அர்ச்சனம்

Status
Not open for further replies.
அர்ச்சனம்

பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி
ததஹம் பக்த்யுபஹ்ருதம் அச்னாமி ப்ரயதாத்மன:

பகவத்கீதை 9-26

இலை, பூ, பழம், தண்ணீர் போன்றவற்றை உண்மையான பக்தியுடன் யார் எனக்கு ஸமர்ப்பித்தாலும் அதை நான் ஏற்றுக்கொள்வேன் என்று கண்ணன் பகவத்கீதையில் கூறியுள்ளான். அவ்வாறு அவனுக்கு ஸமர்ப்பிப்பதே அர்ச்சனமாகும்.

த்வாபர யுகத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் சிறந்த பக்தர்களாக குந்தி, அர்ஜுனன் மற்றும் பீஷ்மர் கருதப்பட்டனர். ஆனால், பீமனே கண்ணனின் மிகச்சிறந்த பக்தனாக இருந்தான். அவனது பக்தி அவனுடைய உருவத்தைப் போலவே பெரிதாக இருந்தது.

கண்ணனின் நண்பனான அர்ஜுனன் ஒருநாள் கண்ணனைத் தேடி ருக்மிணியின் அரண்மனை, ஸத்யபாமாவின் அரண்மனை மற்றும் வேறு பல இடங்களுக்கும் சென்றான். ஆனால் கண்ணன் எங்கும் காணவில்லை. நடந்து வந்துகொண்டிருந்த அவன் நாரதரை சந்தித்தான். அவரிடம், கண்ணனை எங்கும் காணவில்லை. அவன் எங்கு சென்றிருப்பான்? என்று கேட்டான். அதற்கு அவர், இப்பொழுது கண்ணன் வைகுந்தத்தில் இருப்பான். பீமன் செய்யும் சிறப்புப் பூஜையை ஏற்றுக்கொள்வதற்காக ஒவ்வொரு நாள் இரவும் அவன் வைகுந்தம் செல்கிறான் என்று கூறினார்.

அண்ணா பீமன் பூஜை செய்வதை நான் பார்த்ததில்லையே. பல நேரங்களிலும் அவர் உறங்கிக் கொண்டுதானே இருப்பார் என்று அர்ஜுனன் வியப்படைந்தான். அப்பொழுது நாரதர், பீமன் செய்யும் பூஜையை நாம் நேரில் காணலாம் என்று கூறி அவனை வைகுந்தத்திற்கு அழைத்துச்சென்றார்.

அங்கு கண்ணனுக்கு ஸமர்ப்பிக்கப்பட்ட பூக்கள், பழங்கள் போன்ற அனைத்தும் நிரம்பி வழிந்துகொண்டிருந்தன. தேவர்கள் அவற்றை தொடர்ந்து அகற்றிகொண்டே இருந்தனர். ஆனால் அங்கு பீமனைக் காணவில்லை. அப்பொழுது அர்ஜுனன், அண்ணா பீமனை இங்கு காணவில்லையே. பூஜைப் பொருட்கள் மட்டும் குவிகின்றனவே. இது எவ்வாறு சாத்தியமாகும்? என்று நாரதரிடம் கேட்டான். அதற்கு நாரதர், பீமன் மானஸீகமாக பூஜை செய்து ஸமர்ப்பிக்கும் பொருட்களே இவை என்று கூறினார்.

தானே சிறந்த கிருஷ்ணபக்தன் என்று எண்ணியிருந்த அர்ஜுனனின் அகந்தை பீமனின் அர்ச்சனா பக்தியைக் கண்டதும் அடியோடு அழிந்தது

http://ammandharsanam.com/magazine/March2015unicode/page007.php
 
அர்ச்சனம்
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி
ததஹம் பக்த்யுபஹ்ருதம் அச்னாமி ப்ரயதாத்மன:

பகவத்கீதை 9-26
இலை, பூ, பழம், தண்ணீர் போன்றவற்றை உண்மையான பக்தியுடன் யார் எனக்கு ஸமர்ப்பித்தாலும் அதை நான் ஏற்றுக்கொள்வேன் என்று கண்ணன் பகவத்கீதையில் கூறியுள்ளான். அவ்வாறு அவனுக்கு ஸமர்ப்பிப்பதே அர்ச்சனமாகும்.

