: அந்தகம் தர்பயாமி; வைவஸ்வதாய நம: வைவஸ்வதம் தர்பயாமி.; காலாய நம; காலம் தர்பயாமி;

ஸர்வபூத க்ஷயாய நம; ஸர்வபூத க்ஷயம் தர்பயாமி; ஒளதும்பராய நம; ஒளதும்பரம் தர்பயாமி; தத்னாய நம; தத்னம் தர்பயாமி; நீலாய நம: நீலம் தர்பயாமி: பரமேஷ்டிநே நம: பரமேஷ்டிநம் தர்பயாமி;

வ்ருகோதராய நம: வ்ருகோதரம் தர்பயாமி; சித்ராய நம: சித்ரம் தர்பயாமி;
சித்ர குப்தாய நம: சித்ரகுப்தம் தர்பயாமி;

யம தர்பணம் செய்துவிட்டு தெற்கு நோக்கி நின்று கொண்டு கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லவும்.

யமோ நிஹந்தா பித்ரு தர்ம ராஜோ வைவஸ்வதோ தண்டதரஸ்ச காலப்ரேதாதி ப்ரோதத்த க்ருதாந்த காரி க்ருதாந்த ஏதத் தசக்ருத் ஜபந்தி

நீல பர்வத சங்காச ருத்ர கோப ஸமுத்பவ காலதண்டதர, ஶ்ரீமன் வைவஸ்வத நமோஸ்துதே யம தர்மராஜாவை ப்ரார்தித்து கொள்ளவும்.

இதனால் பாபங்கள் விலகும், அகால மரணம் ஏற்படாது. எல்லா வியாதியும் விலகும். யம பயம் வராது.

தீபாவளி யன்று மாலையில் தீபம்.

தீபாவளி யன்று மாலையில் தனது வீட்டிலும் அருகிலுள்ள கோயில்களிலும் நான்கு திரி உள்ளதாக எண்ணய் விட்டு விளக்கேற்றி கீழ் கன்டவாறு ஸ்லோகம் சொல்லி ப்ரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

. இதனால் எப்போதும் ஸந்தோஷமாக இருப்பார்கள். நரக பயம் கிட்டாது. தத்தோ தீபஸ் சதுர்தஸ்யாம் நரக ப்ரீதயே மயா சதுர் வர்த்தி ஸமாயுக்த : ஸர்வ பாபாநுத்தயே. ( நிர்ணய ஸிந்து -141 ).

சதுர்தசியில் நான்கு திரியுடன் கூடிய தீபம் அனைத்து பாபங்களையும் விலக்கி நரக பயம் நீங்குவதற்காக என்னால் ஏற்றப்பட்டது.ஆகவே எனது பாபங்களை போக்கி நரக பயத்திலிருந்து என்னை காப்பாற்றுங்கள்.

என்னும் இந்த ஸ்லோகம் சொல்லி ப்ரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
 
லக்ஷ்மீ குபேர பூஜை.;-23-10-2014.
ப்ரதோஷ ஸமயே லக்ஷ்மீம் பூஜயித்வா தத: க்ரமாத் தீப வ்ருக்ஷாஸ்ச தாதவ்யா: சக்தியா தேவ க்ருஹேஷு ச ஸ்வலங்க்ருதேந போக்தவ்யம் ஸித வஸ்த்ரோப சோபினா.

இன்று மாலை சூரியன் மறையும் வேளையில் புத்தம் புது ஆடைகள் அணிந்து, ஆபரணங்கள் அணிந்து கொண்டு அஹம் ச்ருதி ஸ்ம்ருதி புராணோக்த பலாவாப்தி த்வாரா மஹாலக்ஷிமி ப்ராஸாத சித்தியர்த்தம்

ஸுக ராத்ர்யாம் மஹாலக்ஷ்மியா இந்த்ர குபேரயோஸ்ச பூஜனம் கரிஷ்யே. என்று சங்கலபம் சொல்லி ஶ்ரீ மஹாலக்ஷிமீயை தேவேந்திரன் குபேரன் கூட முறைப்படி படத்திலோ, விக்கிரஹத்திலோ கலசத்திலோ

ஆவாஹனம் செய்து ஸஹஸ்ரநாமம், அஷ்டோத்ரம் சொல்லி குறைந்த பக்ஷம் பதினாறு நெய் தீபங்கள் ஏற்றி வைத்து பூஜை செய்ய வேண்டும்.

