• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

இருபதாயிரம் தமிழ் பழமொழிகள்

Status
Not open for further replies.
இருபதாயிரம் தமிழ் பழமொழிகள்

தமிழ் மொழி மிகவும் வளமான மொழி. உலகிலேயே அதிகமான பழமொழிகள் இதில் தான் இருக்கின்றன. சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்னர் மூன்று ஆங்கிலேயர்கள் 19,000க்கும் மேலான பழமொழிகளைத் தொகுத்து ஆங்கில மொழிபெயர்ப்புடன் வெளியிட்டனர். சம்ஸ்கிருதத்தில் சுபாஷிதங்கள் எனப்படும் பாடல் வகை நீதிக் களஞ்சியம், தனிப்பாடல்கள் இருபதாயிரத்தும் மேலாக இருக்கின்றன. ஆயினும் தமிழ் மொழிதான் பழமொழித் தொகுப்பில் உலகில் முன்னிலையில் நிற்கிறது.

வெள்ளைக்கரகள் தொகுப்பதற்கு முன்னரும் தமிழ் மொழியில் பழமொழித் தொகுப்பு இருந்தது. இதை பெர்சிவல் என்பவரே தன் நூல் முகவுரையில் குறிப்பிடுகிறார். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர் பெருமான் பழ மொழிகளைக் கொண்டே சிவன் மீது ஒரு பதிகம் பாடிவிட்டார். அதற்கு முன்னர் முன்றுரை அரையனார் என்பார் பழமொழி 400 என்ற தொகுப்பில் 400 வெண்பாக்களையும் பழமொழிகளைக் கொண்டு முடிக்கிறார். இப்படி ஒரு நூல் உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லை. இதிலும் தமிழுக்கே முதலிடம்!! கம்பன், தன் ராமாயணத்தில் நிறைய பழமொழிகளைக் கையாளுகிறான்.

பழமொழி என்பது என்ன? ஒரு சமூகத்தின் பழங்கால ஞானம், அறிவு ஆகியன ரத்தினச் சுருக்கமாக பேச்சு நடையில் வெளிப்படும் ஒரு சொற்றொடர். தமிழ் பழமொழிகள் பேசாத பொருளே இல்லை. ஆகையால் தமிழ் பழமொழிகளை இந்த சமூகத்தின் கலைக்களஞ்சியம் என்று கூறலாம்.

தனிப்பாடல்கள், சங்க இலக்கியப் பாடல்கள் அல்லது திருக்குறள் போன்ற நீதிநெறி இலக்கியப் பாடல்கள் கற்றோருக்கு மட்டுமே தெரியும். ஆனால் பழமொழிகளோ எனில் எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கும் தெரியும். கிராமப் புறப் பெண்களின் வாயில் பழமொழிகள் புகுந்து விளையாடும். சண்டை சச்சரவானாலும் சரி, பொழுதுபோக்கு அரட்டைக் கச்சேரியானாலும் சரி, கிண்டல், வேடிக்கையானாலும்சரி எல்லா இடங்களிலும் சரளமாகப் புழங்கும்
ஆயிரக கணக்கான ஆண்டு அனுபவம், பழமொழிகளில், எதுகை மோனையுடன் வரும் நாலைந்து சொற்களில் அடங்கிவிடும்

யானை பற்றி நூறு பழமொழிகள்

யானை பற்றி மட்டுமே நூற்றுக்கும் மேலான பழமொழிகள் கிடைத்திருக்கின்றன. பறவைகளில் காகமும், பிராணிகளில் யானையும் தமிழர்களை மிகவும் கவர்ந்துவிட்டதன. ஆனை வரும் பின்னே, மணி ஓசைவரும் முன்னே, ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன், யானை உண்ட விளாங்கனி போல, யானை தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக்கொள்ளும், யானைக்கும் கூட அடி சறுக்கும்--- இப்படி நூற்றுக்கும் மேலாகப் படிக்கலாம்

