இலவசம்

Status
Not open for further replies.


ஒரு பொருள்,
இரண்டு வாங்கினால்,
மற்றொன்று இலவசம் என்றார்.
ஆனாலும் நான் வாங்கவில்லை;
காத்திருந்தேன்.

சில நாட்களுக்குப் பின்,
ஒன்று வாங்கினால்,
இன்னொன்று இலவசம் என்றார்.
அப்போதும் நான் வாங்கவில்லை;
காத்திருந்தேன்.

இன்னும் சில நாட்கள் கழிந்த பிறகு,
ஒன்று வாங்கினால்,
மேலும் இரண்டு இலவசமாகத்
தருவோம் என்றார்.
அப்போதும் நான் வாங்காமல்
இன்னும் காத்துக் கொண்டிருக்கிறேன்.

எதற்காகத் தெரியுமா?
ஒன்று வாங்கினால்,
அந்த ஒன்றையே
இலவசமாகத் தரும் காலம்
வராமலா போய் விடும்?
 
யானையையும், பூனையும்.

யானை விற்கச் சென்ற இடத்தில்
சொன்னார்கள் உயர் அதிகாரிகள்;
யானை விற்ற பணத்தில் பாதியை
செலுத்தவேண்டும் அரசு வரியாக!

மீன் குட்டிக்கு நீரில் நீந்தவும்,
மான் குட்டிக்கு நன்கு ஓடவும்,
தெனாலி ராமனுக்கு பேசவும்
கற்றுத்தரவேண்டுமா என்ன?

"பூனை வாங்கினால் பெரிய
யானை இலவசம்" என்றான்!
பூனை விலையைக் கேட்டால்
"பத்தாயிரம் பவுன்" என்றான்.

பத்தாயிரம் பவுன் அளித்து
பூனையையும் யானையையும்
வாங்கிச் சென்றார் ஒருவர்.
வரி செலுத்தவில்லை தெனாலி!

வல்லவனுக்கு வல்லவனும்
எத்தனுக்கு எத்தனும் உள்ள
வையகத்தில், வலிமையை
வெல்லும் புத்தி சாதுரியம்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
:third:
 
Status
Not open for further replies.
Back
Top