இன்றைய நவீன உணவு முறையில் ஓட்ஸ்

  • Thread starter Thread starter V.Balasubramani
  • Start date Start date
Status
Not open for further replies.
V

V.Balasubramani

Guest
இன்றைய நவீன உணவு முறையில் ஓட்ஸ்

I would like to share the following information recd thro face book:


மேகி நூடுல்ஸ் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு 'ஓட்ஸ்' சாப்பிட ஆரம்பித்துவிடாதீர்கள்.

'ஓட்ஸ்' என்பதே ஒரு டுபாக்கூர் சமாச்சாராம்தான்.
# இன்றைய நவீன உணவு முறையில் ஓட்ஸ்... என்பது அத்தியாவசிய உணவாகிவிட்டது. அதுவும் நீரிழிவு
நோயாளிகளின் , உடல் எடை குறைப்பு முயற்சியில் உள்ளவர்கள் ஓட்ஸ் சாப்பிடுவதை பெருமையாக
நினைக்கிறார்கள் . 10 ஆண்டுகளுக்கு முன்வரை நம் நாட்டில் ஓட்ஸ் இல்லை.. ஆனால் இன்று ஆண்டுக்கு சில ஆயிரம் கோடிகளுக்கு விற்பனையாகிறது. இதற்குப் பின்னால் பண்ணாட்டு வணிக மோசடி உள்ளது....

ஓட்ஸ் ஆஸ்த்ரேலியாவில் பெரும்பான்மையாகவும், ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும் விளையும் ஒரு பயிர்.
அதை அப்படியே உணவாக சாபிடமுடியது சில வழிமுறைகளை பயன்படுத்தி தட்டையாக மாற்றப்படுகிறது..
அதையும் கூட நம்ம ஊர் உணவு போல அதிக அளவில் எடுத்துக்கொள்ள முடியாது... சில கிராம் மட்டுமே
(ஸ்பூன் அளவு ) எடுத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிடுகிறோம். அதிலும் சத்து எதுவும்
கிடையாது. பசியை கட்டுபடுத்தும் குணம் மட்டுமே இதற்கு உண்டு. அதிக விலை கொடுத்து வாங்கும் ஓட்ஸை விட நம்ம ஊர் கேழ்வரகில் (Ragi ) பல மடங்கு சத்து உள்ளது. சுமார் 1 கிலோ ராகி சாப்பிடுவது 4 கிலோ ஓட்ஸ் சாப்பிடுவதற்கு சமம். 1 கிலோ ராகி மாவு வெறும் 35 ரூபாய் தான். 4 கிலோ ஓட்ஸ் 140 x 4= 560 ரூபாய். எவ்வளவு மடங்கு விலையில் வித்தியாசம்
பாருங்கள்....
எங்கோ ஆஸ்த்ரேலியாவில் விளையும் (அவர்கள் அதிகம் சாப்பிடுவது கிடையாது) ஓட்ஸை நாம் சாப்பிடுவதில் MNC தொழிற்சாலைகளின் கொள்ளை அதிக அளவில் உள்ளது... சில ஆண்டுகளாக போலி விளம்பரங்கள் மூலமும்,மருத்துவர்கள் மூலம் கட்டாயப்படுத்தியும் நம்மை ஓட்ஸ் வாங்க வைத்துவிட்டனர். அந்தந்த நாடுகளிருந்து இங்கு நம் நாட்டிற்கு கொண்டுவர ஆகும் எரிபொருள் செலவு, MNC நிறுவனங்களின் கொள்ளை லாபம் அனைத்தையும் சேர்த்து பயனற்ற பொருளை அநியாய விலைக்கு நம் தலையில் கட்டுகின்றன...

அதைவிட ராகி, கம்பு , சோளம் , திணை , வரகு , சாமை போன்ற நம் நாட்டு தானியங்கள் எல்லாம் பல மடங்கு சத்துள்ளவை., 'விலையும் குறைவு ' !!!!

சத்து நிறைந்த நம் பாரம்பரிய உணவு இருக்க சக்கையை உண்டு நம் பணத்திற்கும் உடல் நலத்திற்கும் வேட்டு
வைக்கலாமா?!

Source: face book
.
.
 
Marketing to gullible with high tech latin vocabulary does the trick. Organically grown food and 'sirudanyam' too are not that cheap.
 
Status
Not open for further replies.
Back
Top