• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

உடல் என்பது என்ன - பட்டினத்தார்

உடல் என்பது என்ன - பட்டினத்தார்

என்ன


#பட்டினத்தார்


“அங்கோடு இங்கோடு அலமருங்க கள்வர்
ஐவர் கலகமிட்டு அலைக்குங் கானகம்
சலமலப் பேழை – இருவினைப் பெட்டகம்
வாத பித்தம் கோழை குடிபுகுஞ் சீறூர்
ஊத்தைப் புன்தோல் உதிரக் கட்டளை
நாற்றப் பாண்டம் – நான் முழத்து ஒன்பது
பீற்றல் துண்டம் – பேய்ச்சுரைத் தோட்டம்
அடலைப் பெரிய சுடலைத் திடருள்
ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்
ஓயா நோக்கிடம்- ஓடும் மரக்கலம்
மாயா விகாரம் – மரணப் பஞ்சரம்
சோற்றுத் துருத்தி – தூற்றும் பத்தம்
காற்றில் பறக்கும் கானப் பட்டம்
விதிவழித் தருமன் வெட்டும் கட்டை
சதுர்முகப் பாணன் தைக்கும் சட்டை
ஈமக் கனலில் இடுசில விருந்து
காமக் கனலில் கருகும் சருகு
கிருமி கிண்டும் கிழங்கு”


“நீரில் குமிழி – நீர் மேல் எழுத்து
கண்துயில் கனவில் கண்ட காட்சி”


என்று நிலையில்லா இந்த உடலை – இந்த உலக வாழ்வை மிக அழகாக விவரிப்பார் பட்டினத்தார் ஆவார்


இதுமட்டுமல்ல“ஐம்பொறி மயக்கமும் இடும்பையும் பிணியும் இடுக்கிய ஆக்கையை
உயிர் எனும் குருகு விட்டு ஓடும் குரம்பையை
எலும்போடு நரம்பு கொண்டு இடையில் பிணித்துக்
கொழுந்தசை வேய்ந்தும் ஒழுக்கு விழுங் குடிலைச் சென்றடையும்


ஐம்புலப் பறவை அடையும் பஞ்சரத்தை(பஞ்சரம் என்றால் கூண்டு)


ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரத்தைக்
காசில் பணத்தில் சுழலும் காற்றாடியை”


“காமக் காற்றெடுத்து அலைப்பக்
கெடுவழிக் கரைசேர் கொடுமரக்கலத்தை
இருவினை விலங்கொடும் இயங்கு புற்கலனைக்
நடுவன் வந்து அழைத்திட நடுங்கும் யாக்கையைப்”


“ஒன்பதுவாய்த் தோல்பைக்கு ஒருநாளைப் போலவே
அன்பு வைத்து அலைந்தாய் நெஞ்சமே”


“எத்தனை நாள் கூடி எடுத்த சரீரம் இவை
அத்தனையும் மண் தின்பதில்லையோ”


“ஆங்காசப் பொக்கிசம் – கோபக் களஞ்சியம் – ஆணவத்தால்
நீங்கா அரண்மனை – பொய் வைத்த கூடம் – வீண்நீடி வளர்
தேங்கார் பெருமதில் – காமவிலாசம் – இத்தேகம் கந்தல்”


“விடக்கே – பருந்தின் விருந்தே – கமண்டல வீணன் இட்ட
முடக்கே – புழு வந்து உறையிடமே – நலம் முற்றும் இலாச்
சடக்கே – கருவி தளர்ந்து விட்டால் பெற்ற தாயும் தொடாத்
தொடக்கே” என்கிறார் நமது உடலை பார்த்து


(விடக்கு என்றால் தசைப்பிண்டம், முடக்கு என்றால் சிறு குடில், கமண்டல வீணன் என்றால் பிரமன், )


இப்படி நமது உடலை வர்னிக்கும் பட்டினத்தார் மரணம் வந்தால் என்ன நிகழும் என்பதையும் பல பாட்டுகளில் நமக்கு விளக்குகிறார்.