சமயம், பெண்கள், பண்புகள், உணவு, மருத்துவம், பழக்க வழக்கங்கள், மிருகங்கள், தாவரங்கள், ஜாதிகள், அரசு, தொழில்கள், சோதிடம், அறிவியல், வானசாத்திரம், பருவநிலை, விவசாயம்—இப்படி ஏராளமான விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். 20,000 பழமொழிகள் ஒவ்வொன்று பற்றியும் ஆராய்ந்து தனித் தனி கட்டுரை எழுதலாம். சில பழமொழிகளுக்கு நேரிடையான பொருளும் எதிர்ப்பத பொருளும் கிடைக்கும்.

முதல் முதலில் ரெவரண்டு பெர்சிவல் என்பவர் 1842 ஆம் ஆண்டு 2000-க்கும் குறைவான பழமொழிகளுடன் ஒரு புத்தகம் வெளியிட்டார். பின்னர் அவரே 1877 ல் மூன்றாம் பதிப்பை வெளியிட்ட போது அதில் 6156 தமிழ் பழமொழிகள் இருந்தன. அவர் தொகுப்பில் விட்டுப் போன பழமொழிகளாக எடுதுத் தொகுத்து 9415 பழமொழிகளுடன் ஜான் லசாரஸ் என்பவர் 1894ல் வெளியிட்டார். பின்னர் ரெவரண்ட் ஹெர்மன் ஜென்சன் என்பவர் 1897ம் ஆண்டில் 3644 பழமொழிகளுடன் இன்னும் ஒரு நூலை வெளியிட்டார். இவற்றைத் தொகுத்தவர்கள் ஆங்கிலேயர்கள். அவர்களுக்கு இதன் பொருளை விளக்கியதில் நம்மவரின் பங்கே அதிகம் அதுமட்டுமல, நம்மவர்களும் பழமொழிகளைத் திரட்டித் தந்தனர். இந்த 3 புத்தகங்களும் தமிழ் பழமொழிகளின் ஆங்கில மொழி பெயர்ப்புகளுடன் வந்தன.

சமயம் பற்றிய பழமொழிகள் (பழமொழிகளில் இந்து மதம் என்ற என் கட்டுரையைப் படிக்கவும்):
தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் (நரசிம்மாவதாரம் கதை), எல்லாம் அவன் செயல், நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும், தலைக்கு வந்தது தலைப் பாகையுடன் போனது (கர்ணன் கதை) இப்படி மதம் தொடர்பாக நூற்றுக் கணக்கில் பழமொழிகள் உண்டு.

சோதிடப் பழமொழிகள்

ஓடிப் போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு, அகப் பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி,முப்பது ஆண்டு வாழ்ந்தவனும் இல்லை, முப்பது ஆண்டு தாழ்ந்தவனும் இல்லை (சனிக் கிரகத்தின் சுழற்சி), பரணி தரணி ஆள்வான், அவிட்ட நட்சத்திரக் காரனுக்கு தவிட்டுப் பானை எல்லாம் தங்கம்—இப்படி நிறைய சோதிட பழமொழிகள் .

ஆயிரக் கணக்கான ஆண்டுகளில் ஒரு சமுதாயம் சம்பாதித்த அனுபவம் எல்லாவற்றையும் பழரசமாகப் பிழிந்து கொடுப்பது போன்றது பழமொழி.

பெண்களுக்கும் ஜாதிகளுக்கும் ஆதரவாகவும் எதிராகவும் பழமொழிகள் கிடைக்கின்றன. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே, பெண் என்றால் பேயும் இரங்கும், பெண் பாவம் பொல்லாதது, பெண் புத்தி பின் புத்தி இப்படி எதிரும் புதிருமாகப் படிக்கலாம்.

