P.J.
0
ஆதி சங்கரர் ஸ்தாபித்த பத்ரிநாத் புனித தி
ஆதி சங்கரர் ஸ்தாபித்த பத்ரிநாத் புனித திருத்தலம்
இமயத்திலுள்ள தெஹரிகர்வால் மலைத்தொடரின் வழியில் பத்ரி நாத் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் பத்ரி நாராயணர் (மஹா விஷ்ணு) மூர்த்தி ஸ்வரூ பமாகக் காட்சி தருகிறார். புத்தர் காலத்தில் இந்த பத்ரி நாராயணர் சிலை நாரதர் குளத்தில் வீசப்பட்டது. பல வருடங்களாகக் குள த்தடில் கிடந்த இந்த மூர்த்தியை ஆதி சங்கரர் கண்டெடுத்து, பத்ரிநாத் கோவி லை அமைத்து மூர்த்தியைப்பிரதிஷ்டை செய்தார் என்று வரலாறு சொல்லுகிறது.
இரண்டு அடி உயரத்தைக் கொண்ட – கருங்கல்லால் செதுக்கப்பட்ட பத்ரி நாராயணர், பத்மாசன கோலத்தில்- தியான ரூபத்தில் பிரதான சந்நிதியில் வீற்றிருக்கிறார். அவரது வலப்புறத்தில் உத்தபாநார, நாராயண முனிவர்களின் மூர்த்தி கள் நின்ற கோலத்தில் காட்சி அளி க்கின்றன. நாரத முனிவர் மண்டி யிட்டு அமர்ந் துள்ள நிலையில் காட்சி தருகிறார். இடப்புறத்தில் குபேரன், விநாயகரின் மூர்த்திக ளைப் பார்க்கலாம். மகா விஷ்ணு வின் வாகனமான கருட பகவானி ன் சிலையும் இக்கோவிலில் இடம் பெற்றிருப்பது தனிச் சிறப்பாகும்.
பத்ரிநாராயணரின் சந்நிதி தங்கம் மற்றும் வெள்ளித் தகடுகளால் அலங்கரிக்கப்பட்டு வெகு அழகாகத் தோற்றமளிக்கிறது. இவ்வால யத்தி லுள்ள கல்சிற்பங்கள் பக்தர்க ளை வெகுவாகக் கவர்கின்றன. பிர தான சந்நிதிக்கு சற்றுத் தொலைவில் மகா லட்சுமியின் சந்நிதியும் இடம் பெற்று ள்ளது. அடுத்து ஆதிசங்கரரின் சந்நிதி யையும் காணலாம்.
பத்ரிநாத் கோவில் மே மாதத்திலிரு ந்து அக்டோபர் மாதம் வரை திறந்து வைக்கப்பட் டிருக்கும். அடுத்த ஆறுமாத காலத்தில் இந்தக் கோவி லின் பூசாரிகள் ஜோஷிமத்தில் உள்ள நரசிம்மர் கோவிலில் பூஜைக ளைத் தொடர்ந்து செய்கிறார்கள். ஆறு மாத காலம் கழித்து மீண்டும் பத்ரிநாத் கோவில் திறக்கப்படும்போது, கோவில் மூடப்படுவதற்கு முன் பிரதான சந்நிதியில் ஏற்றப்பட்ட நெய்விளக்கு அணையாமல் எரிந்து கொண்டிருப்பது இந்தக் கோவிலின் தனிச்சிறப் பாகும். ஆறு மாத கால மாக மூடிக்கிடக்கும் கோவிலுக்குள் நாரத முனிவர் பத்ரி நாராயண ரைப் பூஜித்து தியானத்திலிருப்பதாகப் புராண ங்கள் சொல்லுகின்றன.
அலகநந்தா நதிக்கரையோரத்தில் அமைந்திருக்கும் பத்ரிநாத் கோவிலுக்கு சற்று தொலைவில் நாரதர் குளத்தைக் காணலாம். இந்தக் குளத்தின் அருகே ஐந்து பாறைக ளைக் கொண்ட பஞ்சசீலா என்ற இடத்தையும் காணலாம். இந்த ஐந்து பாறைகளை நாரதர், நரசிம்மர், வராஹர், கருடர், மார்கண் டேயர் என்று சொல்கிறார்கள்.
பத்ரிநாத் கோவிலுக்கு எதிரெதிரே அமைந்துள்ள மலைச்சிகரங்க ளில் நார, நாராயண முனிவர்கள் தவமிரு ந்தார்கள். அதனால் இந்த இரண்டு மலைகளையும் நார மலையென்றும்- நாராயண மலை யென்றும் அழைக் கின்றனர். கூர்ம, பிரகலாத, ஊர்வசி, பிருகு, இந்திரன் ஆகிய ஐந்து அழகிய நீர்வீழ்ச்சிகளும் இப்பகுதியில் அமைந்துள்ளன. சற்று தொலைவில் மணிநாக பர்வதத்தைப் பார் க்கலாம். யக்க்ஷனால் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பஞ்ச பாண்டவர்களின் முதல் புத்திர ரான தருமர் பதில் அளித்து, சகோதரர்களின் உயிர்களை மீட்டு வந்த பழம்பெருமையைப் பெற் றது இந்த மணிநாக (மைநாக) மலை.