“கட்டி அணைத்திடும் பெண்டிரும் மக்களும் காலத்தச்சன்
வெட்டி முறிக்கும் மரம் போல் சரீரத்தை வீழ்த்தி விட்டால்
கொட்டி முழக்கி அழுவார் – மயானம் குறுகி அப்பால்
எட்டி அடிவைப்பாரோ?” என்று கேள்வி கேட்கிறார் பட்டினத்தார்
மயானத்திற்குப் பிறகு யார் வரப்போகிறார்கள்? யாரும் வரமாட்டார்கள்


“காதற்ற ஊசியும் வாராது காணுங் கடை வழிக்கே”
என்றும்,


“மனையாளும் மக்களும், வாழ்வும் தனமும் தன் வாயில் மட்டே
இனமான சுற்றம் மயானம் மட்டே-வழிக்கேது துணை


தினையாம் அளவு எள் அளவாகிலும் முன்பு செய்தவம்
தனையாள என்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே” ஆகும்


“அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே – விழி அம்பொழுக
மெத்திய மாதரும் வீதி மட்டே – விம்மி விம்மி இரு
கைத்தலம் மேல்வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே
பற்றித் தொடரும் இருவினைப் புணிணியமும் பாவமுமே” ஆகும்


என்று நற்செயலாம் தவத்தைச் செய்யச் சொல்கிறார் பட்டினத்தார்


இறந்த பின் நமது உடலை சொந்தம் கொண்டாடுபவர் யார் யார் என்று மிக விளக்கமாகப் பட்டினத்தார்
ஒரு பாடலிலே சொல்கிறார்


“எரி எனக்கென்னும் – புழுவோ எனக்கென்னும் – இந்த மண்ணும்
சரி எனக்கென்னும் – பருந்தோ எனக்கென்னும் – தான் புசிக்க
நரி எனக்கென்னும் – புன்னாய் எனக்கென்னும் – இந்நாறுடலைப்
பிரியமுடன் வளர்த்தேன் – இதனால் என்ன பேறு எனக்கே


எரியும் நரியும், புழுவும் பருந்தும் நாயும் சொந்தம் கொண்டாடப் போகும் இந்த உடலை நாம் எப்படி எல்லாம் போற்றி வாசனைத் திரவியங்கள் – அழகிய ஆடைகள் – சுவையான உணவுகள் கொடுத்துப் பேணிக் கொண்டிருக்கிறோம்


நற்செயல்களைப் புறந்தள்ளி ஆடை அலங்காரத்தில் நகைநட்டில் கவனம் செலுத்துகிறோம்


அறச்செயல்களை விரும்புவதில்லை நாம்


சிந்தித்துப் பார்க்க வேண்டிய கருத்துகள்


இறக்கும் தருவாயில் ஞானத் தெளிவு வந்து மனிதன் எப்படி எல்லாம் தனக்குள் புலம்புவான் என்பதை பட்டினத்தார் மிக அழகாகத் தொகுத்துத் தந்துள்ளார்


“வார்த்தைத் திறமில்லா மனிதருக்குப் புன் சொல்லாம்
சாத்திரங்கள் சொல்லிச் சதுர் இழந்து கெட்டேனே


மெத்த மெத்தச் செல்வாக்கில் வேறு மருள் எடுத்துத்
தத்தித் தலை கீழாய்த் தான் நடந்து கெட்டேனே


வழக்கத் தலங்களினும் மண் பெண் பொன் ஆசையினும்
பழக்கம் தவிராமல் பதி இழந்து கெட்டேனே


ஆணி பொருந்தும் அரும்பூமி அத்தனையும் (ஆணி என்றால் முதன்மை)
காணில் நமது என்று கனம் பேசிக் கொண்டேனே ஆசாரம் இல்லாத அசடருடன் கூடிப்
பாசாங்கு பேசிப் மதி இழந்து கெட்டேனே


குருமார்க்கம் இல்லாக் குருடருடன் கூடிக்
கருமார்க்கத்துள்ளே கருத்தழிந்து கெட்டேனே


ஆலம் அருந்தும் அரன் பெருமை எண்ணாமல்
பாலர் பெண்டிர் மெய் என்று மதி இழந்து கெட்டேனே


பிணவாசம் உற்ற பெரும்காயம் மெய் என்று
பண ஆசையாலே பதி இழந்து கெட்டேனே


கண்ட புலவர் தனக்கவே தான் புகழ
உண்ட உடம்பெல்லாம் உப்பரித்துக் கெட்டேனே


எண்ணிறந்த ஜென்மம் எடுத்துச் சிவபூசை
பண்ணிப் பிழையாமல் மதி இழந்து கெட்டேனே


சிற்றெறும்பு சற்றும் தீண்டப் பொறா உடம்பை
உற்றுருக்கவும் சுடவும் ஒப்பித்து மாண்டேனே


தன் உடம்பு தானே தனக்கும் பகையாம் என்று
எண்ணும் உணர்வு இல்லாமல் இன்பம் என்று மான்டேனே


தோல் எலும்பு மாமிசமும் தோல் அன்னத்தால் வளரும்
போல் எலும்பும் சுத்தமென்று வீறாப்பாய் மாண்டேனே


போக்குவரத்தும் பொருள்வரத்தும் காணாமல்
வாக்கழிவு சொல்லி மனம் முறுகிக் கெட்டேனே”