ஆலும் வேலும் பல்லுக் குறுதி, வறுத்த பயற்றை விடாதே, சுட்ட எண்ணெயைத் தொடாதே, உடம்பைக் கடம்பால் அடி, அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம், சுப்பிரமணியத்துக்கு மேல் தெய்வமும் இல்லை, சுக்குக்கு மேல் மருந்தும் இல்லை, மருந்தே ஆயினும் விருந்தோடு உண்--- இப்படி நூற்றுக் கணக்கான மருத்துவப் பழமொழிகள்.

ஆடிப் பட்டம் தேடி விதை, எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை பெய்யும் என்பன பருவ நிலை, விவசாயம் பற்றிப் பேசும்.

தாய்க்குப் பின் தாரம் என்று சினிமாப் பட தலைப்புகளில் கூட பழமொழி இடம்பெறும்

இரு பொருள்படும் பழமொழிகள்

சில பழமொழிகளுக்கு இன்றுவரை அர்த்தமே தெரியவில்லை. இன்னும் சில பழமொழிகளுக்கு இருவேறு விதமாகப் பொருள் சொல்லலாம். தனக்கு மிஞ்சித்தான் தான தருமம் என்று ஒரு பழமொழி. இது தன் சக்திக்கும் அப்பால் போய் ஒருவர் செய்வதே தானம் என்பாரும் உளர்; தனக்குப் பின் மிஞ்சிப் போனதைக் கொடுப்பதே தானம் என்பாரும் உளர். ஆக இது போன்ற பழமொழிகளுக்கு அவரவர் விருப்பப்படி வியாக்கியானம் செய்யலாம்!!

உலகில் எல்லா மொழிகளிலும் பழமொழிகள் இருக்கும். சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்பதோடு அதைப் பேச்சு மொழியில் சுவைபடச் சொல்லுவதே இதன் இலக்கணம். தமிழ் மொழியில் இது உச்சநிலையை எட்டி, தமிழுக்குத் தனிப் பெருமையை ஈட்டித் தந்துள்ளது.

***************
 
இன்னும் சில பழமொழிகளுக்கு இருவேறு விதமாகப் பொருள் சொல்லலாம். தனக்கு மிஞ்சித்தான் தான தருமம் என்று ஒரு பழமொழி. இது தன் சக்திக்கும் அப்பால் போய் ஒருவர் செய்வதே தானம் என்பாரும் உளர்; தனக்குப் பின் மிஞ்சிப் போனதைக் கொடுப்பதே தானம் என்பாரும் உளர். ஆக இது போன்ற பழமொழிகளுக்கு அவரவர் விருப்பப்படி வியாக்கியானம் செய்யலாம்!!
'அஞ்சாவது பெண் கெஞ்சினாலும் கிடைக்காது'.

பொதுவாகக் கூறும் பொருள்: ஐந்தாவதாகப் பெண் பிறப்பது மிகவும் அருமை!

என் அண்ணன் சொன்ன ரு வேடிக்கையான விளக்கம் இதோ:

ஐந்தாவதாகப் பிறக்கும் பெண், கெஞ்சினாலும் அவளுக்கு எதுவும் கிடைக்காது!!

 
ராஜி ராம் அவர்களுக்கு நன்றி. பழமொழி ஆராய்ச்சி இதுவரை அதிகம் தொடாத ஒரு துறை. உங்கள் அண்ணன் கூறுவதும் சரியாக இருக்கலாம். நிறைய ஆராய்ச்சிகள் செய்ய நல்ல வாய்ப்புள்ள துறை.
 
ராஜி ராம் அவர்களுக்கு நன்றி. பழமொழி ஆராய்ச்சி இதுவரை அதிகம் தொடாத ஒரு துறை. உங்கள் அண்ணன் கூறுவதும் சரியாக இருக்கலாம். நிறைய ஆராய்ச்சிகள் செய்ய நல்ல வாய்ப்புள்ள துறை.
என் அண்ணன் கூறுவது ஒரு வேடிக்கையான விளக்கம்!! :)
 
How about: பொன் அகப்பட்டாலும் புதன் அகப்படாது?
I bet this can apply to every day of the week. One in seven chance. Isn't it?
 
