• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

இயற்கையா? இறைவனா?

Status
Not open for further replies.
இயற்கையா? இறைவனா?

வருடம்...2003 ..மாதம்...செப்டம்பர்..இடம் ..கோவை சுந்தராபுரத்தில் உள்ள ஒரு கல்யாண மண்டபம்... நிகழ்ச்சி ..சஹஜ ஸ்திதி யோகா....நடத்தியவர்கள் ..கோவை ..ஈஷா மைய யோகம்..அதில் பங்கேற்றவர்களில் அடியேனும் ஒருவன். 13 நாள் பயிற்சி.இன்று வரை அதை கடைபிடித்து உடலும் மனமும் ஆரோகியமான நிலையில் வைத்துஇருப்பவர்களில் நானும் ஒருவன். இது ஒரு புறம் இருக்கட்டும்.
சமீபத்தில் , ஈஷா மையத்தில் ஆதி யோகி சிலை நிறுவப்பட்டு இருக்கிறது.இது தேவை தானா?. இதனால் இந்த அகிலத்திற்கு என்ன லாபம்?. ஆதி யோகி சிலை இந்த உலகிற்கு மழை கொண்டு வருமா? நோய்களை தீர்த்து வைக்குமா? அது கடவுளின் சிலையா அல்லது தாஜ்
மஹால் போல ஒரு காட்சி பொருளா?கடவுள் சிலைஎன்றால் .கோவையிலும் அதை சுற்றிஉள்ள பகுதிகளிலும் உள்ள 500 , 1000 ஆண்டுகளுக்கும் முந்தய பழமையான கோவில்கள் போதாதா.?அந்த கோவில்களில் உள்ள தெய்வங்களுக்கு உள்ள சக்தி யை விட இந்த ஆதி யோகிக்கு சக்தி அதிகமா? சிலை நிறுவ பட எவ்வளவு மரங்கள் வெட்டப்பட்டிருக்கும்? அந்த மரங்க ளையும், காட்டையும், மூலிகைகளையும் , சார்ந்து, நம்பி இருந்த ஜீவராசிகளும் , மிருகங்களும் என்ன ஆகியிருக்கும்? மடிந்து போய் இருக்கும். இயற்கையை கொன்று கடவுளுக்கு அல்லது யோகி க்கு சிலை தேவையா? பழைய காலத்திலும் காடுகளை திருத்திதான் கோவில்களை கட்டினார்கள்.ஆனால் அன்று ஏராளமான காடுகள் இருந்தன.அதனால் மழைக்கும் , தண்ணீருக்கும் பஞ்சம் இருக்கவில்லை.விவசாயத்திற்கும் , தானியங்களுக்கும் பஞ்சம் இருக்கவில்லை. காடுகளையும்,மரங்களையும் நம்பி வாழும் ஜீவா ராசிகளும் காட்டிலேயே வாழ்ந்துவந்தன.
இன்றைக்கு, தமிழகம் தண்ணீர் இன்றி தவிக்கிறது. காடுகளும் மரங்களும் அழிக்கப்பட்டு விட்டன. சிறுவாணி, பவானி, காவேரி, நொய்யல் ஆகியவை வறண்டு விட்டன.இருப்பதை வைத்து பாதுகாக்காமல் , மேற்கு தொடர்ச்சி மலையின் செல்வங்கள் சிலை நிறுவுகின்ற பணியால் அழிக்கப்பட்டு இருக்கின்றன.நமக்கு இனிமேல், புதிதாக , யோகிகளும், தெய்வங்களும் தேவை இல்லை. நமக்கு இயற்கை தான் கடவுள். அவற்றை பாது காப்பதுதான் யோகம். பாத்து காப்பவன்தான் யோகி.இந்த ஆதி யோகி சிலை காலப்போக்கில் அழிந்து போக கூடும்.ஆனால் , மீண்டும் மரங்களும், உயிரினங்களும் வருமா?இது பெருமை அல்ல மனது மிகவும் வேதனை படுகிறது..
ஆதி யோகியே, உன் குழந்தைகளை கொன்று உன்னை வணங்குபவர்களை மன்னித்துவிடு.மீண்டும் இயற்கையை கொலை செய்யாமல் இருக்க எங்களுக்கு அறிவை கொடு.
 
Status
Not open for further replies.
Back
Top