என்று மனம் புலம்ப பிரியப் போகும் உயிர் உடலைப் பார்த்து கிண்டல் செய்கிறது. வாழத் தவறிவிட்டாய் மனிதனே எனச் சுட்டிக் காட்டுகிறது


இறைவனை துதிக்கத் தவறினாயே எனப் பழி சுமத்துகிறது


“உடக்கை ஒருக்கி உயிரை அடைத்து வைத்த
சடக்கைச் சதம் என்று சார்ந்து அங்கு இறுமாந்தை
உடக்கைத் தகர்த்தே உயிரை எமன் கொள்கையிலே
அடக்கமாய் வைத்த பொருள் அங்கு வரமாட்டாதே


(உடக்கு என்றால் சுற்றாணி சடக்கு என்றால் தேகம்)


தித்திக்கும் தேனைத் தெவிட்டாத தெள்ளமுதை
முத்திக்கு வித்தான முப்பாழைப் போற்றாமல்
பற்றிப் பிடித்து இயமன் பாசத்தால் கட்டும் வண்ணம்
சுற்றி இருக்கும் வினை சூழ்ந்தனையே நெஞ்சமே


அஞ்செழுத்தாய் எட்டெழுத்தாய் ஐம்பத்தோர் அட்சரமாய்ப்
பிஞ்செழுத்தாய் நின்ற பெருமானைப் போற்றாமல்
வஞ்சகமாய் உற்ற முறை மாதல் வலைக்குள்ளாகிப்
பஞ்சரித்துத் தேடிப் பாலுக்கு இறைத்தோமே
(பஞ்சரித்து என்றால் கெஞ்சிப்பேசி)


அக்கு அறுகு கொன்றை தும்பை அம்புலியும் சூடுகின்ற
சொக்கர் திருத்தாளைத் தொழுது வணங்காமல்
மக்கள் பெண்டீர் சுற்றமுடன் வாழ்வை மிக நம்பி அன்பாய்
எக்காலமும் உண்டென்று எண்ணினையே நெஞ்சமே
(அக்கு என்றால் உருத்ராட்சம்)


ஆண்ட குருவின் அருளை மிகப் போற்றி
வேண்டும் கயிலாய வீட்டுவழி பாராமல்
பூண்ட குழல் மாது நல்லார் பொய் மாய்கைக்கு உள்ளாகித்
தூண்டில் அகப்பட்டுத் துடிக்கெண்டை ஆனேனே


பூவணர் போற்றும் புகழ் மதுரைச் சொக்கரது
சீர்பாதம் போற்றிச் சிவலோகம் சேராமல்
தாவாரம் தோறும் தலைபுகுந்த நாய்போலே
ஆகாத நெஞ்சமே அலைந்து திரிந்தாயே


ஞானம் பிறக்கிறது நெஞ்சுக்குள்


செய்ய மறந்ததைப் பட்டியலிடுகிறான் மனிதன்


மூலத்து உதித்து எழுந்த முக்கோணச் சக்கரத்துள்
வாலைதனைப் போற்றாமல் மதி மறந்தேன் பூரணமே


உந்திக் கமலத்து உதித்து நின்ற பிரமாவைச்
சந்தித்துக் காணாமல் தட்டழிந்தேன் பூரணமே


நாவிக் கமல நடுநெடுமால் காணாமல்
ஆவிகெட்டு யானும் அறிவிழந்தேன் பூரணமே


உருத்திரனை இருதயத்தில் உண்மையுடன் பாராமல்
கருத்தழிந்து நானும் கலங்கினேன் பூரணமே


விசுத்தி மகேசுவரனை விழி திறந்து பாராமல்
பசித்துருகி நெஞ்சம் பதறினேன் பூரணமே


நெற்றி விழியுடைய நிர்மல சதாசிவத்தைப்
புத்தியுடன் பாராமல் பொறி அழிந்தேன் பூரணமே


நாதவிந்து தன்னை நயமுடனே பாராமல்
போதம் மயங்கிப் பொறி அழிந்தேன் பூரணமே


உச்சி வெளியை உறுதியுடன் பாராமல்
அச்சமுடன் நானும் அறிவிழந்தேன் பூரணமே மூக்கு முனையை முழித்திருந்து பாராமல்
ஆக்கை கெட்டு நானும் அறிவிழந்தேன் பூரணமே


இடைபிங்கலையின் இயல்பு அறிய மாட்டாமல்
தடையுடனே யானும் தயங்கினேன் பூரணமே


ஊனுக்குள் நீ நின்று உலாவினதைக் காணாமல்
நான் என்று இருந்து நலன் அழிந்தேன் பூரணமே


மெய்வாழ்வை மிக விரும்பி மிக வாழாமல்
பொய்வாழ்வை நம்பிப் புலம்பினேன் பூரணமே


பெண்டு பிள்ளை தந்தை தாய் பிறவியுடன் சுற்றம் இவை
உண்டென்று நம்பி உடல் அழிந்தேன் பூரணமே


