• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

உஞ்சவிருத்தி

Status
Not open for further replies.

narayananms

Active member
இந்த வருட கிராம குடும்பத்தார் சார்பில் உஞ்சவிருத்தி நிகச்சியை நடத்த உத்தேசித்திருக்றோம். எப்படி நடத்துவது என்பதை தயவு செய்து தெறிவிக்கவும். சிறந்த நேரம் எது என்பதையும் (காலையா அல்லது மாலையா)
தெரிவிக்கவும்.
நன்றி
m s நாராயணன்
 
வணக்கம் திரு நாராயணன் அவர்களே, .
உங்கள் கேள்வி புரியவில்லை. உஞ்சவிருத்தியை நீங்கள் எங்கு நடத்த இருக்கிறீர் ? இப்பொழுது நீங்கள் பெங்களுருவில் இருப்பதாக சொல்கிறேள். ஆனால் கிராம குடும்பத்தார் சார்பில் உஞ்சவிருத்தி நிகச்சியை நடத்த உத்தேசித்திருக்றோம் என்று அறிவித்திருக்கிறேள். பெங்களுருவில் அதற்க்கு போதுமான வசதிகள் இருப்பதா என்றதை நீங்கள் தான் யோசிக்க வேண்டும்.


உஞ்சவிருத்தி சாதாரணமாக காலையில் தான் நடத்துவார்கள்
 
எங்களது குடும்பத்தைச் சேர்ந்தவர் களும் மற்றும் பிற குடும்பத்தினரும் வருடா வருடம் எங்கறளது கிளாமத்திற்கு சென்று பல விதமான நீகழ்ச்சிகளை நடத்துவோம் (சு தர்ஸன ஹோமம், ருத்ர அபிஷேகம் முதலியன). இந்த வருடம் உஞ்சவிருத்து நடத்துவதாய் உத்தேசித்துள்ளோம். இதை நடத்தும் வழிமுறைகள் என்ன என்று தான் கேட்டிருந்தேன்.

M s நாராயணன்
 
உஞ்சவிருத்தி என்பது என்ன?

micham


தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு
கிருஷ்ண பஜனை பாடி வீடு வீடாய்
ச் சென்று தானம் கேட்பதுதான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண
பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான்
தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம்
திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது
உஞ்சவிருத்தியின் தாத்பரியம்.


இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த
நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து
உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான்
வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம்.
உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு
தெருவில் இறங்கினால் இரண்டு மூட்டை வரை அரிசி கிடைக்கும். அதில் அன்றைய தேவைக்கு எனக்கானது
போக மிஞ்சியதை நான் தங்கி இருக்கும் முதியோர் இல்லத்திற்கோ அருகிலுள்ள அநாதை இல்லத்திற்கோ
கொடுத்து விடுவேன்.’’ என்கிறார் கல்யாணராமன்.


“உபன்யாசம் நடக்கும் இடங்களில் பட்டுச் சேலை, பட்டு வேட்டி வைத்துக் கொடுப்பார்கள். அதைக்கூட நான்
வைத்துக்கொள்வதில்லை. ஏழைப் பொண்ணுங்க திருமணத்துக்காகக் கொடுத்துவிடுவேன். உபன்யாசம் தவிர,
ஜோதிடம் பார்க்கிறேன். எனது உபன்யாசத்தை சி.டி., பென் டிரைவ்களில் பதிவு செய்து விற்பனை செய்கிறேன்.
இதிலெல்லாம் கிடைக்கும் வருமானத்தையும் நான் வைத்துக் கொள்ளாமல் ஏழைப் பெண்கள் திருமணத்திற்காக
பட்டு சேலை, மாங்கல்யம் எடுத்துக் கொடுத்து விடுவேன். எனக்காகவே பட்டுச்சேலையும் மாங்கல்யமும்
விலை குறைத்துத் தருவதற்குத் தெரிந்த கடைக்காரர்கள் இருக்கிறார்கள்.” என்கிறார்.