மேலும் கணக்கு எழுத பயன்படுத்தபடும் பேனா பேப்பர் பென்சில் முதலியவற்றையும் ஒரு தாம்பாளத்தில் வைத்து அவற்றில் காளியையும் அத்துடன் அலுவலக கணக்குகள் எழுத பயன் படுத்த படும்

நோட்டுகளில் ஸரஸ்வதி தேவியையும் ஆவாஹனம் செய்து ஒம் இந்த்ராய நம: என்று சொல்லி இந்திரனையும், க்லீம் குபேராய நம: என்று குபேரனையும் பூஜை செய்ய வேண்டும்.

சக்கரை பொங்கல், பால் நிவேத்யம் செய்து உறவினர்களுடன் ஸந்தோஷமாக சாப்பிட வேண்டும்.

கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி ஶ்ரீ மஹாலக்ஷிமியை ப்ரார்தித்து கொள்ளலாம்.

விச்வரூபஸ்ய பார்யாஸி பத்மே பத்மாலயே சுபே மஹாலக்ஷிமி நமஸ்துப்யம் ஸுகராத்ரிம் குருஷ்வமே விஷ்ணோர் வக்ஷஸி பத்மே சகட்கே சக்ரே ததாம்பரே லக்ஷ்மி நித்யா தயாஸி த்வம் மயி நித்யா ததா பவ. நமஸ்தே ஸர்வ தேவாநாம் வரதாஸி ஹரிப்ரியே யாக திஸ் த்வத் ப்ரபன்னாநாம் ஸாமே பூயாத் த்வ தர்சனாத்.

இந்திர ப்ரார்த்தனை:--
விசித்ரை ராவதஸ்தாய பாஸ்வத் குளிச பாணயே பெளலோம்யாலி தாங்காய ஸஹஸ்ராக்ஷாய தே நம:

குபேர ப்ரார்த்தனை.
தனதாய நமஸ்துப்யம் நிதி பத்மாதி பாய ச பவந்து த்வத் ப்ரஸாதான் மே தனதான்யாதி ஸம்பத:.

ஹேமாத்ரி புத்தகம்:-- இவ்வாறு மஹா லக்ஷிமியை பூஜை செய்பவர்கள் வீட்டில் லக்ஷிமி கடாக்ஷம் தடங்கலின்றி நிலைக்கும் என்று கூறுகிறது.

கேதார கெளரி வ்ரதம். 3-10-2014 முதல் 23-10-2014 முடிய.

கேதாரேஸ்வரர் என்றால் சிவன். . கெளரி என்றால் பார்வதி. . பார்வதி பரமசிவனை கேதார கெளரி பூஜை செய்து நோன்பு அநுஷ்டிப்பதால் இதற்கு கேதார கெளரி வ்ரதம் என பெயர்.

புரட்டாசி மாதம் சுக்ல பக்ஷ தசமி திதி முதல் ஐப்பசி மாதம் க்ருஷ்ண பக்ஷம் சதுர்தசி அல்லது அமாவாசை வரையில் 21 நாட்கள் அநுஷ்டிக்க வேண்டு.ம்

முடியாதவர்கள் தீபாவளி அமாவாசை அன்றாவது அநுஷ்டிக்க வேண்டும்.
கெளதம மஹ ரிஷியால் இந்த வ்ருதம் உபதேசிக்கப்பட்டது.

இந்த வ்ருதம் செய்யும் பெண்மணிக்கும் அவரது கணவர் ,குழந்தைகளுக்கும் ஆயுள் அதிகரிக்கும். தீராத வியாதி விலகும். குடும்பத்தில் மங்களம் நிலவும். சிவனுக்கு செய்த அபசாரங்கள் விலகி நல்லெண்ணம் ஏற்படும்.

இன்று ஒரு கலசத்தில் கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி கேதாரேஸ்வரரை
ஆவாஹனம் செய்யவும்.சூலம், டமருகம் சைவ ததானம் ஹஸ்த யுக்மஹே
கேதார தேவ மீசானம் த்யாயேத் திரிபுர கா தினம்..

இத்துடன் 21 இழை , 21 முடியுள்ள மஞ்சள் சரட்டில் அம்மனை ஆவாஹனம் செய்து 16 உபசார பூஜை செய்து அஷ்டோத்ரத்தால் அர்ச்சனை செய்து 21 பழம், 21 அப்பம், 21 வெல்ல உருண்டை நிவேதனம்

செய்து பூஜையை முடிக்க வேண்டும். பிறகு கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி பூஜை செய்த 21 முடிச்சுள்ள சரட்டை ஸுமங்கலி பெண் தனது கையில் கட்டிகொள்ள வேண்டும்.

