இதைப் பற்றி ஸ்த்ரீகளேதான், நடு நிலைமையிலிருந்து கொண்டு ந்யாய ரீதியில் நினைத்துப் பார்க்க வேண்டும்.
ந்யாய ரீதியோடு அவர்களாலேயே முடியக்கூடிய த்யாக ரீதியிலும் நினைத்துப் பார்க்க வேண்டும். ‘புருஷர்களை
வேலையில்லாமல் முட்டாக்குப் போட்டு வீட்டில் உட்கார்த்தி வைத்துவிட்டு நாம் அவர்களுடைய இடத்தைப்
பிடித்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன?’ என்று நினைத்துப் பார்க்க வேண்டும். ‘உத்யோகம் புருஷ லக்ஷணம்’
என்ற வசனத்தை மாற்றி ‘உத்யோகம் ஸ்த்ரீ லக்ஷணம்’ என்று தாங்கள் பண்ணப் பார்ப்பதால், எத்தனை புருஷர்களின்
வயிற்றிலடிக்கிற கொடுமையைச் செய்ய வேண்டியிருக்கிறது என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.