ஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் - மினி தொடர்

Maha52

Active member
ஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் - மினி தொடர்

By கடம்பூர் விஜயன்

1571903865182.png



கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் வலங்கைமான் அடுத்து 18 வது கிமி ல் உள்ளது ஆலங்குடி திருத்தலம். இத்தலம் ஆறாம் நூற்றாண்டில் சம்பந்தரால் பாடப்பெற்றது என்பதால் இது 1500 ஆண்டுகட்குமேல் பழமையானது என அறியலாம்.

தேவர்களைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால் ஆலங்குடி என்று பெயர் வந்தது. இவ்வூரில் விஷத்தால் எவர்க்கும் எவ்விதத் தீங்கும் உண்டாவதில்லை என்று சொல்லப்படுகிறது. கருநிறமுள்ள பூளைச் செடியைத் தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால் திருஇரும்பூளை என்றும், அழைக்கப்படுகிறது.

காளமேகப் புலவர் பாடல் ஆலங்குடி தலத்தைப் பற்றி அற்புதமாக பாடியுள்ளார். “ஆலங்குடியானை ஆலாலம் உண்டானை ஆலங் குடியான் என்று ஆர் சொன்னார் – ஆலம் குடியானேயாகில் குவலயத்தோரெல்லாம் மடியாரோ மண் மீதினில்”. என்று பாடி இந்த ஆலயத்தின் பெருமையை உலகரியசெய்கிறார்.

இந்த தலத்தில் இறைவன் ஆபத்சகாயேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.. இறைவியின் பெயர் ஏலவார்குழலி

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைய வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மந்தார மலையை மத்தாகவும் கொண்டு கடைந்தனர். அப்போது அந்தப் பாம்பு வலி பொறுக்காமல் கக்கிய ஆலகால விஷத்தை , சிவபெருமான் உலகத்தை காக்கும் பொருட்டு உட்கொண்டார். விஷத்தை அருந்தி உலகைக் ஆபத்தில் இருந்து காத்ததால் இறைவன் ஆபத்சகாயேஸ்வரர் அழைக்கப் படுகிறார்.

மேலும் படிக்க;

https://www.dinamani.com/religion/r...திக்கு-கோயில்களும்---மினி-தொடர்-3070944.html

நன்றி: தினமணி
 
ஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் - மினி தொடர் - பகுதி 2 - மருவத்தூர் ஆலயம்

By கடம்பூர் விஜயன்


1571967849179.png



பல சிறப்புக்கள் கொண்ட ஆலங்குடியினை சுற்றி எட்டு திக்கிலும் சிறப்பான கோயில்கள் உள்ளன, இவை அஷ்ட திக்கு பாலகர்கள் வழிபட்டவை. இவர்கள் இறைவனை வழிபட்டு தம் பெயரால் தீர்த்தமும், சிவலிங்கமும் நிறுவி பூஜித்து தங்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகள் நீங்கியும் பல நற்பேறுகளும் பெற்றார்கள்

அதில் வடமேற்கு திக்கான வாயு திசையில் வாயு தேவனால் அமைக்கப்பட்டு பூசிக்கப்பட்ட லிங்கம் தான் இந்த மருவத்தூரில் கோயில்கொண்டிருக்கும் கைலாசநாதர்.

மருக்கம், மாருதம் எனும் சொல்லுக்கு காற்று எனும் ஒரு பொருள் உண்டு. இதிலிருந்து திரிந்து வந்த ஒரு இடவாகுபெயரே மருவத்தூர் என்பதாகும். இறைவன் பெயர் கைலாசநாதர் என்பது பிற்காலத்தில் சோழர் திருப்பணியில் மாற்றப்பட்ட பெயராக இருக்கலாம். இவரின் பழைய பெயர் மாருதீஸ்வரர் என்பதாக இருந்திருக்கலாம்.

கும்பகோணம் அருகில் உள்ள ஆவூர் – அவளிவநல்லூர் சாலையில் உள்ள விளத்தூர்-ல் இருந்து கிழக்கில் இரண்டு கிமி தூரத்திலும், ஹரித்துவாரமங்கலத்தில் இருந்து வடக்கில் மூன்று கிமி தூரத்திலும் உள்ளது மருவத்தூர். ஊரின் கிழக்கு பகுதியில் பெரிய குளத்தின் கரையில் கிழக்கு நோக்கிய பெரிய கோயிலாக உள்ளது சிவன்கோயில்.