Source:
மிச்சமின்றிக் கொடுக்கும் மனிதர்
 
Source: உஞ்சவிருத்தி - தமிழ் இல் உஞ்சவிருத்தி

பெயர்ச்சொல்

சமூக வழக்கு: ஒவ்வொரு நாளும் காலையில் இறைவனைப் பற்றிய பாடல்களைப் பாடியபடி

வீடு வீடாகச் சென்று, ஒரு செம்பில் அந்தந்த வீட்டார் இடும் அரிசி, பருப்பு ஆகியவற்றைக் கொண்டு

அன்றன்றைக்கு உண்டு வாழும் முறை.
 
உஞ்சவிருத்தி பிராமணர் என்பவர்கள் பிராமணர்களில் ஒரு பிரிவினர். இவர்கள் தலையில் தலைப்பாகை கட்டி, காலில் சலங்கை கட்டி, இடது தோளில் ஒரு பித்தளைச் செம்பை கயிற்றில் கட்டித் தொங்கவிட்டபடி தம்பூராவை மீட்டியபடி சப்ளா கட்டையைத் தட்டி பசனைப்பாடல்களைப் பாடியபடி வீடுவீடாகச் சென்று அரிசி முதலான தானியங்களைத் தானமாகப் பெற்று அதை வீட்டுக்குக் கொண்டுவந்து சமைத்து உண்டு வாழ்பவர்கள் ஆவர். இதில் இன்னொரு பிரிவினர் அறுவடையான நெல் வயல்களிலில் சிதறிய தானியங்களை சேகரித்துவந்து வைத்து சமைத்து உண்பவ
 
உஞ்சவிருத்தி இருவகைப்படும்.
1)யாரிடமும் யாசகம் கேட்காமல் அறுவடை முடிந்ததும் அங்கு சிதறிக்கிடக்கும் நெல்மணிகளை பொருகிவந்து அரிசியாக்கி ஜீவனம் நடத்தும் முறை ஒன்று.

2)மற்றொன்று, தலையில் தலைபாகை கட்டிக்கொண்டு தோளில் ஒரு பித்தளைசொம்பில் கயிறுகட்டி தொங்கியபடி,ஒருகையில் சப்பலாகட்டையும் மறுகையில் தம்புராவும் மீட்டியபடி "கிருஷ்ண ராமா கோவிந்தா, ஹரே! ராம கிருஷ்ணா கோவிந்தா" என்றபடி பஜனைசெய்துவரும் பிராமணரின் பாதங்களைக்கழுவி தத்தம் இல்லம்மும் அவரது உஞ்சவிருத்தி பாத்திரத்தில் அரிசிமணி இடுவர்.
இதுவே உஞ்சவிருத்தி என்னும் உன்னதமான முறை.உஞ்சவிருத்தி பிராமணர்கள் வேறு எந்த தொழிலோ,வைதீக,ப்ரோகித கர்மங்களிலோ ஈடுபடமாட்டார்கள்.யாரிடமும் பணம் யாசிக்கமாட்டர்கள்.தெருக்களில் எதேர்ச்சையாக நாமசங்கீர்த்தனம் செய்தவாறு செல்வர். விருப்பட்டவர்கள் அரிசிமணி இடுவர்.கொடு என்றும் அவர்கள் யாரிடமும் கேட்கமாட்டார்கள். அவர்களது பத்திரம் நிரம்பியதும் இல்லம் திரும்புவர்.அதிகமாகவும் பெறமாட்டார்கள்.அரசி கிடைக்கவில்லை என்றால் அன்றையநாள் முழுதும் குடும்பத்துடன் பட்டினி தான்.அவர்களுக்கு தெரிந்து பகவானும் பகவான் நாம சந்கீர்தனமும்தான்.
ஏன் அவர்கள் உழைத்து உனக்கூடாத?என்று கேட்கலாம்.
வேதம் பார்பனர்களுக்கு விதித்துள்ள தர்மம் உழைக்க அல்ல.வேதம் கற்கவும் கற்பிக்கவும்,யாசகம் செய்யவும் யாசகமாக பெற்ற பொருள் அதிகமாக இருந்தால் தானம் செய்யவுமே.ஆனால் இன்று உண்மையான பார்பனர்களை காண்பது பகீரத பிரயதனாமாக உள்ளது.
பலகோடி ஜென்மங்களில் செய்த புண்ணிய பலனாகத்தான் ஒருவன் உஞ்சவிருத்தி பிராமணனாக உருவாக முடியும்.
இசை மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் உஞ்சவிருத்தி செய்தேதான் தன் வாழ்வை பக்திபூர்வமாக நடத்தினார்.