த்வாபர யுகத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் சிறந்த பக்தர்களாக குந்தி, அர்ஜுனன் மற்றும் பீஷ்மர் கருதப்பட்டனர். ஆனால், பீமனே கண்ணனின் மிகச்சிறந்த பக்தனாக இருந்தான். அவனது பக்தி அவனுடைய உருவத்தைப் போலவே பெரிதாக இருந்தது.

கண்ணனின் நண்பனான அர்ஜுனன் ஒருநாள் கண்ணனைத் தேடி ருக்மிணியின் அரண்மனை, ஸத்யபாமாவின் அரண்மனை மற்றும் வேறு பல இடங்களுக்கும் சென்றான். ஆனால் கண்ணன் எங்கும் காணவில்லை. நடந்து வந்துகொண்டிருந்த அவன் நாரதரை சந்தித்தான். அவரிடம், கண்ணனை எங்கும் காணவில்லை. அவன் எங்கு சென்றிருப்பான்? என்று கேட்டான். அதற்கு அவர், இப்பொழுது கண்ணன் வைகுந்தத்தில் இருப்பான். பீமன் செய்யும் சிறப்புப் பூஜையை ஏற்றுக்கொள்வதற்காக ஒவ்வொரு நாள் இரவும் அவன் வைகுந்தம் செல்கிறான் என்று கூறினார்.
அண்ணா பீமன் பூஜை செய்வதை நான் பார்த்ததில்லையே. பல நேரங்களிலும் அவர் உறங்கிக் கொண்டுதானே இருப்பார் என்று அர்ஜுனன் வியப்படைந்தான். அப்பொழுது நாரதர், பீமன் செய்யும் பூஜையை நாம் நேரில் காணலாம் என்று கூறி அவனை வைகுந்தத்திற்கு அழைத்துச்சென்றார்.
அங்கு கண்ணனுக்கு ஸமர்ப்பிக்கப்பட்ட பூக்கள், பழங்கள் போன்ற அனைத்தும் நிரம்பி வழிந்துகொண்டிருந்தன. தேவர்கள் அவற்றை தொடர்ந்து அகற்றிகொண்டே இருந்தனர். ஆனால் அங்கு பீமனைக் காணவில்லை. அப்பொழுது அர்ஜுனன், அண்ணா பீமனை இங்கு காணவில்லையே. பூஜைப் பொருட்கள் மட்டும் குவிகின்றனவே. இது எவ்வாறு சாத்தியமாகும்? என்று நாரதரிடம் கேட்டான். அதற்கு நாரதர், பீமன் மானஸீகமாக பூஜை செய்து ஸமர்ப்பிக்கும் பொருட்களே இவை என்று கூறினார்.​

தானே சிறந்த கிருஷ்ணபக்தன் என்று எண்ணியிருந்த அர்ஜுனனின் அகந்தை பீமனின் அர்ச்சனா பக்தியைக் கண்டதும் அடியோடு அழிந்தது
http://ammandharsanam.com/magazine/March2015unicode/page007.php

இங்கு நாம் சிந்திக்க வேண்டிய வேறு ஒறு விஷயமும் உள்ளது.

பகவானுக்கு பூஜை செய்ய எந்த மலர் சிறந்தது?

இன்ன தேவதையைப்பூஜிக்க இன்ன நிறமுள்ள மலரை உபயோகிக்க வேண்டும் என்று கூறுவோருக்கு மத்தியில் ஒரு வைணவப்பெரியவர் கூறியிருக்கிறார் இதைப்பற்றி.

அவர் கூறியது:

பகவானை எந்த மலரைக்கொண்டும் பூஜிக்கலாம். எந்த நிறமுள்ளதாகவும் இருக்கலாம். ஒரே ஒரு விஷயம் மட்டுமே முக்கியம். அந்த மலரைப்பறிக்கும் பக்தனுக்கு முள் குத்தியோ வேறு விதத்திலொ துன்பம் நேராமல் இருந்தால் போதும். பகவானுக்கு தன் பக்தன் மேல் அவ்வளவு ப்ரீதி.
 
Status
Not open for further replies.
Back
Top