மேலும் படிக்க; : https://www.dinamani.com/religion/r...ம்---மினி-தொடர்மருவத்தூர்-ஆலயம்-3081759.html

நன்றி: தினமணி
 
ஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் - மினி தொடர் - பகுதி 3 - பூந்தோட்டம் சிவன்கோயில்

By கடம்பூர் விஜயன்

1572100845513.png



ஆலங்குடியை சுற்றி எட்டு திக்கிலும் அட்டதிக்கு பாலகர்கள் பிரதிட்டை செய்து வழிபட்ட கோயில்கள் உள்ளன. அதில் வருணன் வழிபட்ட கோயில் பூந்தோட்டம் எனும் இடத்தில் உள்ளது. இந்த பூந்தோட்டம் ஆலங்குடியின் மேற்கில் இரண்டு கிமி தூரத்தில் உள்ளது.

சிறிய கிராமம், அதில் இடது புறம் பேருந்து நிறுத்தம் உள்ளது அதன் எதிரில் ஒரு சிறிய பெட்டிக்கடை இருக்கும் அதனை அடுத்து இரண்டு சிறிய ஒட்டு வீடுகள் உள்ளன. இந்த ஓட்டுவீடுகளின் இடையில் உள்ள சிறிய சந்தின் வழி சென்றால் சில நூறடிகளில் ஒரு சிறிய குட்டையின் கரையில் ஒரு திடல், அதன்பெயர் லிங்கத்தடி திடல். அதில் சிறிய தகர கொட்டகையில் தான் எம்பெருமான் வருணேஸ்வரர் எனும் பெயரில் வருணனால் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டு உள்ளார். இவரை வழிபடுவதன் மூலம் நிலம், நீர் இவற்றிக்கு வாழ்நாளில் பஞ்சமில்லாமல் வாழலாம். அருகில் உள்ள குட்டை தான் வருணன் ஏற்ப்படுத்திய வருண தீர்த்தம்.

சில நூறு ஆண்டுகளின் முன் பெரிய பிரகாரத்துடன் இருந்த கோயில் சிதிலமடைந்து தற்போது லிங்கம் , பைரவர் மட்டும் எஞ்சியது. அந்த ஒரு லிங்கத்திற்கு அன்பர்கள் சேர்ந்து ஒரு தகர கொட்டகை ஒன்றை அமைத்திருந்தனர்.



மேலும் படிக்க https://www.dinamani.com/religion/r...குதி-3---பூந்தோட்டம்-சிவன்கோயில்-3100116.html

நன்றி: தினமணி
 
ஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் - மினி தொடர் - பகுதி 4 - புலவர்நத்தம் சிவன் கோவில்

By கடம்பூர் விஜயன்


1572156862976.png

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், புலவர்நத்தம் சிவன்கோயில் பல சிறப்புக்கள் கொண்ட ஆலங்குடியினை சுற்றி எட்டு திக்கிலும் சிறப்பான கோயில்கள் உள்ளன, அவையே அஷ்ட திக்கு பாலகர்கள் வழிபட்டவை. இவர்கள் இறைவனை வழிபட்டு தம் பெயரால் தீர்த்தமும், சிவலிங்கமும் நிறுவி பூஜித்து தங்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகள் நீங்கியும் பல நற்பேறுகளும் பெற்றார்கள்.

ஆலங்குடிக்கு கிழக்கில் இந்திர தேவனால் இந்திர தீர்த்தமும் தென்கிழக்கில் பூனாயிருப்பு கிராமத்தில் அக்கினி தேவனால் அக்கினி தீர்த்தமும் தெற்கில் நரிக்குடி கிராமத்தில் யம தர்மரால் யம தீர்த்தமும் மேற்கில் பூந்தோட்டம் கிராமத்தில் வருண தேவனால் வருண தீர்த்தமும் வடமேற்கில் மருதூர் கிராமத்தில் வாயு தேவனால் வாயு தீர்த்தமும் வடக்கில் கீழ அமராவதி கிராமத்தில் குபேர தேவனால் குபேர தீர்த்தமும் வடகிழக்கில் சித்தன்வாழூர் கிராமத்தில் ஈசான்ய தேவனால் ஈசான்ய தீர்த்தமும் நிறுவி அஷ்டதிக் பாலகர்களே சிவலிங்க பிரதிஷ்டையும் செய்தார்கள்.