தண்டிகை பல்லக்குடனே சகல சம்பத்துகளும்
உண்டென்று நம்பி உணர்வு அழிந்தேன் பூரணமே


இந்த உடல் உயிரை எப்போதும் தான் சதமாய்ப்
பந்தமுற்று நானும் பதம் அழிந்தேன் பூரணமே


மாதர் பிரபஞ்ச மயக்கத்திலே விழுந்து
போதம் மயங்கிப் பொறி அழிந்தேன் பூரணமே


மண் பெண் பொன் ஆசை மயக்கத்திலே விழுந்து
கண் கெட்ட மாடு அது போல் கலங்கினேன் பூரணமே


தனிமுதலைப் பார்த்துத் தனித்திருந்து வாழாமல்
அநியாயமாப் பிறந்து இங்கு அலைந்து நின்றேன் பூரணமே


வாசிதனைப் பார்த்து மகிழ்ந்து உன்னைத் தான் போற்றாமல்
காசிவரைப் போய்த் திரிந்து கால் அலுத்தேன் பூரணமே
(வாசி என்றால் பிராணவாயு)


உடலுக்குள் நீ நின்று உலாவினதைக் காணாமல்
கடல் மலை தோறும் திரிந்து கால் அலுத்தேன் பூரணமே


எத்தேச காலமும் நாம் இறவாது இருப்போம் என்று
உற்று உனைத்தான் பாராமல் உருவழிந்தேன் பூரணமே


எத்தனை தாய் தந்தை இவர்களிடத்தே இருந்து
பித்தனாய் யானும் பிறந்து இறந்தேன் பூரணமே


பெற்று அலுத்தார் தாயார் பிறந்து அலுத்தேன் யானும் உன்றன்
பொன்துணைத்தாள் தந்து புகழ் அருள்வாய் பூரணமே


உற்றார் அழுது அலுத்தார் உறன்முறையார் சுட்டு அலுத்தார்
பெற்று அலுத்தால் தாயார் பிறந்து அலுத்தேன் பூரணமே


பிரமன் படைத்து அலுத்தான் பிறந்து இறந்து அலுத்தேன் நான்
உரமுடைய அக்கினி தான் உண்டு அலுத்தான் பூரணமே


என்னை அறியாமல் எனக்குள்ளே நீ இருக்க
உன்னை அறியாமல் உடல் இழந்தேன் பூரணமே


கருவாய் உருவாய்க் கலந்து உலகெலாம் நீயாய்
அருவாகி நின்றது அறிகிலேன் பூரணமே


செம்பொன் கமலத் திருவடியைப் போற்றாமல்
பாம்பை கொட்ட ஆடும் பிசாசானேன் பூரணமே


எனக்குள்ளே நீ இருக்க உனக்குள்ளே நான் இருக்க
மனக்கவலை தீர வரம் அருள்வாய் பூரணமே


குலம் ஒன்றாய் நீ படைத்த குறியை அறியாமல்
மலபாண்டத்துள் இருந்து மயங்கினேன் பூரணமே


ஐந்து பொறியை அடக்கி உனைப் போற்றாமல்
நைந்துருகி நெஞ்சம் நடுங்கினேன் பூரணமே


என்னைத் திருக்கூத்தால் இப்படி நீ ஆட்டுவித்தாய்
உன்னை அறியாது உடல் அழிந்தேன் பூரணமே


நரம்பு தசை தோல் எலும்பு நாற்றத்துக்குள்ளிருந்து
வரம்பறிய மாட்டாமல் மயங்கினேன் பூரணமே


உள்ளும் புறமுமாய் உடலுக்குள் நீயிருந்தது
எள்ளளவும் நான் அறியாது இருந்தேனே பூரணமே


தாயாகித் தந்தையாய்த் தமர் கிளைஞர் சுற்றம் எல்லாம்
நீயாகி நின்ற நிலை அறியேன் பூரணமே


விலங்கு புள் ஊர்வன அசரம் விண்ணவர் நீர்ச்சாதி
மனுக்குலங்கள் எழுவகையில் நின்ற குறிப்பறியேன் பூரணமே


ஆணாகிப் பெண்ணாய் அலியாகி வேற்றுருவு
மாணாகி நின்ற வகையறியேன் பூரணமே


வாழையாய்ப் பக்குவமாய் வளர்ந்து கிழம் தானாகி
பாலையாய் நின்ற பயன் அறியேன் பூரணமே....
 

Latest ads

Back
Top