• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஆயுத பூஜை வந்த வரலாறு

praveen

Life is a dream
Staff member
பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்றது நம் அனைவருக்கும் பரிச்சயமே.

நாடு இழந்து, பெருமை இழந்து, வனவாசம் மேற்கொண்ட பாண்டவர்கள் தங்களின் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தடியில் மறைத்து வைத்திருந்தனர்.

பின்னர் 14 வருட வனவாசத்திற்கு பிறகு நாடு திரும்பிய பாண்டவர்கள், அதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் தாங்கள் உபயோகித்த அந்த ஆயுதங்களை எடுத்து வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்தனர்.

அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர். பாண்டவர்கள் ஆயுதங்களை வைத்து வணங்கியதால் இவ்விழாவுக்கு “ஆயுதபூஜை” எனப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

ஆயுத பூஜை எதற்காக ?

ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.
உயிர்ப்பொருள்கள், உயிரற்றப் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற இறைபொருள் உறைந்துள்ளது.
வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை ஆகும்.

வருடம் முழுவதும் நமக்காக நம் முன்னேற்றத்திற்க்காக பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், வாகனங்கள், பொருட்களுக்கு இந்த ஒரு நாள் நாம் நன்றி சொல்வது தான் ஆயுத பூஜை.

ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம்
தீட்டி, பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும்.

ஆயுத பூஜை நவராத்திரியின் 9ம் நாள் கொண்டாடப்படுகிறது.

வழிபடும் முறை

அன்றைய நாள் வீடு, கடைகளை சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் கடவுளின் இருப்பிடமாகும்.அன்றைய நாள் வாகனங்களையும் சுத்தம் செய்தல் அவசியம்.தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள் போன்றவற்றை சுத்தம் செய்தல் வேண்டும்.சுத்தம் செய்த பின் அவற்றிற்கு பூஜை செய்ய வேண்டும். தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களை கடவுளாக எண்ணி பூஜை செய்ய வேண்டும்.பூஜையின்போது பொரி, பழங்கள், பேரீச்சம்பழம் போன்றவற்றை நைவேதினமாக படைத்து வழிப்படலாம்.

ஆயுதபூஜை சிறப்பு

செய்யும் தொழிலே தெய்வம். நாம் செய்யும் தொழிலுக்கு உதவிகரமாக இருக்கும் ஆயுதங்களை கடவுளாக போற்றி வணங்குவது ஆயுத பூஜையின் நோக்கமாகும்.

ஆயுத பூஜையன்று, ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு மட்டுமே ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று உறுதி கொள்ள வேண்டும்.

அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகள் !
 

Latest ads

Back
Top