அதன் அடிப்படையில் நிருதி பாகமான, ஆதி காலத்தில் பூளை வளநத்தம் என்று அழைக்கப்பட்ட புலவர்நத்தம் கிராமத்தில் நிருதி தேவனால் நிருதி தீர்த்தமும் நிருதீஸ்வரர் என்ற திருநாமத்தோடு லிங்க பிரதிஷ்டையும் செய்து பூஜித்து, அதுவரை கைவிட்டிருந்த தன் தொழிலை மீண்டும் பெற்றார்,

மேலும் படிக்க : https://www.dinamani.com/religion/r...தி-4---புலவர்நத்தம்-சிவன்-கோவில்-3106876.html

நன்றி: தினமணி
 
ஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் மினி தொடர் - பகுதி 5. நரிக்குடி சிவன்கோயில்

- கடம்பூர் விஜயன்

1572242046711.png



திருவாரூர், நீடாமங்கலம் வட்டத்தில் உள்ளது நரிக்குடி சிவன்கோவில். தேவர்களைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால் ஆலங்குடி என்று பெயர் வந்தது.

பல சிறப்புக்கள் கொண்ட ஆலங்குடியினை சுற்றி எட்டுத் திக்கிலும் சிறப்பான கோயில்கள் உள்ளன. அவையே அஷ்டதிக்கு பாலகர்கள் வழிபட்டவை. இவர்கள் இறைவனை வழிபட்டு தம் பெயரால் தீர்த்தமும், சிவலிங்கமும் நிறுவி பூஜித்து தங்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகள் நீங்கியும் பல நற்பேறுகளும் பெற்றார்கள்.

ஆலங்குடி கோயிலின் தென் திசையில் அமைத்திருக்கும் ஊர் நரிக்குடி. நெறிக்குடி என அழைக்கப்பட்ட ஊர் தற்போது மருவி நரிக்குடி ஆனது. தென்திசை யமனுக்குரியதல்லவா அதனால் ஆலங்குடியின் தென்திசையில் உள்ள இத்தலத்தில் யமன் ஓர் லிங்கம் பிரதிட்டை செய்தும் ஓர் தீர்த்தம் உருவாக்கியும் வழிபாட்டு நற்பேறுகள் பெற்றான்.

ஆலங்குடி நீடாமங்கலம் நெடுஞ்சாலையில் 4 கி.மீ. சென்று இடதுபுறம் திரும்பி 1 கி.மீ. தூரம் சென்றால் நரிக்குடியை அடையலாம். இந்த யம தீர்த்தத்தில் நீராடி இத்தல இறைவனை வழிபடுவோருக்கு யமபயம் போகும், பாவம் குறைந்து புண்ணிய கணக்கு அதிகரிக்கும். இத்தல தீர்த்தத்திற்குக் கண்டகி தீர்த்தம் எனும் பெயரும் உள்ளது. பழமையான கோயில் சிதிலமடைந்ததால் புதிய கோயில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இறைவன் யமனேஸ்வரர் கிழக்கு நோக்கியும் அம்பிகை யமனேஸ்வரி தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர்.

வழிபடும்போது நாம் சொல்ல வேண்டிய மந்திரம்

க்ருதாந்தம் மகிஷாரூடம்

தண்டஹஸ்தம் பயானகம் காலபாஷதரம்

க்ருஷ்ணம் த்யாயேத் தக்ஷின திக்பதிம்

மேலும் படிக்க https://www.dinamani.com/religion/r...---பகுதி-5-நரிக்குடி-சிவன்கோயில்-3122616.html

நன்றி: தினமணி
 
ஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் (மினி தொடர்) - பகுதி 6. அக்னீஸ்வரர் திருக்கோயில்
- கடம்பூர் விஜயன்


1572342302067.png


திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், பூனாயிருப்பு அருகே அமைந்துள்ளது அக்னீஸ்வரர் திருக்கோயில்.