ஆயுஸ்ச வித்யாம் ச ததா ஸுகஞ்ச ஸெளபாகிய வ்ருத்திம் குரு தேவ தேவ ஸம்ஸார கோராம் புநிதெள நிமக்னம் மாம் ரக்ஷ கேதார நமோ நமஸ்தே.

பிறகு 21 ஸுமங்கலிப் பெண்களுக்கு , 21 வெத்திலை, 21 பாக்கு, 21 மஞ்சள் கிழங்குடன் தாம்பூலம் தந்து நமஸ்கரித்து அவர்கள் ஆசியை பெற வேண்டும். ஸ்கந்த புராணம் இதனால் சிவ பார்வதி அருள் கிட்டும் என்கிறது.

கார்த்திக ஸ்நானம்:- 24-10-2014 முதல் 22-11-2014 முடிய.
 
கார்த்திகை ஸ்நானம் 24-10-2014 முதல் 22-11-2014 முடிய.

ஐப்பசி அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் கார்த்திகை சாந்திரமான மாதம் ஆவதால் இன்று முதல் தினந்தோறும் ஸூர்ய உதயத்திற்கு முன்பாக அதாவது 6 மணிக்கு முன்பாக முறைப்படி ஸ்னாநம் செய்ய வேண்டும்.

இதற்கு கார்த்திகை ஸ்நானம் எனப்பெயர் .இதனால் நாம் அறியாமல் செய்யும் பாபம் விலகி மனதில் தூய எண்ணங்கள் உன்டாகும். ஜாதி மத இன வேறுபாடின்றி ஆண்கள் பெண்கள் எல்லோரும் இதை செய்யலாம்.

ஸ்நானம் செய்யும் போது சொல்ல வேண்டிய மந்திரம்.
கார்த்திகே அஹம் கரிஷ்யாமி ப்ராதஸ் ஸ்நானம் ஜநார்தன: ப்ரீத்யர்த்தம் தவ தேவேச தாமோதர மயா ஸஹ.

முறையாக ஸ்நானம் செய்துவிட்டு உலர்ந்த ஆடைகள் கட்டிகொண்டு நெற்றிக்கு இட்டுகொண்டு மயா க்ருத கார்த்திக ஸ்நானாங்கம் அர்கிய

ப்ரதானம் கரிஷ்யே என சங்கல்பம் செய்துகொண்டு கையில் ஜலம் எடுத்துக்கொண்டு அர்க்கியம் விடவும் கீழ் கண்ட மந்திரம் சொல்லி.

வ்ரதிந: கார்த்திகே மாஸி ஸ்நானஸ்ய விதிவன் மம க்ருஹாணார்க்கியம் மயா தத்தம் தநுஜேந்திர நிஷூதன ஶ்ரீ க்ருஷ்ணாய நம: இதமர்க்கியம் இதமர்க்கியம் இதமர்க்கியம்.

நித்ய நைமித்திகே க்ருஷ்ண கார்திகே பாபநாசனே க்ருஹாணார்க்கியம் மயா தத்தம் ராதயா ஸஹிதோ ஹரே ; ஶ்ரீ ஹரயே நம: இதமர்க்கியம் இதமர்க்கியம் இதமர்க்கியம்.

அநேன அர்க்கிய ப்ரதாநேன ஶ்ரீ ஹரி: ப்ரீயதாம் எனச்சொல்லி கார்த்திகை மாதம் முழுவதும் செய்ய முடியா விட்டலும் முடிந்த நாட்களில் செய்யலாம்.


ஆகாச தீபம் கடனை போக்கும்: 24-10-2014 முதல் 22-11-2014 முடிய.

கார்த்திகே தில தைலேன ஸாயங்காலே ஸமாகதே ஆகாச தீபம் யோதத்யாத் மாஸமேகம் ஹரிம் ப்ரதி மஹதீம் ஶ்ரீய மாப்நோதி ரூப செளபாக்கியம் ஸம்பதம் ( நிர்ணய ஸிந்து- 146 ).

