என் காதலி... [ டி.வி.கே.]

kk4646

Active member
கனவொன்று கண்டேன் ஓர் இரவில்..

கனவில் வந்தாள் மங்கை ஒருவள்...

யாரம்மா நீ என்றே கேட்டேன் நான்...

யாரென்று தெரியாதோ என்றாள்..பதிலாய்...

தெரியவில்லையடி பெண்ணே..கொஞ்சம் ..

தெளிவாய் சொல்வாயா ..என்றேன்..

நடிக்கின்றாய்.. நீ.. தெரியாதென்றே...

நாள்தோறும் உன் நினைவில் நானல்லவா..

உன் மனதின் எண்ணங்களுக்கு ..

உன் விரல் அசைவில் வடிவம் தருவதும்

உன் கற்ப்பனையில் சதிராடுவதும் நான்தானே...

உன்னுடன் உறவாடி உன் மூச்சில் கலந்திட்ட...

உன் உயிர் காதலிதானே நான்... என்றாள்...

காலம் கடந்த பின் காதலியா எனக்கு..

கனவுப் பெண்ணே ஏன் இந்த மயக்கம் ..என்றேன்...

காதலுக்கு தடையில்லை வயது...

கவிதையில் எழுதினவன் நீதானே.. ...

யோசித்துப் பார்... நான் யாரென்று...

யோசனையில் தெரியும் என்றே மறைந்தாள்...

கண் விழித்தேன்..நான்...கனவின் நினைவோடு.

கனவில் வந்தவள் யாரென்றே யோசித்தேன்...

புரிந்தது. எனக்கு ...கனவு மங்கை யாரென்று..

புதிர் சொல்லிச் சென்றவள் ...என் காதலிதான் ..

நாள்தோறும் என் மனதில் அவளே......

நான் எழுதுவதும் அவளால்தானே...

கனவு மங்கயாய் வந்தவள்...

காதலிதான் ..என் மனதில்...

காதலிக்கிறேன் அவளை .என்

எழுத்துக்களாய்...என் கவிதைகளாய்.....

..........அன்றும் ...இன்றும் ..என்றும்....



டி.வி.கே.
 
Back
Top