தேவர்களைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால் ஆலங்குடி என்று பெயர் வந்தது. இப்படிப் பல சிறப்புக்கள் கொண்ட ஆலங்குடியினை சுற்றி எட்டுத் திக்கிலும் சிறப்பான கோயில்கள் உள்ளன, அவையே அஷ்ட திக்கு பாலகர்கள் வழிபட்டவை. இவர்கள் இறைவனை வழிபட்டு தம் பெயரால் தீர்த்தமும், சிவலிங்கமும் நிறுவிப் பூஜித்து தங்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகள் நீங்கியும் பல நற்பேறுகளும் பெற்றார்கள்.

ஆலங்குடி கோயிலின் தென்கிழக்கில் அமைத்திருக்கும் ஊர் பூளையாயிருப்பு, தற்போது பூனாயிருப்பு என அழைக்கப்படுகிறது. பூளை செடிகள் வளமாக இருக்கும் பகுதி ஆதலால் இப்பெயர். இவ்வூரில் இரு கோயில்கள் உள்ளன.

பூனாயிருப்பு ஊருக்குள் நுழையும் முன்னரே சாலையின் வலதுபுறம் கிழக்கு நோக்கிய கோயிலாக உள்ளது சிவன்கோவில். சிறிய கோயில் என்றாலும் இது அக்னிதேவன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்க தலமாகும்.

மேலும் படிக்க https://www.dinamani.com/religion/r...-பகுதி-6அக்னீஸ்வரர்-திருக்கோயில்-3130680.html

நன்றி: தினமணி
 
ஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் (மினி தொடர்) - பகுதி 7. அபிமுகேஸ்வரர் திருக்கோயில்
-
கடம்பூர் விஜயன்


1572417369377.png


தேவர்களைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால் ஆலங்குடி என்று பெயர் வந்தது. பல சிறப்புக்கள் கொண்ட ஆலங்குடியினை சுற்றி எட்டுத் திக்கிலும் சிறப்பான கோயில்கள் உள்ளன, அவையே அஷ்ட திக்குப் பாலகர்கள் வழிபட்டவை. இவர்கள் இறைவனை வழிபட்டு தம் பெயரால் தீர்த்தமும், சிவலிங்கமும் நிறுவிப் பூஜித்து தங்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகள் நீங்கியும் பல நற்பேறுகளும் பெற்றார்கள்.

ஆலங்குடி கோயிலின் கிழக்கு, தென்கிழக்கு பகுதியில் அமைத்திருக்கும் ஊர் பூளையாயிருப்பு. தற்போது பூனாயிருப்பு என அழைக்கப்படுகிறது. பூளைசெடிகள் வளமாக இருக்கும் பகுதி ஆதலால் இப்பெயர். இவ்வூரில் இரு கோயில்கள் உள்ளன. ஆலங்குடி கோயிலின் நேர் கிழக்கில் உள்ளது அபிமுகேஸ்வரர் திருக்கோயில். இக்கோயில் அமைத்திருக்கும் இடம் பூளையாயிருப்பு, தற்போது பூனாயிருப்பு என அழைக்கப்படுகிறது.

ஆலங்குடியின் அஷ்ட திக்கு பாலகர் வழிபட்ட கோயில்களில் இது இந்திரன் பிரதிட்டை செய்து வழிபட்டது. இக்கோயில் முன்னர் ஆலங்குடி கோயிலின் தென்புறம் உள்ள அமிர்த புஷ்கரணி அருகிலிருந்ததாக கூறுகின்றனர். அன்று இருந்த விநாயகர் மட்டும் அங்கேயே வித்யா கணபதி எனும் பெயரில் அங்கேயே இருக்கின்றார். அங்கிருந்த சிவன் அம்பிகை சிலைகளை வைத்து இக்கோயிலைச் சிலநூறு ஆண்டுகளின் முன்னர் உருவாக்கியுள்ளனர். கிராமத்தினை விட்டு 2 கி.மீ தூரம் தனித்து இருப்பதால் காலப்போக்கில் வழிபாடுகள் நின்றுபோய் கோயில் சிதிலமாகிவிட்டது.



மேலும் படிக்க: https://www.dinamani.com/religion/religion-news/2019/apr/20/ஆலங்குடியும்-அஷ்ட-திக்கு-கோயில்களும்-மினி-தொடர்---பகுதி-7-அபிமுகேஸ்வரர்-திருக்கோயில்-3136752.htm


நன்றி: தினமணி
 
ஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் (மினி தொடர்) - பகுதி 8. சித்தன்வாழூர் திருக்கோயில்

- கடம்பூர் விஜயன்

1572508887669.png


திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், சித்தன்வாழூர் சிவன்கோயில். திருஇரும்பூளை எனும் ஆலங்குடி தலம் பண்டைய காலத்தில் பூளைவனக்காடாக இருந்தபோது பூளைவனநத்தம் எனும் பெரு ஊர் ஆலங்குடி, பூனாயிருப்பு என பிரிந்து இரு புண்ணியத் தலங்களாக விளங்குகிறது.