பொன் அகப்பட்டாலும் புதன் அகப்படாது?

வாரத்தின் மத்தியில் சுறுசுறுப்பு அதிகம் இருக்குமோ? கச்சேரி சில பாட்டுக்ளுக்குப் பின் 'சூடு பிடிப்பது' போல!


பல பழமொழிகள் பற்றிச் சர்ச்சைகள் உண்டு. உதாரணத்திற்கு, 'ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்!'

என்பார்கள் சிலர். அது தவறு. 'பெண் மூலம் நிர்மலம்' (களங்கம் அற்றது) என்பதே சரி என்போரும் உண்டு!


வழக்குத் தமிழால் திசை மாறிப் போன பழமொழிகள் பல.
உதாரணத்திற்கு,

'குறிக்குத் தப்பாத ராம சரம்' என்பது 'குருவிக்கு ஏத்த ராமேஸ்வரம்'
என்று மாறியது!

 
சோதிடப் பழமொழிகள், நட்சத்திரம் பற்றிய பழமொழிகள் எல்லாம் சர்ச்சைக்குறியவை. அவரவர்கள் தங்களுக்குச் சாதகமாகச் சொன்னவை. 12 ராசிக்குள் அல்லது 27 நட்சத்திரங்களுக்குள் உலகில் உள்ள 600 கோடிப் பெயர்களையும் வகைப் படுத்துவது அறிவுபூர்வமனது அல்ல.மிகவும் பொதுப்படையானவை. அதை சீரியஸாக எடுத்துக்கொள்வது மடமை.
 
Dear Mr. Swaminathan,
Can you please tell me where I can find that treasure of 20,000 Tamil proverbs?
I need at least 200 more to complete my blog of 810 proverbs and to make it a blog of 1010 proverbs.
 

வாரத்தின் மத்தியில் சுறுசுறுப்பு அதிகம் இருக்குமோ? கச்சேரி சில பாட்டுக்ளுக்குப் பின் 'சூடு பிடிப்பது' போல!


பல பழமொழிகள் பற்றிச் சர்ச்சைகள் உண்டு. உதாரணத்திற்கு, 'ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்!'

என்பார்கள் சிலர். அது தவறு. 'பெண் மூலம் நிர்மலம்' (களங்கம் அற்றது) என்பதே சரி என்போரும் உண்டு!


வழக்குத் தமிழால் திசை மாறிப் போன பழமொழிகள் பல.
உதாரணத்திற்கு,

'குறிக்குத் தப்பாத ராம சரம்' என்பது 'குருவிக்கு ஏத்த ராமேஸ்வரம்'
என்று மாறியது!

நான் அறிந்தது இப்படி: ஆனி மாத ஒன்றாம் பாத மூலம் சிறந்தது, பின் (நான்காம் பாத) மூலம் கேடு செய்யும். எத்தனையோ சொற்கள் மாறி விட்டன. எத்தனையோ பழமொழிகளும் மாறி இருக்கலாம். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது பொன் கிடைக்காதவர்களின் மனநிலையை உயர்த்துவதற்கு கூறி இருக்கலாம். அது தவிர, ஒன்பது கோட்களில், புதன் பொதுவாக நன்மை பயக்கும்.
 
நான் ரசித்த ௨ புழுக்கைகள்.
[FONT=Arial, Helvetica, sans-serif]
[/FONT]௧,முசபுழுக்கை வயலில் இருந்தால் என்ன வரப்பில் இருந்தால் என்ன.
௨.எள்ளு எண்ணைக்காக காய்கிறது; எலிப்புழுக்கை எதற்காக காய்கிறது.
 
Last edited:
'அஞ்சாவது பெண் கெஞ்சினாலும் கிடைக்காது'.

பொதுவாகக் கூறும் பொருள்: ஐந்தாவதாகப் பெண் பிறப்பது மிகவும் அருமை!

