• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

என்னுடைய தமிழ்க் கவிதைகள்

Status
Not open for further replies.
VRji,

Your views are quite understandable. I agree with them too. On 'sippaai', how could that ....... Bihar Minister make a statement like that? He should be hanged in public.
 
இரகசிய வசியம்


உன் பார்வையை
வீசிச் சென்றாய்
- தாவரங்களில் ஒளிச்சேர்க்கை!

உன் எச்சிலைச்
சிந்திவிட்டுச் சென்றாய்
- ஒரு வண்டுக் கூட்டமங்கே!

உதடு குவித்தாய்
- குயில்கள்
தலைகுனிகின்றன!

உன் பாதம் படுவதால்
மண்ணில்
தினம் ஒரு அகலிகை!

நீ வாய் திறந்தாய்
- புவியீர்ப்பு விசை
பொய்யானது!

உன்னை அதிசயமென்பதா
அழகின் இரகசியமென்பதா
இயற்கையின் வசியமென்பதா?
 
அச்சம் தவிர்


தயங்கி நின்றால்
நிழலும் அச்சம் தரும்;
துணிந்து சென்றால்
வானமே வசப்படும்!

அஞ்சி வாழ்வதும்
அண்டி வாழ்வதும்
ஐந்தறிவு உயிர்களின் நிலை,
ஆறறிவு மனிதனுடயதல்ல!

உதித்தெழுந்தால்தான் சூரியன்,
உறங்கிக் கொண்டிருந்தாலல்ல!
விழித்தெழுந்தால்தான் மனிதன்
வெட்டியாய் இருப்பதாலல்ல!

அச்சம் தவிர்த்தால்
செயல்திறன் வெளிப்படும்;
செயல்திறன் மேம்பட்டால்
அச்சம் விலகிவிடும்!

நமக்கென பாதை கண்டு
நயம்பட அதிலுழைத்து
நெறியுடன் வாழ்ந்தால்
நிச்சயம் வெற்றிதான்!
 
சும்மாயிரு சொல் பொருளொன் றறிந்திலேன்



கண்மூடி இருக்கும்போது
கதிரவன் இருந்தாலென்ன
காரிருள் இருந்தாலென்ன?

மூப்பு வந்தபின்னே
முயற்சி எடுத்தாலென்ன
முடங்கிக் கிடந்தாலென்ன?

சோறின்றி இருக்கையிலே
சொகுசு கேட்குமோ
சொந்தம் சேருமோ?

காற்றில்லா வேளையில்
காசுபணம் வேண்டுமோ
கார்பயணம் வேண்டுமோ?

வாழும் காலம்
வசந்தமாக வேண்டும்
வளம்கூட வேண்டும்.

பேசும் வார்த்தை
பயன் தரவேண்டும்
பலம் தரவேண்டும்.

செய்யும் செயல்
செம்மையாக வேண்டும்
சேவையாக வேண்டும்.
 
Sir,
[h=5]

கவிதை அருமை....... வாழ்த்துக்கள்.
[/h]

வாழ்க வளமுடன்


அன்புடன்

பாலசுப்ரமணி
 
Hello Siva sir,Your post 307 ,simply superb,casual words but more deep meaning in it. Challa baga undhi. When time permits contribute your thoughts to our forum :thumb: :yo: :cheer2: :high5:. .
 
வந்து விடு; வாழ விடு!



வாழ்வி லதிகம் விருப்பமில்லை
வஞ்சி யுன்னால் விடுதலை
வளம் கொண்ட விரலிடை - எனக்கு
வசந்தம் தரும் கோடை!

இதழ்களிடையே கொண்டுள்ளாய் கனி
இத்தனைநாளும் நான் தனி
இசைந்து வந்திடென் அணி - பொறுத்து
இருக்க முடியா தினி!

உரசலில் மதி கிரங்கியவன்
உன்னுள் கனவி லிறங்கியவன்
உடையை வெறுத் தொதுக்கியவன் - இரவில்
உன் நினைவி லுறங்கியவன்!