சாந்திரமான கார்த்திகை மாதம் முழுவதும் ஸாயங்காலம் ஸூர்யன் அஸ்தமிக்கும் வேளையில் தனது வீட்டுக்கு அல்லது ஆலயத்துக்கு

அருகில் உயரமான ஒரு ஸ்தம்பம் நட்டு அதன் நுனியில் எட்டு திரியுள்ள ஒரு விளக்கு நல்லெண்ணை விட்டு ஏற்றி வைக்க வேண்டும்.

அல்லது தனது வீட்டு மொட்டை மாடியில் உயரமான இடத்திலும் ஏற்றி வைக்கலாம் இதன் ஒளியானது எட்டு திசையும் பரவ வேன்டும்.

24-10-2014 ஸூர்யன் மறைந்த பின் அஹம் ஸகல பாபக்ஷய பூர்வகம் ஶ்ரீ ராதா தாமோதர ப்ரீதயே அத்ய ஆரப்ய கார்த்திக அமாவாஸ்யா பர்யந்தம் யதா சக்தி ஆகாச தீப தாநம் கரிஷ்யே என்று ஸ்வாமி சன்னதியில்

ஸங்கல்பம் செய்துகொண்டு , மண் அகல் விளக்கில் நல்லெண்ணைய் விட்டு எட்டு திரி போட்டு ஏற்றி அருகில் உள்ள ஆலயத்தில் அல்லது தனது வீட்டு மாடியிலோ உயரமான இடத்தில் தாமோதராய நபஸி துலாயாம்

லோலயா ஸஹ ப்ரதீபம் தே ப்ரயச்சாமி நமோ நந்தாய வேதஸே (நிர்ணய ஸிந்து)) எனும் ஸ்லோகம் சொல்லி வைத்து நமஸ்காரம் செய்யலாம். .
அனைத்து கடன்களும் விலகும். லக்ஷிமி கடாக்ஷம் ஏற்படும்.

எல்லா நாட்களும் முடியாவிட்டாலும் முடிந்த நாட்களில் ஏற்றி வைத்தாலும் அந்த அளவிற்கு துன்பங்கள் விலகுமே. .

தடித்த துணியாலான திரி தான் மொட்டை மாடியில் எரியும். ஒரே விளக்கில் எட்டு திரி போட வேண்டும்.

ஆதலால் மண் பானையை மூடும் மண் தட்டு மாதிரி பெரிதாக இருக்க வேண்டும் அகல் விளக்கு. காற்றில் அணையாமல் எரிய வேண்டுமே..


25-10-2014---யம துதியை---ப்ராத்ரு த்விதீயை .

தீபாவளிக்கு பிறகு வரும் த்விதீயை அன்று யமுனா தேவி தன் ஸஹோதரன் யமனை தனது வீட்டிற்கு வரவழைத்தாள். யமனும் தன் ஸஹோதரியின் அழைப்பை ஏற்று நிறைய வஸ்த்ரம் ஆபரணம் முதலிய சீர்களுடன் யமுனையின் வீட்டிற்கு சென்றார்.

யமுனையும் தனது கையாலேயே பல விதமான ஆஹாரங்கள் தயார் செய்து யமனை சாப்பிடச்செய்து உபசரித்தாள். யமனும் யமுனைக்கு பல பரிசுகள் தந்து மகிழ்வித்தார்.

அந்த திருநாள் தான் யம த்வீதீயை எனப்பெயர் பெற்றது. “”ஸ்நேஹேந பகினி ஹஸ்தாத் போக்தவ்யம் புஷ்டி வர்த்தனம் தாநாதி ச ப்ரதேயாநி பகினீப் யோ விசேஷத:

யாது போஜயதே நாரீ ப்ராதரம் யுக்மகே திதெள அர்ச்சயேச்சாபி தாம்பூலைர் ந ஸா வைதவ்ய மாப்னுயாத்.

எந்த பெண் தனது ஸஹோதரரை த்வீதீயை அன்று சாப்பாடு முதலியவைகளால் சந்தோஷ படுத்துகிறாளோ அவள் ஒரு போதும் விதவை ஆக மாட்டாள்.

தனது ஸஹோதரி வீட்டிற்கு போக முடியாதவர்கள் தனது ஸஹோதரிக்கு பணம் , பொருட்கள் ஆகியவற்றை சீராக அனுப்பி வைக்கலாம்.

உடன் பிறந்த சஹோதரி இல்லாதவர்கள் தனது சித்தப்பா, பெரியப்பா பெண்
மாமா பெண் முதலியவர்களை உடன் பிறந்த ஸஹோதரியாக பாவிக்கலாம்.

