என் முதல் கவிதை.. [ tvk ]

kk4646

Active member
என் முதல் கவிதை.. [ tvk ]

என் முதல் கவிதை...


சின்ன வயசிலிருந்தே எனக்கு எழதுவது ரொம்ப பிடிக்கும்... அதுவும் கவிதைகள் என்று என் உளறல்களை.. பலதடவை கிறுக்கி கிழித்து போட்டிருக்கேன்.. இந்த வழக்கம் இன்னமும் என்னை துரதிக்கிட்டுத்தான் இருக்கு..


நான் முதல் முதலாக ஒரு கவிதை [!?] எழுதினது ஆறாம் கிளாஸ் படிக்கும்போது.... கணக்கு நோட்டின் கடைசி பக்கத்தில் பென்சிலால் எழுதப்பட்டு என் அருமையான கவிதை அரங்கேறியது... நான் செஞ்ச தப்பு கடைசி பக்கத்தை கிழிக்காமல் விட்டதுதான்.. கணக்கு வாத்தியார் கிளாசில் கணக்கு நோட்டை திருத்தும்போது அவர் கண்ணில் பட்டது என் பொற்காவியம்..


டேய்.. இங்க வாடா.. கணக்கு வாத்தியாரின் அதிகார குரல் என்னை அதிர வைத்தது.. பெஞ்சிலிருந்து எழுந்து ரெண்டு கையையும் கட்டிக்கிட்டு கணக்கு வாத்தியாருக்கு முன்னால் போய் நின்றேன்.... இதை நீதான் எழுதினியாடா..? ஆமாம் சார்.. [ எப்போதும் உண்மைதான் பேசவேண்டும்னு தமிழ் வாத்தியார் சொல்லிகுடுதிருக்கிறார் இல்லையா..]


அடுத்த நிமிடம் டேபிள் மேலே இருந்த பிரம்பு வாத்தியார் கைக்கு தாவியது.. நீட்டுடா கையை.. விழ்ந்தது சுளிர்ன்னு ஒரு அடி.... கணக்கு வாத்தியாருக்கு எப்பவுமே எதுவும் சரி சமமாக இருந்தால்தான் பிடிக்கும்.. அடுத்த கைக்கும் கிடைத்து சன்மானம் .. வலி ரெண்டு கையிலும் ...விட்டாரா அந்த மனுஷர் அதோடு.. ஒரு கையில என் கணக்கு நோட்டும்...இன்னொரு கையில என் சட்டை காலரும் ...தர தரன்னு இழுத்துக்க்கிட்டு போய் .ஹெட்மாஸ்டர்கிட்டே நிறுத்திட்டரு..எங்க ஊர் . மாரியம்மன் கோயில் “கிடா பலி” ஆடு மாதிரித்தான்.. போயி உன் அப்பாவை கூட்டிக்கிட்டு வா.. அது வரைக்கும் நீ பள்ளிக்ககூடம் வரக்கூடாது.. ஹெட்மாஸ்டர் உத்தரவு போட்டுட்டார்.. அவருக்கென்ன..


அப்பாவிடம் என்ன சொல்லி கூட்டிகிட்டு வரது... அப்பா உங்களை ஹெட்மாஸ்டர் பாக்கணும்னு சொன்னார்.. வாங்க..
எதுக்குடா..? எனக்கு தெரியலே நீங்க வாங்க.. எனக்கு வேலை இருக்கு ரெண்டு நாள் கழிச்சு வரேண்டா.. இல்லை அப்பா உங்களை இன்னிக்கே கூட்டிக்கிட்டு வரச்சொன்னார்.. அப்பா முகத்தில ஒரு பிராகாசம் தெரிஞ்சது.....பையன் நல்ல படிக்கிறான்னு ஹெட்மாஸ்டர் சர்டிபிகேட் குடுக்கத்தான் கூப்பிடறாற்ன்னு.. நினைச்சிருப்பாரு..


இங்க பாருங்க ..உங்க பையன் எழதினதை..கணக்கு நோட்டு ஹெட்மாஸ்டர் கையில் இருந்து.அப்பாவுக்கு மாறியது.. அப்பாவோட முறைப்பிலியே தெரிஞ்சு போச்சு ..அவர் கோபம் தலைக்கு ஏறிடிசின்னு..இங்க பாருங்க .உங்க பையன் நல்லாத்தான் படிக்கிறான்.. ஆனா நிறைய “குறுக்கு புத்தி” வருது.. வீட்ல கண்டிச்சு.. வையிங்க.. இல்லேன்னா பையன் கெட்டு குட்டிசுவரா போய்..நாசமா போய்டுவான்.. ஹெட்மாஸ்டர் “வாழ்த்து’ சொல்லி அனுப்பி வச்சார்.. அப்புறம் என்ன.. வீட்டுக்கு வந்ததும் அப்பாவின் கைகள் என் கன்னத்திலும் முதுகிலும் நல்லா ‘தவில்’ வாசித்தன.. வாங்கின உதையில் ஜூரமே வந்திடுச்சு.. மூணு நாள் பள்ளிக்கூடம் போகல.. பசங்க கேட்டாங்க நாலாவது நாள் .. ஏண்டா கன்னமெல்லாம். இப்பிடி வீங்கி இருக்கு.. ? மூணு நாள் ஜூராம்டா ... அதான் இப்பிடி.. பின்ன அப்பா கன்னத்தில தவில் வாசித்ததையா சொல்லமுடியும்..


