ஆயிரம் கண் போதாதடி வண்ணக் கிளியே!

Status
Not open for further replies.
ஆயிரம் கண் போதாதடி வண்ணக் கிளியே!

ஆயிரம் கண் போதாதடி வண்ணக் கிளியே, குற்றால அழகை நாமும் கண்பதற்கு வண்ணக் கிளியே!

Courtallam water Fallas, August 1996.webp

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பார்
கமன சித்தர் வந்தவந்து காயசித்தி விளைப்பார்
தேனருவி திரை எழும்பி வானின்வழி ஒழுகும்
செங்கதிரோன் தேர்க்காலும் பரிக்காலும் வழுகும்
கூனல் இளம்பிறைமுடித்த வேணி அலங்காரர்
குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே

Courtallam water Fallas, August 1996-2.webp

ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்
ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்
வாடக் காண்பது மின்னார் மருங்குல்
வருந்தக் காண்பது சூலுளைச் சங்கு
போடக் காண்பது பூமியில் வித்து
புலம்பக் காண்பது கிண்கிணிக்கொத்து
தேடக் காண்பது நல்லறம் கீர்த்தி
திருக்குற்றாலர் தென் ஆரிய நாடே

Courtallam water Fallas, August 1996-4.webp

ஞானிகளும் அறியார்கள் சித்ர நதி மூலம்
நானறிந்தவகை சிறிது பேசக்கேள் அம்மே
மேன்மை பெறுந்த் திரிகூடத் தேனருவித் துறைக்கே
மேவுமொரு சிவலிங்கம் தேவ ரகசியமாய்
ஆனதுறை அயன் உரைத்த தானம் அறியாமல்
அருந்தவத்துக்காய்த் தேடித்திரிந்தலையும் காலம்
மோனவானவர்க்கெங்கள் கானவர்கள் காட்டும்
முது கங்கை ஆறு சிவ மதுகங்கை ஆறே

****
செழுங் குரங்கு தேமாவின் பழங்களைப் பந்தடிக்கும்
தேனலர் சண்பகவாசம் வானுலகில் வெடிக்கும்
வழங்கு கொடை மகராசர் குறும் பலவில் ஈசர்
வளம் பெருகும் திரிகூட மலை எங்கள் மலையே

Photos are taken by me in 1996. Unfortunately I cant go to Honey Falls. We went there botanical collections in 1960s.
 
குற்றால அழகு

அதிகம் படித்தால் பிடிக்குமாம் இது!!!

அதற்கு
ச் செய்ய வேண்டுமாம் வைத்தியம்

அத
ற்குக் குளிக்க வேண்டுமாம் இதில்!

அத்தனையும் உண்மை தானா ஐயா??? :rolleyes:
 
இரண்டு சோகங்கள்!

குற்றாலத்தில் குளித்தால் மன நலம் வருமெனக்

குற்றாலத்தில் குளித்த எங்கள் நண்பர் ஒருவரின்

கேசமில்லாத் தலை, தண்ணீரின் வேகம் தாங்காது
மோசமாக அடிபட, ஐந்து நாளில் அவர் மாண்டார்!

தோஷ நிவாரணம் என்று நம்பி, அருவியில் நீராடி,
தோஷம் நீக்க விரும்பிய ஒரு நண்பியின் தங்கை,

நீரின் வேகத்தில் திருமாங்கல்யக் கொடி அறுபட்டு,
நீரோடு சென்றுவிட, இன்னும் மனம் கலங்கினாள்!

:pout:
 
இது கொஞ்சம் 'ஓவரா' தெரியுதே...!! நான் பிறந்து வளர்ந்த 'இச்சீமையிலே' இப்படி ஒரு நிகழ்வு கண்டதும் இல்லை

கேட்டதும் இல்லை..சில நேரங்களில் 'பழைய குற்றாலத்தில்' அதிக நீர் வரவால் கற்களும் சிறிய பாறைகளும்

விழும்..ஆனாலும் அதிக நீர் வரவு நேரங்களில் யாரும் குளிக்கமுடியாது...

Tvk

எல்லா புனித நீருக்கும் ஒரு சக்தி உண்டு என்று இந்துக்கள் நம்புகின்றனர். அது என்ன? புனித நீர் "பாவங்களை"க் கழுவிவிடும். ஆகவே ஏதேனும் நிகழ்ந்தால் அது பாவங்களின் விளைவே என்று அறிக.

இரண்டாவதாக பைத்தியங்கள், குற்றால அருவியில் குளித்தால் பைத்தியம் தெளியும் என்பது உண்மையே. இப்போதெல்லாம் மேலை நாடுகளில் கூட மன நோயாளிகளை இயற்கை எழிழ் மிக்க இடங்களுக்கும் சுடு நீர் "ஸ்பா"க்களுக்கும் அழைத்துச் செல்கின்றனர். லிதியம் மாத்திரைகளைக் கொடுத்து அவர்களின் நரம்புகளை நாசம் செய்து பைத்தியம் இல்லாதோரையும் பைத்தியம் பிடிக்க வைப்பதற்கு பதில் இது எவ்வளவோ மேல். "பித்தம் தெளிய மருந்தொன்று கண்டேன்" என்று பாடிக் கொண்டே குற்றாலத்தில் குளிப்போம்.