இதற்கு உபவாசம், பூஜை மந்திரம் இல்லை. இதனால் ஒருவருக்கொருவர் அன்பு வளரும். நீண்ட ஆயுள், ஆரோக்கியம், வலிமை ஐஸ்வரியம் கிடைக்கும்.


29-10-2014, ஸ்கந்த சஷ்டி.

தமிழ் கடவுள் முருக பெருமான் சூரபத்மன் போன்ற அசுரர்களை வதம் செய்து உலகத்திற்கு அநுகிரஹம் செய்த நன்நாள் இது. இன்று விரதம் இருந்து திருப்புகழ், ஸ்கந்த சஷ்டி கவசம், ஸுப்ரமணிய புஜங்கம்

முதலிய ஸ்தோத்ரம் படிக்கலாம். 16 உபசார பூஜை முருகனுக்கு செய்யலாம். .சிவப்பு அரளி பூக்களால் முருகனுக்கு அர்ச்சனை செய்து தேனும் தினை மாவும் நிவேதனம் செய்யலாம்.முருகனின் அருள் பெறலாம்.


31-10-2014. கோபாஷ்டமி—கோஷ்டாஷ்டமி.

ஸ்ம்ருதி கெளஸ்துபம்:---கார்திகே யாஷ்டமி சுக்லா க்ஞேயா கோபாஷ்டமீ புதை: தத்ர குர்யாத் கவாம் பூஜாம் கோ க்ராஸம் கோ ப்ரதக்ஷிணம்..

ஐப்பசி மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமி கோபாஷ்டமி எனப்படும். இன்று கன்று குட்டியுடன் கூடிய பசு மாட்டை பூஜை செய்து சாப்பிட அகத்திக்கீரை புல்

முதலியன கொடுத்து ஜலம் குடிக்க வைத்து பக்தியுடன் பசுவை 16 முறை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்கரிக்க வேண்டும். இதனால் தெய்வ அருள் கிட்டும் பாங்கள் நீங்கும் என்கிறது மாத்ஸ்ய புராணம்.


3-11-2014—உத்தான ஏகாதசி.

ஶ்ரீ மஹா விஷ்ணு இன்று துயில் எழுகிறார். இன்று அதிகாலையில் பூஜை அறையில் ஶ்ரீ மஹா விஷ்ணு ஸன்னதியில் தீபம் ஏற்றி வைத்து பழங்கள் , புஷ்பம், மஞ்சள் குங்குமம், கறிகாய்கள் பசுமாடு, தங்கம், ரத்னங்கள் போன்ற

மங்கல திரவ்யங்கள் வைத்து கதவை சிறிது சாற்றி விட்டு குடும்பதாருடன் சேர்ந்து, பக்தியுடன் நின்று கொண்டு ஶ்ரீ மஹா விஷ்ணு ஸுப்ரபாதம், ஸ்தோத்ரம் சொல்லி துயில் எழுப்பும் பாடல்கள் பாடி ஶ்ரீ மஹா விஷ்ணுவை துயில் எழுப்ப வேண்டும்

. அதாவது பூஜை அறையின் கதவை திறக்க வேண்டும். பிறகு மஹா விஷ்ணுவிற்கு பால் நிவேதனம் செய்து கற்பூரம் காட்டி நமஸ்கரித்து ப்ரார்தித்து கொள்ள வேண்டும்.

இதனால் ஸுகத்தை தரும் ஶ்ரீ விஷ்ணுவின் அருள் கிட்டும் .குடும்பத்தில் நிம்மதி நிலவும்.



4-11-2014 துளசி விவாஹம், ப்ருந்தாவன த்வாதசி.

ஐப்பசி மாத சுக்ல பக்ஷ த்வாதசிக்கு ப்ருந்தாவன த்வாதஸி எனப்பெயர்.
இன்று காலையில் ப்ருந்தாவனம் என்னும் துளசி செடியையும் மஹாவிஷ்ணுவையும் சேர்த்து பூஜிக்க வேண்டும்.

துளசி செடி அருகில் விஷ்ணு படம் அல்லது விக்ரஹம் வைத்து பூஜிக்கலாம். நெல்லிக்காய் கிளையை ஒடித்து துளசி செடிக்கு பக்கத்தில் நட்டும் பூஜிக்கலாம். தம்பதிகளாகவும் பூஜிக்கலாம்.