உஞ்சவிருத்தி பிராமணர்களில் வாழ்கை:-
*தினமும் பிரம்மமுகூர்த்தத்தில் தூக்கம் விழித்து,நீராடி சந்தியாவந்தனம்,அக்னிஹோத்ரம் முதலிய நித்யகர்மங்களை செய்வர்.
*பூசை முடித்து உஞ்சவிருத்தி செய்ய செல்வர்.மதியம் திரும்பி கிடைத்த பொருட்களை சமைத்து இறைவனுக்கு படைத்தது உண்பர்.
*ஏகாதசி முழு பட்டினி இருப்பார்.
*அதிகமாக எப்பொருளையும் சேர்க்கமாட்டார்.
*தங்களுக்கென சொந்தமாக காணிநிலம் கூட வைதிக்கொள்ள மாட்டார்.ஊரால் தர்ம சிந்தனையுடன் தரும் வீட்டில் தங்கள் காலம் இருக்கும்வரை வசிப்பர்.
*பணமோ,பொருளோ யாரிடமும் யாசகம் பெறமாட்டார்.
*பொருள்,பணம் ஈட்டும் நோக்குடன் எச்செயலையும் செய்ய மாட்டார்.
*தாங்கள் வாழும் வாழ்க்கை இறைவனுக்காக மட்டுமே வாழ்வார்.
Courtesy neerkondaar
 
[FONT=&quot]அந்தக் காலத்தில் பலப் பெரியோர்கள் உஞ்சவிருத்தி மேற்கொண்டு இருப்பார்கள். இதுவும் தவறாகப் பிட்சை எடுப்பது என்று அர்த்தம் கொள்ளப்பட்டு வருகிறது. உஞ்சம்= பொறுக்குவது. அதாவது அறுத்த வயலில் உதிர்ந்த நெல் மணிகளைப் பொறுக்கி அதில் உயிர் வாழ்வது. இந்த வாழ்க்கையை மேற்கொண்டு இருந்தவர் குசேலர். அடுத்தவகை இதற்கும் சற்று மேலானது. கபோத விருத்தி. மரத்தை வச்சவன் தண்ணி ஊத்தாமலா போய் விடுவான் (அட தப்பா நினைக்காதிங்க.. இது குடிக்கிற தண்ணி தான், அடிக்கிற தண்ணி இல்லை) என்று வாழ்வது. நாளை தேவை என்று எதையும் சேமித்து வைக்காதிருப்பது.[/FONT]

[FONT=&quot]இதை அடுத்த நிலை அகர விருத்தி எனப்படுவது. அதாவது மலைப்பாம்பு போல் அதிகம் உணவுக்கு என்று நகர்ந்து போகாமல் தன்னை நாடி வரும் உணவை உண்பது. இந்த வகை சார்ந்த பெரியோர்கள் அவர்கள் விருப்பம் போல் பல இடங்களுக்கு யாத்திரையாய் சென்று கொண்டே இருப்பார்கள். உணவு வேண்டும் என்று யாரிடமும் யாசிப்பவர்கள் இல்லை இவர்கள். நம்மை தேடி வராமல் அவர்கள் விருப்பம் போல் சென்று கொண்டே இருப்பவர்கள். இந்த வகையில் வாழ்ந்தவர் பட்டினத்தார்.[/FONT]

[FONT=&quot]"வாசல் தாண்டி வாராப் பிச்சைக்கு இங்கு ஆசைப்படுவதில்லை அய்யனே" என்கிறார் பட்டினத்தார். இவர்களைத்தான் செல்விருந்து என வள்ளுவர் குறிப்பிட்டார் என்பது வாரியார் கருத்து.[/FONT]
 