ஒரு "சுவையான" சம்பவம்! 1996ல் குடும்பத்தோடு குற்றாலம் போனேன். என் மகன்களிடம் குற்றால மூலிகை நீரின் மருத்துவப் பையன்களை நான் "ரீல்" விடவே ஒரு மகன் அதைக் குடித்துவைத்தான். அவ்வளவுதான்! 24 மணி நேரமும் டாய்லெட் வாசம். நல்ல வேளை, என மனைவியின் தங்கை மதுரையில் டாக்டர். அவளுடைய நர்சிங் ஹோமில் மூன்று நாட்களுக்கு குளுக்கோஸ் ஏற்ற நேரிட்டது. மதுரையிலுள்ள தினமணி அலுவலக சகாக்கள் என்னைப் பார்த்து சிரி சிரி என்று சிரித்தனர்." இது பழைய குற்றாலம் அல்ல. இப்போதெல்லாம் வழி நெடுகிலும் காலைக் கடன்களைக் கழிக்க மக்கள் செல்லுகிறார்கள்" என்றார்கள்.

ஆக மன நலம் பெற குற்றாலம் போகலாம். ஆனால் உடல் நலம் பெற..................கொஞ்சம் சிந்தியுங்கள்!!!!
 
'கைமேல் பலன்'....'ரீலின்' விளைவு...உண்மையிலேயே மூலிகை விளைவு தேவை என்றால்.. 'தேனருவி'

செல்லவேண்டும்..

Tvk
 
மனிதனே மாசுவின் காரணம்.

புனித கங்கைநதி பாழகிவிட்டது
மனிதர்கள் அடிக்கும் லூட்டியால்!

'கங்கா ஜல்' இது பழைய மொழி
'கங்கா ஜல் கி தள் தள்' இன்றைய

புத்தம் புது மொழி இதுவே!
(தள் தள் = சேறும், சகதியும்!) :whoo:

செம்பு கிருமி நாசினி என்பதால் நமக்குச்
செம்பில் நீரை அடைத்து விற்கின்றனர்.
icon3.png

பைத்தியம் தீரக் குற்றாலத்தில் குளித்து விட்டு,
வைத்தியம் செய்து கொள்வது விந்தைதான்! :rolleyes:

குளிக்கும் குற்றாலத்தில் எப்படிக்
கழிக்க முடிகிறது காலைக்கடன் ??

நாற்பதாயிரம் அடி உயரத்தில் பறக்கும் போது
நாலு சதுர அடி பாத்ரூமில் ஃ ப்ளஷ் செய்துவிட்டு

"எவர் தலையில் விழுமோ?" என்று வீணாகக்
கவலைப்படும் நம்மிடையே இந்த ஆசாமிகளா? :faint:
 
'கைமேல் பலன்'....'ரீலின்' விளைவு...உண்மையிலேயே மூலிகை விளைவு தேவை என்றால்.. 'தேனருவி'

செல்லவேண்டும்..

Tvk

மூலிகை பாலிகை ஆகிவிடும் :rolleyes:

மனிதனின் விடா முயற்சியால்! :ballchain:

பாலிகையில் வளருவது ஒன்பது :decision:

தானியங்கள் அல்ல 9 கிருமிகள்! :scared:
 
மனிதனே மாசுவின் காரணம்.

புனித கங்கைநதி பாழகிவிட்டது
மனிதர்கள் அடிக்கும் லூட்டியால்!

'கங்கா ஜல்' இது பழைய மொழி
'கங்கா ஜல் கி தள் தள்' இன்றைய

புத்தம் புது மொழி இதுவே!
(தள் தள் = சேறும், சகதியும்!) :whoo:

செம்பு கிருமி நாசினி என்பதால் நமக்குச்
செம்பில் நீரை அடைத்து விற்கின்றனர்.
icon3.png

பைத்தியம் தீரக் குற்றாலத்தில் குளித்து விட்டு,
வைத்தியம் செய்து கொள்வது விந்தைதான்! :rolleyes:

குளிக்கும் குற்றாலத்தில் எப்படிக்
கழிக்க முடிகிறது காலைக்கடன் ??

நாற்பதாயிரம் அடி உயரத்தில் பறக்கும் போது
நாலு சதுர அடி பாத்ரூமில் ஃ ப்ளஷ் செய்துவிட்டு

"எவர் தலையில் விழுமோ?" என்று வீணாகக்
கவலைப்படும் நம்மிடையே இந்த ஆசாமிகளா? :faint:

"குளிக்கும் குற்றாலத்தில் எப்படிக்
கழிக்க முடிகிறது காலைக்கடன் ??"

குற்றால நீர் வீழ்ச்சியில் முடியாது..ஆனால் நீர்வீழ்ச்சி தாண்டி 'சித்தாறாய்' ஓடி வரும்போது ..ஆற்றின் கரைகளில் ...