சிவபெருமான் ஆலகால விஷம் உண்டதால் திருமால், பிரம்மன், இந்திரன் ஆகியோரோடு அஷ்டதிக் பாலகர்களும் தங்கள் தொழில் முதலியவற்றை மறந்தனர். பின்னர் சிவபெருமான் கட்டளைப்படி அஷ்டதிக்கு பாலகர்கள் ஆலங்குடி தலத்தின் கிழக்கில் இந்திரன், தென்கிழக்கில் பூனாயிருப்பு கிராமத்தில் அக்னிதேவன், தெற்கில் நரிக்குடி கிராமத்தில் யமதர்மன், மேற்கில் பூந்தோட்டம் கிராமத்தில் வருணன், வடமேற்கில் மருதூர் கிராமத்தில் வாயு, வடக்கில் கீழ் அமராவதி கிராமத்தில் குபேரன், வடகிழக்கில் சித்தன்வாழூர் கிராமத்தில் ஈசான்யன் என எண்திசைக்காவலரும் அவரவருக்கு உரிய திசையில் தீர்த்தங்களை நிறுவி, சிவ பூஜை செய்தனர்.

இதோ இந்த சித்தன் வாழூர் ஆலங்குடியின் ஈசான்ய திக்கான வடகிழக்கில் அமைந்துள்ளது.

வாய்ந்தபுகழ் மறைவளருந் தோணிபுரம்
பூந்தராய் சிலம்பன் வாழூர்
ஏய்ந்தபுற வந்திகழுஞ் சண்பையெழில்
காழியிறை கொச்சை யம்பொன்
வேய்ந்தமதிற் கழுமலம்விண் ணோர்பணிய
மிக்கயனூர் அமரர் கோனூர்
ஆய்ந்தகலை யார்புகலி வெங்குருவ
தரன்நாளும் அமரு மூரே – சீர்காழி பதிகம்

மேலும் படிக்க : https://www.dinamani.com/religion/r...ுதி-8-சித்தன்வாழூர்-திருக்கோயில்-3141239.html

நன்றி: தினமணி
 
குரு பரிகார தலம்: ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம்

1572855396779.png



நவக்கிரக ஸ்தலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி குரு ஸ்தலமாக விளங்குகிறது. வடக்குத் திசை குருவிற்கு உரியது. குருவிற்கு உரிய தலம் ஆலங்குடி. குருபெயர்ச்சி இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில் வியாழக்கிழமையான இன்று குரு பரிகார தலமாக உள்ள இந்த ஆலயத்தின் சிறப்புகளை தெரிந்து கொள்வோம். தேவர்களைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால் ஆலங்குடி என்று பெயர் வந்தது. இவ்வூரில் விஷத்தால் எவர்க்கும் எவ்விதத் தீங்கும் உண்டாவதில்லை என்று சொல்லப்படுகிறது. கருநிறமுள்ள பூளைச் செடியைத் தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால் திருஇரும்பூளை என்றும், அழைக்கப்படுகிறது. காளமேகப் புலவர் பாடல் ஆலங்குடி தலத்தைப் பற்றி அற்புதமாக பாடியுள்ளார். "ஆலங்குடியானை ஆலாலம் உண்டானை

ஆலங் குடியான் என்று ஆர் சொன்னார் - ஆலம் குடியானேயாகில் குவலயத்தோரெல்லாம் மடியாரோ மண் மீதினில்''. என்று இந்த ஆலயத்தின் பெருமையை உணர்த்துகிறது. குரு ஸ்தலமாக விளங்கும் ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் சுமார் 1900 வருடங்களுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 98வது தலம். இங்கு மூலவர் ஆபத்சகாயர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.

1572855664052.png


Read more at: https://tamil.oneindia.com/astrolog...alangudi-abathsagayeswarar-temple-258485.html

நன்றி : Tamil.oneindia.com
 
Back
Top