ஆகக்கூடி என் முதல் கவிதைக்கு கிடைச்ச பரிசு பள்ளிக்கூடத்திலும்.. வீட்லயும் வாங்கின உதைதான்..


ஆமா அப்பிடி என்ன நடந்தது.. ? கணக்கு வாத்தியார் , ஹெட்மாஸ்டர், அப்பா எல்லாம் கோவிச்சுக்கற மாதிரி.. நீ எழதின கவிதைக்கி ஏன் பள்ளிக்கூடத்திலும் வீட்லயும் உதை வாங்கினேன்னு கேக்றீன்களா...


அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லேங்க..நல்ல கவிதை நயத்தோட.. கணக்கு வாத்தியார் “சொட்டை தலைய” வெச்சு அழகா ஒரு கவிதை எழுதினேங்க.. அவ்ளவுதான்.. அது தப்பா..? நீங்களே சொல்லுங்க..



[டிவிகே]

[FONT=&quot] . [/FONT]
 
I dedicate this articles to my good friends , Mentor, and Guides .. VR Madam & RR Madam.. I should have done this earlier.. but somehow I missed.. Eventhough I have written many..this one is very special to me.. as this about my first attempt to write poem & the prize I have received.. [ This was not fiction ]

TVK
 
நான் பள்ளியில் படிக்கும் சமயம்!

எங்கள் தாத்தா கர்நாடக இசைப் பாடல்கள் இயற்றுவதை பார்த்து

என்னையும் ஆர்வம் தொற்றிக்கொண்டது.

"ஆதி பராசக்தி பரமேஸ்வரி! எங்களைக் காத்தருள்வாய் பரமேஸ்வரி!"

'ஆஹா!! பல்லவி மிக அற்புதம்!', என என்னை நானே முதுகில் தட்டி .......

"நாங்கள் வறுமையில் வாடுகிறோம் பரமேஸ்வரி!.."

'ஹும்! அப்புறம் என்ன?' என யோசிக்கும் நேரத்தில்,

அம்மா வந்து நான் எழுதிய தாளைப் பிடுங்கிப் படித்தார்!

"வறுமையிலே வாடறாளாமே வறுமையிலே! வேளா வேளைக்கு

வயிறு ரொம்பச் சாப்பிட்டுட்டு, இப்படியா எழுதுவ?''

என் முதல் பாடல், முடிவு பெறாமலே, குப்பையிலே!

அவர் முறைத்த முறைப்பில் என் பாட்டு எழுதும் கனல் அணைந்தே போனது!

இன்றும் என் அண்ணன் கலாய்ப்பார்:

"அம்மா மட்டும் அன்னைக்கே என்கரேஜ் பண்ணியிருந்தா,

ஒரு நல்ல கவிஞி கிடைத்திருப்பாள்!"
 
நான் பள்ளியில் படிக்கும் சமயம்!

எங்கள் தாத்தா கர்நாடக இசைப் பாடல்கள் இயற்றுவதை பார்த்து

என்னையும் ஆர்வம் தொற்றிக்கொண்டது.

"ஆதி பராசக்தி பரமேஸ்வரி! எங்களைக் காத்தருள்வாய் பரமேஸ்வரி!"

'ஆஹா!! பல்லவி மிக அற்புதம்!', என என்னை நானே முதுகில் தட்டி .......

"நாங்கள் வறுமையில் வாடுகிறோம் பரமேஸ்வரி!.."

'ஹும்! அப்புறம் என்ன?' என யோசிக்கும் நேரத்தில்,

அம்மா வந்து நான் எழுதிய தாளைப் பிடுங்கிப் படித்தார்!

"வறுமையிலே வாடறாளாமே வறுமையிலே! வேளா வேளைக்கு

வயிறு ரொம்பச் சாப்பிட்டுட்டு, இப்படியா எழுதுவ?''

என் முதல் பாடல், முடிவு பெறாமலே, குப்பையிலே!

அவர் முறைத்த முறைப்பில் என் பாட்டு எழுதும் கனல் அணைந்தே போனது!

இன்றும் என் அண்ணன் கலாய்ப்பார்:

"அம்மா மட்டும் அன்னைக்கே என்கரேஜ் பண்ணியிருந்தா,

ஒரு நல்ல கவிஞி கிடைத்திருப்பாள்!"


இபோழுதுமட்டும் என்ன.. நன்றாகத்தானே எழுதிகிறீர்கள்.. ? அதுவும்.. நினைத்தவுடன்.. !! [ அந்த திறமை எனக்கு கிடையாது ].. நீங்கள் எழுதுவது படிக்கும் படியாகத்தான் இருக்கிறது.. அப்பப்போ கொஞ்சம் திருவிளையாடல் தர்மி மாதிரி உரைநடாயாய் இருந்தாலும் கூட...!!

Tvk
 
தவக் கவி அவர்களே!

தருமிக்கும் விசிறிகள் உண்டு!

அதில் நானும் ஒன்று!! ;)
 
தவக் கவி அவர்களே!

தருமிக்கும் விசிறிகள் உண்டு!

அதில் நானும் ஒன்று!! ;)


ஹா.ஹா..ஹா.. அது என்ன ..கவி.. ?.. டிவிகே தமிழா.. ? அதுகூட நல்லாத்தான் இருக்கு.. ரமணிய திருப்பி போட்ட மாதிரி.. !!

Tvk
 
Back
Top