முத்தத்தால் செய் யுத்தம்
முனகல் மட்டுமே சத்தம்
முறையாய்க் கலப்போம் நித்தம் - உன்னுள்
முடங்குவதே யென் சித்தம்!

மணம் முடித்து சேருவதோ
மன முடைந்து சோருவதோ
மாலையே எவ்வேளையுமாய்க் கோருவதோ - என்
மயக்க மெப்போது தீருவதோ?
 
Last edited:
வாழ்க்கை முறை


வெளிச்சம் நாட வேண்டியது தான் - ஆனால்
விழுந்துவிடும் விட்டில் பூச்சிகளாய் அல்ல!

ஒளி தர வேண்டியது தான் - ஆனால்
ஒளிந்திருக்கும் நட்சத்திரங்களாய் அல்ல!

பொருள் தேட வேண்டும் தான் - ஆனால்
பிறர் கூண்டைத் தேடும் குயில்களாய் அல்ல!

வாழ்வு ஒரு கணிதம்
- வயதைக் கூட்டும் போது
வாழ்வியலைப் பெருக்கி,
திட்டம் வகுத்து
தேடுதலில் பொழுதைக் கழிக்க வேண்டும்!

வாழ்வு ஒரு இலக்கியம்
- பாத்திரத்தில் ஒன்றி
பதிவுகள் செய்ய வேண்டும்!

வாழ்வு ஒரு கலை
- வண்ணங்கள் சேர்த்து
வளம் பெற வேண்டும்!

இறக்கும்வரை வாழ்வதென்பது
இறக்கவில்லை என்பதால் வாழ்ந்திருத்தலல்ல;
இருக்கும்வரை சிறப்பது,
இனிமையாய் இறப்பது!
 
நீதான் என் உயிரெழுத்து!



வியம் பேசிக்கொண்டு,
ரமாய்ச் சற்று
டுங்கிக் கிடந்து,
க்கத்தில் தவித்து,
தற்கும் அஞ்சி,
யம் கொண்டு
ழ்வினையில் ஊறியவன்
ன்னைக் கண்டதும்
ண்டிங்கு வந்தேன்;
ன்பம் அடைந்தேன்,
றுதல் கொண்டேன்.
ன்பே, வா!
 
Last edited:
Thank you, Dr.Narayani.

Konjam romantic poems, konjam social poems nu balance panni ezhuthikitrukkein. :juggle:

Thank you for your encouragement.
 
Last edited:
வந்து விடு; வாழ விடு!



வாழ்வி லதிகம் விருப்பமில்லை
வஞ்சி யுன்னால் விடுதலை
வளம் கொண்ட விரலிடை - எனக்கு
வசந்தம் தரும் கோடை!

இதழ்களிடையே கொண்டுள்ளாய் கனி
இத்தனைநாளும் நான் தனி
இசைந்து வந்திடென் அணி - பொறுத்து
இருக்க முடியா தினி!

உரசலில் மதி கிரங்கியவன்
உன்னுள் கனவி லிறங்கியவன்
உடையை வெறுத் தொதுக்கியவன் - இரவில்
உன் நினைவி லுறங்கியவன்!

முத்தத்தால் செய் யுத்தம்
முனகல் மட்டுமே சத்தம்
முறையாய்க் கலப்போம் நித்தம் - உன்னுள்
முடங்குவதே யென் சித்தம்!

மணம் முடித்து சேருவதோ
மன முடைந்து சோருவதோ
மாலையே எவ்வேளையுமாய்க் கோருவதோ - என்
மயக்க மெப்போது தீருவதோ?

Dear Siva,

There is a lot of disconnect in your kavithai. The first stanza above is an enigma. வாழ்வி லதிகம் விருப்பமில்லை -ok. But how come வஞ்சி யுன்னால் விடுதலை ? And what is this வளம் கொண்ட விரலிடை What exactly do you want to say. I have a capacity to imagine and visualise but here I completely miss the idea. Will you please explain.

உன்னுள் கனவி லிறங்கியவன்If this is true this requires a prelude. Otherwise it stands alone. உடையை வெறுத் தொதுக்கியவன்--what is this ???