தியாகராஜரின் தந்தை ராமபிரம்மம் உஞ்சவிருத்தி எடுத்து வாழ்ந்தவர். கழுத்தில் ஒரு செம்பைக் கட்டி தொங்கிவிட்டிருப்பார். கையில் தாளக்கட்டை இருக்கும். ராம கீர்த்தனை பாடியவண்ணம் வீதியில் செல்வார். மக்கள் அந்த சொம்பில் அரிசி இடுவார்கள். சொம்பு நிறைந்ததும் வீடு திரும்பிவிடுவார். அவரது கடைசி நாளில் மகன் தியாகராஜரை அழைத்த அவர், எனது சொத்து இந்த உஞ்சவிருத்தி சொம்பும், நான் பூஜிக்கும் சீதாராம விக்ரகமும்தான். உள்ளம் உருகிப்பாடு; அந்த ராமன் ரட்சிப்பான் என்று சொல்லி உயிர்நீத்தார். அதையே கடைப்பிடித்து வாழ்ந்தார் தியாகராஜர். ராம விக்ரகத்துக்கு காலையில் திருப்பள்ளி எழுச்சி பாடி பூஜை செய்வார். பிறகு உஞ்சவிருத்திக்குச் செல்வார்.
 
ராமானுஜர் உஞ்சவிருத்தி செய்து அதில் கிடைக்கும் அரிசியையோ தானியங்களையோ கொண்டு உணவு சமைத்து சாப்பிடுபவர். இதில் சில நிபந்தனைகள் உள்ளன. ஒருவேளை உணவுக்கான தானியங்களைத்தான் பிக்ஷையாகப் பெற வேண்டும். பிக்ஷை பெற்ற தானியம் பூராவையும் சமைத்துவிட வேண்டும். மறுவேளைக்குக்கூட சேமித்து வைக்கக் கூடாது. தொடர்ந்து மூன்று வேளைக்குமேல் ஒருவீட்டில் பிக்ஷை கேட்கக் கூடாது
 
[FONT=&quot]பசும்பால் கறக்கும் சமயம். பசு மாட்டின் காம்பில் இருந்து பால் பாத்திரத்தில் விழுவதற்கு எவ்வளவு நேரம் ஆகுமோ அவ்வளவு நேரம் தான், உஞ்சவிருத்தி செய்பவர் ஒரு இல்லத்தின் வாயிலில் நிற்கலாம் என சாஸ்த்திரம் .. உஞ்சவிருத்தி செய்பவரை காக்கவைக்க்க்கூடாது. தர்மம் செய்பவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்கிற உண்மையும் இதன் மூலம் தெரியவருகிறது. பணமும், பலமும் இருக்கிற அகங்காரம் போக வேண்டும் என்பதே இதில் உள்ள அடிப்படைக் கருத்து.[/FONT]
[FONT=&quot]இந்த பிராமணர், சேகரித்து வைத்துக் கொள்ளும் பொருளாதாரப் பாதுகாப்புப் பாதிப்புகளைத் தாண்டி, ‘எல்லாம் ஈசன் செயல்’ என்று வாழும் ஞான வாழ்வினர்[/FONT]
 
Yes. Now a days it is not done like that because no one puts unchavrithi to anyone even in Brahmin households.In my place when it happened, only 4 houses asked them to come including my house.
 
Source: உஞ்சவிருத்தி - தமிழ் இல் உஞ்சவிருத்தி

பெயர்ச்சொல்

சமூக வழக்கு: ஒவ்வொரு நாளும் காலையில் இறைவனைப் பற்றிய பாடல்களைப் பாடியபடி

வீடு வீடாகச் சென்று, ஒரு செம்பில் அந்தந்த வீட்டார் இடும் அரிசி, பருப்பு ஆகியவற்றைக் கொண்டு

அன்றன்றைக்கு உண்டு வாழும் முறை.

Do women participate in உஞ்சவிருத்தி?
 
One more point for members of Women's Lib to DO :fencing: with men folk!!

MALE CHAUVINISM!!! :mad:

Females are protected from hardships in previous days. Now a days women wants hardships means who can stop?



This is about Nadanagopala Nayagi Swamigal of Madural


https://m.facebook.com/smngns/posts/876947325699092

He then returned Madurai and walked like a lady in the street of Madurai for Unchavirithi. Then he would spend the day in Bajan and Keerthans along with his ...
 
Status
Not open for further replies.
Back
Top