பத்ரிநாத்திலிருந்து வடமேற்கு திசை நோக்கி நான்கு கிலோ மீட்டர் தொலைவில் வேதவியாசர் குகை யைப் பார்க்கலாம். இந்தக் குகை, வியாச முனிவர் நான்கு வேதங்களைப் படைத்த பெருமை யைக் கொண்டது. இதனையடுத்து கணேச குகையையும் பார்க்க லாம். ஸ்கந்த முனிவருக்கு சிவபெருமான் இமயத்தின் சிறப்பைச் சொன்ன தும், ஸ்கந்த முனிவர் ஸ்கந்த புராணத்தைப் படைத்தது மாகிய வரலாற்றுச் சிறப்பைப் பெற்றது இந்தக் குகை.
பத்ரிநாத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் பனிக்கட்டிகளால் உரு வாகிய சடோ பந்த் ஏரியைப் பார்க்கலா ம். இந்த ஏரியருகே பிரம்மா, விஷ்ணு, மஹேஸ்வரர் மூவரும் தவமிருந்தனர் என்று புராணங்கள் சொல்லுகின்றன.
பத்ரிநாத் கோவிலை அடுத்து ஆதிபத்ரி, விருத்தபத்ரி, பவிஷ்யபத்ரி, யோகத்யா ன் பத்ரி என்னும் நான்கு பத்ரி கோவில்களும் இடம் பெற்றுள்ளன.
ஜோஷிமத்தில் நரசிம்மர் கோவிலைப் பார்க்கலாம். இந்தக் கோவி லின் பிரதான சந்நிதியில் சாந்த ஸ்வரூபமான நரசிம்ம மூர்த்தியைத் தரிசனம் செய்யலாம். இந்தக் கோவி லில் ராமர், சீதை, அனுமன் ஆகி யோரின் மூர்த்தங்களும் இடம் பெற் றுள்ளன. இந்த நரசிம்மர் கோவில் 1200 ஆண்டுகளுக்கு முன் கட்டப் பட்ட பழமையான கோவிலா கும். ஜோஷிமத்தில் வாசுதேவர் கோவி லும் இடம் பெற்றுள்ளது.
இங்கிருந்து 10 கி.மீ. தொலைவில் அலகநந்தா, துலிகங்கா என்ற இரண்டு நதிகள் இணைகின்றன. இந் த இடம் விஷ்ணுபிரயாக் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இத ற்கு சற்று தொலைவில் ஆதிசங்கரர் மடமும் இடம் பெற்றுள்ளது. மடத்தின் இடப்புறத்தில் சிறிய குகையொன்றைப் பார்க்கலாம். இந்தக் குகையில் சங்கராசாரியார் தியானம் செய்ததாகப் புராணங் கள் சொல்லுகின்றன. மடத்தின் வலப்புறத்தில் கற்பகவிருட்சத்தைப் பார்க்கலாம். இந்த விருட் சத்திற்குக் கீழேதான் சங்கராசாரி யார் ஞானம் பெற்றார் என்று கூறப்படு கிறது.
சங்கர மடத்திலிருந்து ஒன்பது கி.மீ. தொலை வில் அனுமன்சட்டி என்ற இடம் அமைந்துள் ளது. இந்த இடம், வாயு புத்திரர்களாகிய அனுமனும், பீமனும் தங்களது பலத்தைப் பரிசோதனை செய்த வர லாற்றைப் பெற்றது. இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் வண்ணமயமான பூக்கள் நிறைந்த பூங்காவனத்தையும் பார்க்க லாம். இந்த பூங்காவனத்திலிருந்து சிறிது தூரத்தில் ஹேமகுந்த ஏரி யைப் பார்க்கலாம். இந்த ஏரியருகே சீக்கியர்களின் பத்தாவது குரு வான குருகோவிந்த் சிங் தியானம் செய் தார் என்கிறார்கள்.
இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்பைப் பெற்ற- இயற்கை வளம் நிறை ந்த பத்ரிநாத் கோவிலின் அழகை இந்துக்கள் தங்கள் வாழ் நாளில் ஒருமுறையாவது தரிசிப்பது தவம் செய்ததற்கு நிகரானது.
??? ??????? ????????? ????????? ????? ?????????? « www.VijayTamil.Net
Hindukkalin Prasad