• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

எந்த வேலையும் கேவலம் இல்லை

Status
Not open for further replies.
எந்த வேலையும் கேவலம் இல்லை

எந்த வேலையும் கேவலம் இல்லை

Tamil_News_large_1155902.jpg



புதுடில்லி : 15 வருடங்களுக்கு முன் ஓட்டலில் பாத்திரம் கழுவியதை இன்று பெருமையாக நினைக்கிறேன் எனவும், எந்த வேலையும் கேவலம் இல்லை எனவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

டில்லியில் இன்று, மாநில கல்வி அமைச்சர்கள் மாநாடு, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில் நடைபெற்றது. பா.ஜ., எம்.பி., தருண் விஜய் எழுதிய திருவள்ளுவர் குறித்த நூலை வெளியிட்ட ஸ்மிருதி இரானி, திருவள்ளுவர் தினத்தன்று நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் திருவள்ளுவர் பற்றிய கட்டுரைப் போட்டி நடத்தப்படும் எனவும், இந்த போட்டிகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

ஹோட்டலில் பாத்திரம் கழுவியது பெருமை

தொடர்ந்து மாநாட்டில் பேசிய இரானி, 15 வருடங்களுக்கு முன் நான் மும்பையில் உள்ள ஓட்டல் ஒன்றில் பாத்திரம் கழுவினேன். நாம் செய்யும் வேலையில் உள்ள திறமை தான் நமக்கு அதற்கான அங்கீகாரத்தை பெற்றுத் தரும். பிளம்பரோ அல்லது மெக்கானிக்கோ எதுவாக இருந்தாலும் அந்த வேலை கேவலம் இல்லை. அதனால் அந்த தொழில்களை செய்ய நினைப்பதும் கேவலம் இல்லை. எனது உழைக்கும் திறமையை பார்த்து தான் மோடி என்னை அமைச்சர் பதவிக்கு தேர்வு செய்தார். அவர் எப்போதும் திறமைக்கே முக்கியத்துவம் அளிப்பவர்.

உழைப்பவர்களுக்கே அங்கீகாரம்


இப்போது அமைச்சர் ஆகி விட்டாலும், ஒரு காலத்தில் நான் பாத்திரம் கழுவியதை பெருமையாக நினைக்கிறேன். இது பெரிய விஷயமும் அல்ல. ஏனெனில், இது உழைப்பாளிகள் உள்ள நாடு. மேக் இன் இந்தியா திட்டத்தின் நோக்கம், திறமையான இந்தியாவை உருவாக்குவதே ஆகும். அவ்வாறு திறமையான இந்தியாவை உருவாக்கு வேண்டுமானால், உழைப்பாளர்களுக்கு உரிய அங்கீகாரத்தை அளிப்பதுடன், கண்ணியமாகவும் நடத்த வேண்டும். உழைப்பாளர்களுக்கும், அவர் செய்யும் தொழிலுக்கும் உரிய மரியாதையை அளித்தாலே சமூகம் நிச்சயம் உயர்வை பெரும் என தெரிவித்தார்.



Washed utensils in hotel 15 years back, reveals Smriti Irani | ???????? ????????? ???????? ????????? ????????????: ???????? ????? Dinamalar
 
Wow! Smriti Irani seems to have excellent command over the English language (have watched some of her video clips presiding over some event and giving speech in English in front of diverse audience that included some foreigners) and a strong, commanding personality! For a background in acting in Hindi TV serials and now, dishwashing in some hotel merely 15 yrs ago, Irani surely is greatly accomplished!
 
She has successfully and quietly resolved two illegal acts of institutions. 1. Replacing sanskrit with German in central schools and opening an offshore IIT without the knowledge of the governing council or getting govt permission. And despite an adverse media and offensive press. Hope she is able to deliver poll promises of the party.
 
Status
Not open for further replies.
Back
Top