Tvk

இது கொஞ்சம் 'ஓவரா' தெரியுதே...!! நான் பிறந்து வளர்ந்த 'இச்சீமையிலே' இப்படி ஒரு நிகழ்வு கண்டதும் இல்லை கேட்டதும் இல்லை...........
தவக் கவி அவர்களே!

நான் எழுதியது அத்தனையும் கதையல்ல (ரீல் அல்ல​​) நிஜம்!

அந்த நண்பரின் பெயர் தேனப்பன்! அவர் தேனருவியில் குளித்தாரா என அறியேன்! :noidea:

மங்கல நாணைத் தொலைத்து அல்லாடியவர், என் வீணை மாணவி + நண்பியின் தங்கை! :pout:
 
"குளிக்கும் குற்றாலத்தில் எப்படிக்
கழிக்க முடிகிறது காலைக்கடன் ??"

குற்றால நீர் வீழ்ச்சியில் முடியாது..ஆனால் நீர்வீழ்ச்சி தாண்டி 'சித்தாறாய்' ஓடி வரும்போது ..ஆற்றின் கரைகளில் ...

Tvk

சித்தாறு ஆகிவிடும் சிறுநீராறு !!! :frusty:
 
தவக் கவி அவர்களே!

நான் எழுதியது அத்தனையும் கதையல்ல (ரீல் அல்ல​​) நிஜம்!

அந்த நண்பரின் பெயர் தேனப்பன்! அவர் தேனருவியில் குளித்தாரா என அறியேன்! :noidea:

மங்கல நாணைத் தொலைத்து அல்லாடியவர், என் வீணை மாணவி + நண்பியின் தங்கை! :pout:

1."அவர் தேனருவியில் குளித்தாரா என அறியேன்"..

தேனருவியில் தண்ணீர் வேகம் கிடையாது... ஆனாலும் நின்று குளிப்பதற்கு மிகச் சிறிய இடம் மட்டுமே உண்டு..

மேலும் 'தேனருவிக்கு' யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செல்ல முடியாது....

'ஸ்பாண்டிலிடிஸ்' அல்லது வேறு கழுத்து கோளாறு உள்ளவர்களுக்கு நீர்வீழ்ச்சி தண்ணீர் வேகமாக கழுத்தில்/தலையில்

விழும்போது தலை சுற்றல் ஏற்பட வாய்ப்பு உண்டு...அதனால் கீழே விழுந்து தலையில் அடிபட்டவர்கள் உண்டு..ஆனால்

இறந்தவருக்கு தண்ணீரின் வேகம் காரணாமாக இருக்க முடியாது... மேலும் இறந்தவர் 'எந்த' நிலையில் இருந்தார்

என்பது முக்கியம்.. ஏனனில் பெரும்பாலும் அடிபட்டவர் எல்லோரும் உள்ளேயும் 'தண்ணீரில்தான்'

இருந்திருக்கிறார்கள்...

2. மங்கள நாணை தொலைத்தவருக்கு என் அனுதாபங்கள்...தங்க செயினை விட்டவர்களும் உண்டு..

Tvk
 
Last edited:
.......... 2. மங்கள நாணை தொலைத்தவருக்கு என் அனுதாபங்கள்...தங்க செயினை விட்டவர்களும் உண்டு....
தொலைத்தது தங்க மங்கல நாண், கொடி ஆறு சவரன். தாலி மட்டுமே இரண்டு சவரன் இருக்கும்!

இதில் தேறியது காலடியில் கிடைத்த சின்னத் தங்க குண்டு மட்டுமே!! போலீஸிடம் புகார் கொடுத்தும் பயன் இல்லை.
 
தொலைத்தது தங்க மங்கல நாண், கொடி ஆறு சவரன். தாலி மட்டுமே இரண்டு சவரன் இருக்கும்!

இதில் தேறியது காலடியில் கிடைத்த சின்னத் தங்க குண்டு மட்டுமே!! போலீஸிடம் புகார் கொடுத்தும் பயன் இல்லை.

அது எப்பிடி..?...அருவியில் குளிப்பவர் எல்லோருக்கும் இது நடக்கிறதா..?..இல்லையே....கொடி ஏற்கனவே

தேய்ந்திருந்தால் மட்டுமே இது மாதிரி நடக்க வழி உண்டு..

Tvk
 
........கொடி ஏற்கனவே தேய்ந்திருந்தால் மட்டுமே இது மாதிரி நடக்க வழி உண்டு..
தாலியைக் கொடியுடன் இணைத்தது மஞ்சள் கயிறுதான். அது இற்று இருக்கலாம்!
 
தாலியைக் கொடியுடன் இணைத்தது மஞ்சள் கயிறுதான். அது இற்று இருக்கலாம்

இன்னொரு வழியிலும் நடந்திருக்கலாம்...பக்கத்தில் இருக்கும் பெண்மணி 'கட்' பண்ணியிருக்கலாம்..கூட்டம் அதிகமாக

இருக்கும் நேரங்களில் இது நடக்கிறது...

Tvk
 
Status
Not open for further replies.
Back
Top