எனது பையன் தை மாதத்தில் பிறந்தான். ஜென்ம மாதத்தில் அவனுக்கு உபநயனம் செய்யலாமா? மேலும், ஒற்றைப் படை வயதில் உபநயனம் செய்ய வேண்டும் எனும் போது, கர்ப்ப காலத்தில் இருந்து கணக்கு பண்ண வேண்டுமா? இல்லை பிறந்த நாளில் இருந்து கணக்கு பண்ண வேண்டுமா? தயை கூர்ந்து பெரியோர்கள் தெரிவித்து அருள வேண்டுகிறேன்.