லக்ஷிமி நாராயண ப்ரஸாத ஸித்தியர்த்தே மஹா விஷ்ணு துளசி பூஜாம் கரிஷ்யே என சங்கல்பித்துக் கொண்டு துளசீம் த்யாயாமி, ஶ்ரீ மஹா விஷ்ணூம் த்யாயாமி

என்று பூஜை செய்து துளசி அஷ்டோத்ரம், க்ருஷ்ணாஷ்டோத்ரம் அர்சித்து தூபம், தீபம், பால் நிவேதனம் செய்து இந்த ஸ்லோகம் சொல்லி துளசியை ப்ரார்த்தித்துக் கொள்ளலாம்

புஷ்பாஞ்சலிம் க்ருஹாணேமம் பங்கஜாக்ஷ.ஸ்ய வல்லபே நமஸ்தே தேவி துளசி நதாபீஷ்ட பல ப்ரதே ஆயுராரோக்கிய மதுலம் ஐஸ்வர்யம் புத்ர ஸம்பதஹ தேஹி மே ஸகலான் காமான் துளஸ்யம்ருத ஸம்பவே.

பிறகு கையில் புஷ்பம் அக்ஷதை எடுத்துக்கொண்டு துளசி செடிக்கு முன்பு ஒரு கிண்ணத்தில் பாலால் அர்க்கியம் விடவும்.ஸ்லோகம் சொல்லிக் கொண்டே..

நமஸ்தே தேவி துளசி நமஸ்தே மோக்ஷதாயினி இதமர்க்கியம் ப்ரதாஸ்யாமி ஸுப்ரீதா வரதா பவ. துளஸ்யை நம: இதமர்க்கியம்.

லக்ஷிமிபதே நமஸ்துப்யம் துளசி மால பாரிணே இதமர்க்கியம் ப்ரதாஸ்யாமி
க்ருஹாண கருடத்வஜ ஶ்ரீ மஹா விஷ்ணவே நம: இதமர்க்கியம்.

ஸர்வ பாப ஹரே தேவி ஸர்வ மங்கள தாயினி. இதமர்க்கியம் ப்ரதாஸ்யாமி ப்ரஸன்னா பவ சோபனே துளஸ்யை நம: இதமர்க்கியம்.
 
ஐப்பசி மாத தொடர்ச்சி.

நமஸ்தே தேவி துளசி மாதவேந ஸமன்விதா ப்ரயஸ்ச ஸகலான் காமான் த்வாதஸ்யாம் பூஜிதா மயா என்று சொல்லி ப்ரார்த்தித்துக் கொண்டு ஒரு வெங்கல பாத்ரத்தில் பாயஸம் வைத்து சிறிது தக்ஷிணையும் சேர்த்து

காம்ஸ்ய பாத்ர மிதம் ரம்யம் பாயஸேன ஸமன்விதம் ததாமி த்விஜ வர்யாய துளசி விஷ்ணு துஷ்டயே இதம் பாயஸம் காம்ஸ்ய பாத்ர ஸ்திதம் க்ஷீராப்தி நாத ப்ரீத்யர்த்தம் ஸம்ப்ரததே என்று சொல்லி யாராவது

ஒருவருக்கு அல்லது வாத்யாருக்கு பாத்ரத்துடன் பாயஸத்தை தானம் செய்து விட வேண்டும். இதனால் குடும்பத்தில் ஒற்றுமையும் மங்களங்களும் ஏற்படும்.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது கடலிலிருந்து கற்பக வ்ருக்ஷம், காமதேனு, ஐராவதம், உச்சைஸ்ரவஸ் , கெளஸ்துபம், மஹாலக்ஷிமி, சந்திரன், ஆல கால விஷம், அம்ருதம் எல்லாம் வந்தது

அம்ருத கலசத்திலிருந்து துளசி தோன்றினாள். . மஹா விஷ்ணு கெளஸ்துப மணியையும், மஹா லக்ஷிமியையும், துளசியையும் தான் எடுத்துக்கொண்டார்.

துளசியை பாதம் முதல் சிரஸ் வரை அணிந்து கொண்டார். ,. அந்த நாள் தான் துளசி விவாஹ திருநாள்.

துளசி செடியை பூஜை செய்து நமஸ்கரித்து கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி ப்ரார்த்திக்கவும்..

ஸெளமங்கல்யம் தனைஸ்வர்யம் புத்ர பெளத்ராதி ஸம்பதம் துளஸ்யம்ருத ஸம்பூதே தேஹி மே பக்தவத்ஸல.. .

