• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

இயற்கையோடு இணைந்த பொங்கல் திருவிழா

  • Thread starter Thread starter V.Balasubramani
  • Start date Start date
Status
Not open for further replies.
V

V.Balasubramani

Guest
இயற்கையோடு இணைந்த பொங்கல் திருவிழா

[h=2]இயற்கையோடு இணைந்த பொங்கல் திருவிழா[/h][h=1]தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை என்பது இயற்கை, விவசாயம், தாவரங்கள் போன்றவற்றை வணங்கும் பொருட்டு கொண்டாடப்படும் பெருவிழாவாகும்.[/h]
201801131439555689_pongal-festival_SECVPF.gif


மனித வாழ்விற்கு பேருதவி புரிவன இயற்கையே அந்த இயற்கையை தெய்வமாக பாவித்து அதனை வணங்கு வதே பொங்கல் பண்டிகையின் சிறப்பு. பொங்கல் பண்டிகை நான்கு நாட்களில் கொண்டாட்டம் என்பது போகி, சூரிய பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என்றவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது. இயற்கையை வணங்குவது என்பதில் போகி பண்டிகை அன்று மழை கடவுளான இந்திரனை வணங்கும் பண்டிகை. பழையவனவற்றை நீக்கி, வீடுகளை சுத்தப்படுத்தி இந்திரனை வணங்கி செய்து போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

மறுநாள் பொங்கல் பண்டிகையில் இயற்கை தெய்வமாக கண்ணுக்கு காட்சி தரும் சூரிய பகவானை வணங்கும் சூரிய பொங்கல், சூரியனை வணங்குவது மட்டுமல்லாது தமது பொங்லே சூரியனின் கண்ணெதிரே நிகழும் வண்ணம் வாசல், பகுதியில் பொங்கல் வைத்து படையலிடப்படுகிறது.

விவசாயத்திற்கு உதவிய உழவு கருவிகளையும், நிலத்தை உழுத காளை மாடுகளையும் வீட்டில் வளர்த்த பசுமாடுகளையும் வணங்கும் விதமாக மாட்டு பொங்கல் அல்லது உழவர் திருநாள் கொண்டாப்படுகிறது. விவசாயம் செழிக்க உதவிய எல்லா பொருட்களும் விவசாய பணிகளை மேற்கொண்ட விவசாய தொழிலாளர்களையும் அரவணைத்து புத்தாடை, புதுநெல் வழங்கி ஆரவாராமாய் விவசாயத்திற்கான பொங்கல் விழா கொண்டாட்டம் நிகழ்கிறது.


பொங்கல் விழாவில் பிரதான இடம் பிடிப்பது புது நெற்கதிர்தான். இதனை நெய் குவியலாய் கலந்து மேட்டில் குவித்து வைத்துதான் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவர். அந்த புதுநெற்கதிரை குத்தி அரிசி எடுத்து, அந்த அரிசியில்தான் பொங்கல் செய்து இயற்கையை விவசாயத்தில் தமக்கு உணவிடும் தாவரங்களையும் வணங்குகின்றனர்.

நெற்கதிர்களுடன், கரும்பு, வாழை, மஞ்சள், இஞ்சி, வள்ளிக்கிழங்கு, சேனைகிழங்கு, சிறு கிழங்கு, பனங்கிழங்கு, சேப்பங்கிழங்கு போன்றவையும் பூசணி, மொச்சை, சுரைக்காய், கத்திரி போன்றவைகளும் வணங்கப்படுகின்றன. நெல்லும், கரும்பும் பிரதான தாவரமாகவும் பிற தாவரங்கள் கூடுதல் தாவரமாகவும் தொடர்ந்து பொங்கல் திருவிழாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயமும், இயற்கையும், நம் உணவு பொருளாக தாவரங்களும் வணக்கத்திற்குரியவையாக வணங்கப்பட்டு தொடர்ந்து நமது தமிழ் பண்பாட்டையும், வாழ்வாதாரத்தையும் பேணி காக்கும் விதமாகவும் பொங்கல் திருவிழா அமைந்துள்ளது.
[h=1]நன்றி : http://www.maalaimalar.com/Devotional/Worship/2018/01/13143955/1140102/pongal-festival.vpf[/h]
 
"சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை."

உழவின் பெருமையை அற்புதமாக அருளுகிறார் வள்ளுவப்பெருமான்.

பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது.

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்" என்றார் பாரதி.

இவ்வற்புதங்களை அருளிய ஆண்டவனுக்கு நன்றி அருளுவதே பொங்கல் திருநாள்.

பிரஹ்மண்யன்
பங்களூரு.
 
Status
Not open for further replies.
Back
Top