என் அண்ணன் சொன்ன ரு வேடிக்கையான விளக்கம் இதோ:

ஐந்தாவதாகப் பிறக்கும் பெண், கெஞ்சினாலும் அவளுக்கு எதுவும் கிடைக்காது!!

ஐந்து பெண்ணை பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்(அந்த காலத்தில்).
 
Here are references for two books (with less than 30,000 proverbs )

1) Tamil Proverbs With Their English Translation This book has 6156 Tamil proverbs with English Translation[TABLE="width: 954"]
[TR]
[TD]2) A Classified Collection of Tamil Proverbs

This book's contents can be searched through google books
A Classified Collection of Tamil Proverbs - Herman Jensen - Google Books




Herman Jensen
0 Reviews
Asian Educational Services, Nov 1, 1993 - 499 pages

A huge collection of Tamil proverbs arranged under several headings. There are 3644 proverbs listed under about 300 headings. This book is a reprint of the 1897 edition.


[/TD]
[/TR]
[/TABLE]
 
Item #2 is available as a PDF version. You have to search for it.
Rev. Herman Jensen's compilation is pretty detailed. He gives the proverb in Thamizh text, a translation into English, an equivalent English proverb in many cases (from the Bible), and an elaborate index of the keywords.
 
ஐந்து பெண்ணை பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்(அந்த காலத்தில்).

ஐந்து பெண்ணை பெற்றால் ஆண்டி அரசன் ஆவான் (inthak kaalaththil!!!)
 
Here are references for two books (with less than 30,000 proverbs )

1) Tamil Proverbs With Their English Translation This book has 6156 Tamil proverbs with English Translation[TABLE="width: 954"]
[TR]
[TD]2) A Classified Collection of Tamil Proverbs

This book's contents can be searched through google books
A Classified Collection of Tamil Proverbs - Herman Jensen - Google Books
[/TD]
[/TR]
[/TABLE]
Thank you very much Sir. A few translations in the first collection are funny!!
 
Please google for Tamil proverbs by John Lazarus or Rev. P Percival or Rev. Herman Jensen.
One of the books from the above three is avaialble on google books for free of cost.

All the three books are available here at the University of London library.

Connemara Library may have these copies.

Good Luck

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பழமொழிகள் அடங்கிய புத்தகம் வெளியிட்டிருக்கிறது. அது என்னிடம் கைவசம் உள்ளது. பழமொழி நானூறு எல்லா இடங்களிலும் கிடைக்கும். அதில் 400 பாடல்களில் 400 பழமொழிகள் உண்டு. கம்ப ராமாயணத்தில் பழமொழிகள் என்ற நூலில் கம்பன் பயன்படுத்திய பழமொழிகள் எல்லாம் கிடைக்கும். என் சி பி எச் பதிப்பகம் பழமொழிகளில் மரங்கள், பழமொழிகளில் மருத்துவமென்ற தலைப்புகளில் சிறு சிறு புத்தகங்கள் வெளியிட்டன. சுருக்கமாகச் சொன்னால் நூலகத்துக்கோ அல்லது பெரிய புத்தகக் கடைக்கோ போனால் எளிதில் காரியம் முடியும்
 
dear raji ram !
olden days it was said kathu eruvanthan pennai nethuvanthavan konduponar pola
kathu eruthavanukkum ellai , nethu vanthavanukkum ellai,konduvarubavanukkuthan pennu enpathu puthu mozhi

ul ooril villai pokathathu veli ooril vilai pokuma?-old proverb
ul ooril kidaikkatha velai/salary veli ooril kidaikkum enpathu puthu mozhi
guruvayurappan
 
ஐந்து பெண்ணை பெற்றால் ஆண்டி அரசன் ஆவான் (inthak kaalaththil!!!)
dear Vr !
do not know whether andi becoming arsan or vice versa ,but that man will be a popular person in that area and receive all favour from his neighbour
in the present days shortage of brides for eligible bachelors
guruvayurappan
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top