மாலையே எவ்வேளையுமாய்க் கோருவதோ--What are you saying?

These are just friendly querries. Please do not misunderstand. If you do not want to reply it is perfectly ok with me. Thanks.
 
Dear Siva,

There is a lot of disconnect in your kavithai. The first stanza above is an enigma. வாழ்வி லதிகம் விருப்பமில்லை -ok. But how come வஞ்சி யுன்னால் விடுதலை ? And what is this வளம் கொண்ட விரலிடை What exactly do you want to say. I have a capacity to imagine and visualise but here I completely miss the idea. Will you please explain.

உன்னுள் கனவி லிறங்கியவன்If this is true this requires a prelude. Otherwise it stands alone. உடையை வெறுத் தொதுக்கியவன்--what is this ???

மாலையே எவ்வேளையுமாய்க் கோருவதோ--What are you saying?

These are just friendly querries. Please do not misunderstand. If you do not want to reply it is perfectly ok with me. Thanks.



First of all, thank you for reading my work and also for sharing your views. I have attempted to respond to your queries below.


Dear Siva,

There is a lot of disconnect in your kavithai.
Not according to me. Let me explain.


The first stanza above is an enigma. வாழ்வி லதிகம் விருப்பமில்லை -ok. But how come வஞ்சி யுன்னால் விடுதலை ?
My spirits are low.
But you lift them up.


And what is this வளம் கொண்ட விரலிடை What exactly do you want to say. I have a capacity to imagine and visualise but here I completely miss the idea. Will you please explain.
வளம் கொண்ட விரலிடை - எனக்கு
வசந்தம் தரும் கோடை!
It is nice to be between your fingers (Your hug gives me warmth)


உன்னுள் கனவி லிறங்கியவன்If this is true this requires a prelude. Otherwise it stands alone.
I was deep down in you (I have been ‘intimate’ with you) in my dreams

உடையை வெறுத் தொதுக்கியவன்--what is this ???
And I (naturally) abandoned my clothes

மாலையே எவ்வேளையுமாய்க் கோருவதோ--What are you saying?
I ought to wish only evenings all the time (so that we can ‘unite’)?

These are just friendly querries. Please do not misunderstand. If you do not want to reply it is perfectly ok with me. Thanks.
It is actually heartening to see someone dissect my work of literature. I am only too happy to see that you took so much pain to interpret/analyse my work. Thank you for that. I look forward to more such posts. Thank you.


A loose translation:

Come, fall in love…… (I remember it as tag line of the popular Hindi movie DDLJ)

I am apathetic
But you lift my spirits up;
Your hug
Gives me warmth!

Your lips are sweet.
I have been longing for you all these days.
Please come to me
I can’t control myself anymore.

Your touch gave me kick
And I got intimate with you in my dreams.
I forsake my clothes
As I went to bed with your thoughts.

Wage a war of kisses
And let our (sweet) screams be the only sound.
Let’s follow the ‘natural course of action’
As I want to lose myself inside you!

Are we to unite in marriage?
Am I to be in a state of despair?
Ought I to seek only evenings?
When would I be normal?
 
Last edited:
vaazhkaiyil vasandam veesa katru kondom
vambai villaikku vangi petru kondom
netru irrunda manithan nijanthil niraindu nindran
inru ulla manithan nijanthai maraiththum maranthum vittan
aha ulage poi kolam ethanal ulagil por kolam
nijankalin ranangal nejai suduthae
ezhutha marrutthu en nejam verutthe
yasikkiren evariyum kavithaikku poi azahugu enru yosiththavariyum
pulankalin velippade kavithaikal pozhu pularum mun unmai unar
eththeemai un mun thondrum podum eritthu vidu poiyyai pozukki vidu
mei veetin menmai unarnthu vizhithu vaazhkai vasantham peru

r.vaithehi
 
மதங்கள் என்னபாவம் செய்தன? யானையை ஆட்டுவிக்கும் மதம் மதம்பிடித்து மனிதனல்லவாஇங்கு ஆடுகிறான்
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top