மஹா விஷ்ணு துளசியை புகழ்ந்து போற்றிய பிருந்தா பிருந்தாவனீ, விஸ்வபூஜிதா விஸ்வபாவநி, புஷ்பஸாரா, நந்தினி, துளசி க்ருஷ்ண ஜீவனீ ஏதன் நாமாஷ்டகஞ்சைவ ஸ்தோத்ரம் நாமார்த்தம் ஸம்யுதம் ய: படேத்
தாஞ்ச ஸம்பூஜ்ய ஸோஸ்வமேத பலம் லபேத். என்பதையும் சொல்லவும்.,

துளசி பூஜைக்கு ஆவாஹனம் தேவை இல்லை. துளசியின் ஜன்ம தினமான கார்த்திகை மாதம் பெளர்ணமி அன்றும் பூஜை துளசிக்கு செய்யலாம் என்கிறது. தேவி பாகவதம். ஒன்பதாவது ஸ்கந்தம் துளசி பூஜையில்.

பிருந்தை என்பது மரங்கள் நெருங்கி அடர்ந்திருப்பதை குறிக்கும். . துளசி ஓரிடத்தில் நெருங்கி அடர்ந்திருப்பதால் பிருந்தை என கூறுகிறார்கள்>.
எவள் முற்காலத்தில் பிருந்தாவனந் தோறும் இருந்து பிருந்தாவனீ எனப்பெயர்

பெற்றாளோ ; எவள் அகில ப்ரபஞ்சத்தினால் பூஜிக்கப்பட்டு விஸ்வபூஜிதை என பெயர் பெற்றாளோ எவளால் எண்ணற்ற ப்ரபஞ்சமெல்லாம் பரிசுத்தமாகி விஸ்வபாவனீ என ப்பெயர் பெற்றாளோ ; மலர்களின் மீது ப்ரீதியுடைய

தேவர்களும் அவைகளால் ஆனந்தமடையாமல் உன்னாலேயே ஆனந்தமடைவதால் புஷ்பஸாரை என்றும்; பெயர் பெற்றாய். அடைந்ததுமே ஆனந்தத்தை அளிக்கும் தன்மையால் நந்தினி என்ற பெயர் பெற்றாய்;

க்ருஷ்ணன் உன்னால் உருக்கொண்டு வாழ்வதால் கிருஷ்ணஜீவனீ என்ற பெயர் பெற்றாய். துளசி ஸ்தோத்ரம் கண்ணுவ சாகையில் உள்ளது.

ஶ்ரீ யாக்ஞவல்கிய ஜயந்தி::-4-11-2014

கார்த்திக மாதம் சுக்ல பக்ஷ த்வாதசியன்று யோகீஸ்வரர் ஶ்ரீ யாக்ஞவல்கியர் அவதரித்த நாள். கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி நமஸ்கரித்து அனைத்து மங்களங்களும் பெறுவோம்.

வந்தேஹம் மங்களாத்மானம் பாஸ்வந்தம் வேத விக்ரஹம் யாக்ஞவல்கியம் முனி ச்ரேஷ்டம் ஜிஷ்ணும் ஹரிஹரப்ரபம் ஜிதேந்திரியம் ஜித க்ரோதம் ஸதா த்யான பராயணம் ஆனந்த நிலயம் வந்தே யோகானந்த முனீஸ்வரம்.

4-11-2014 சாதுர் மாஸ்ய விரத பூர்த்தி.

சாதுர்மாஸ்ய விரதம் அநுஷ்டித்தவர்கள் இன்று ஸ்வாமி ஸன்னதியில் கீழ் கண்ட ச்லோகம் சொல்லி விரத்த்தை முடித்துக்கொள்ள வேண்டும்.

இதம் விரதம் மயா தேவ க்ருதம் ப்ரீத்யை தவ ப்ரபோ ந்யூனம் ஸம்பூர்ணதாம் யாது தவத் ப்ரஸாதாத் ஜனார்தன..


6-11-2014 ஆ கா மா வை.

ஆஷாடம், கார்த்திகம், மாகம், வைசாகம் ஆகிய நான்கு மாதங்களின் முதல் பெயரே ஆ கா மா வை. .இன்று விடியல் காலை 4-30 மணிக்கு மேல் 6 மணிக்குள் முறையாக ஸ்நானம் செய்ய வேண்டும்

. இதனால் பலம், அழகு, புகழ், தர்மம், ஞானம், ஸுகம், தைர்யம், ஆரோக்கியம் ஆகியவை அடைய முடியும் என்கிறது ஸத்யவ்ரத ஸ்ம்ருதி.

கோயில்களில் சிவ லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் இன்று நடை பெறும்.

கிருத்திகா மண்டல வேத பாராயணம் ஒவ்வொரு வருஷமும் கார்த்திகை மார்கழி மாதங்களில் நடை பெறும்.ஸுமார் 44 நாட்கள் நடைபெறும் 6-11-14 முதல்.21-12 2014 . ருக்,யஜுர், சாம, வேத பாராயணம் நடக்கும்.

14-11-2014:--காலபைரவாஷ்டமி. சிவன் ஆலயங்களில் வட கிழக்கு மூலையில் நிர்வாணமாக நாய் வாஹனத்துடன் நிற்பவர்..பயத்தை அளிப்பவர்—பயத்தை

போக்குபவர் என்பதால் பைரவர் எனப்பெயர் .பரமேஸ்வரரின் ஐந்து குமாரர்கள்:-- கணபதி, முருகன், வீ.ரபத்ரர், சாஸ்தா, பைரவர். எனப் படுவர்.

அந்தகாசுரன் என்னும் அரக்கனை சம்ஹரிக்க , பரமேஸ்வரன் தன்னிடமிருந்து பைரவரை உருவாக்க அது விஸ்வரூபமெடுத்து அறுபத்து

நான்காகி அஸுரர்களை அழித்து தேவர்களுக்கு அமைதி வழங்கியது.. இதனால் தேவர்கள் மகிழ்ந்து 64 யோகினிகளை அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

காலாஷ்டமீதீ விக்ஞேயா கார்திகஸ்ய ஸிதாஷ்டமி தஸ்யா முபோஷணம் கார்யம் ததா ஜாகரணம் நிசி க்ருத்வாச விவிதாம்பூஜாம்

மஹாஸம்பார விஸ்தரைஹி நரோ மார்க ஸிதாஷ்டம்யாம் வார்ஷிகம் விக்ன முத்ஸ்ருஜேத் ( ஸ்ம்ருதி கெளஸ்துபம் பக்கம் 429 ).

கார்த்திக மாதத்திய க்ருஷ்ண பக்ஷ அஷ்டமிக்கு காலாஷ்டமி அல்லது காலபைரவாஷ்டமி எனப்பெயர்.

இன்று முழுவதும் சாப்பிடாமல் உபவாசம் இருந்து மாலையில் மிகவும் விரிவான முறையில் பல விதமான பொருட்களால் பைரவரை பூஜை செய்ய வேண்டும். இரவில் இவரது சரித்ரம் , ஸ்தோத்ரம் கேட்க வேண்டும். கண்

விழித்திருக்க வேன்டும். நிவேத்யம்:- தயிர் சாதம், செவ்வாழைபழம் ; தேன்; அவல் பாயசம் முதலியன பூஜை முடிவில் சுத்த ஜலத்தால் அர்க்கியம் கொடுக்கவும் .சிவனின் படத்தில் பைரவரை பூஜை செய்யலாம்.

பூஜை செய்ய முடியாதவர்கள் அர்க்கியம் மட்டுமாவது விடலாம்.

பைரவார்க்கியம் க்ருஹாணேச பீம ரூப (அ) வ்யயாநக அநேநார்க்கிய ப்ரதானேன துஷ்டோபவ சிவப்ரிய பைரவாய நம: இதமர்க்கியம்.

ஸஹஸ்ராக்ஷி சிரோ பாஹோ ஸஹஸ்ர சரணாஜர க்ருஹாணார்க்கியம் பைரவேதம் ஸ புஷ்பம் பரமேஸ்வர. பைரவாய நம: இத மர்க்கியம்.

புஷ்பாஞ்சலீம் க்ருஹாணேச வரதோ பவ பைரவ புநர் அர்க்கியம் க்ருஹாணேதம் ஸ புஷ்பம் யாதநாபஹ பைரவாய நம: இதமர்க்கியம்..

ஒரு வருஷம் வரை ஒவ்வொரு க்ருஷ்ண பக்ஷ அஷ்டமியிலும் இம்மாதிரி செய்யும் மனிதர்களுக்கு எந்த ஒரு தடங்கலும் ஏற்படாது.

பய உணர்ச்சி, கடன் தொல்லை விலகும்.
 
Status
Not open for further replies.
Back
Top