sivaram
0
அருள்மிகு ஸ்ரீ மஹாசண்டிகா திருக்கோவில்
மூவுலகையும் காத்து ரட்சிக்கும் அன்னையாம் ஆதிபராசக்தியின் அம்சமாகவும், கல்விக்கு அதிபதியாக திகழும் ஸ்ரீசரஸ்வதியின் அம்சமாகவும், செல்வதுக்கு அதிபதியாக திகழும் மஹாலக்ஷ்மியின் அம்சமாகவும் மறறும் சர்வசக்தியுடன் திகழ்பவர் அருள்மிகு ஸ்ரீ மஹாசண்டிகாதேவி ஆவார். உலக நன்மைக்காகவும் அன்றாடம் பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் மக்களின் விமோசனத்திற்காகவும் பாவ, சாப, தோஷ நிவர்த்திக்காகவும், நாட்டில் இயற்கை வளம் செழிக்கவும், மழை வளம் பெருகவும் வேண்டி ஸ்ரீ மஹாசண்டிகாதேவிக்கு மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா பாலமேடு அருகே இராமகவுண்டன்பட்டி இச்சிகுளம் பகுதியில் இயற்கை எழிலுடன் அமையப்பெறற ஸ்ரீவனத்தில் மிக பிரமாண்டமான ஆலயம் அமைய உள்ளது.
இதிகாச காலத்தில் சுந்தரேச பெருமான் அற்புதங்கள் நிகழ்த்திய கடம்பவனமாக திகழும் மதுரையம்பதியில் ஸ்ரீவனம் அமைத்து ஸ்ரீமஹாசண்டிகாதேவியாக இருந்து அருள்பாலிக்க விரும்புவதாக அன்னையின் ஆக்ஞையின்படி இந்த ஆலயம் உருவாக உள்ளது. சுமார் மூன்றரை ஏக்கர் பரப்பளவில் மலையும், மலைசார்ந்த இயற்கை சூழலும் அமையப்பெற்ற ஸ்ரீவனத்தில் இந்த ஆலயம் அமைய உள்ளது. சுமார் ரூ.4.50 கோடி மதிப்பட்டில் தங்கத்தால் கருவரையின் மேற்கூரை அமைய உள்ளது. இந்த ஆலயம் கேரள ஆலய சிற்பக்கலையை அடிப்படையாக கொண்டு அமைய உள்ளது. இந்த ஆலயத்தின் மூலஸ்தானம் கருங்கல்லினால் சதுர வடிவ அமைப்புடனும், மூன்று பிராகாரங்களுடன் அமைய உள்ளது. முதல் பிரகாரத்தில் மஹாகணபதி, சுப்ரமணியர் அருள்பாளிக்க உள்ளனர். இரண்டாம் பிரகாரத்தில் ஸ்ரீபகளாமுகியும், ஸ்ரீமகாகாளர் மூன்றாம் பிரகாரத்திலும் பிரஸ்திஷ்டை செய்யப்பட உள்ளனர்.
மூலஸ்தானத்தில் முப்பெரும் தேவியரின் அம்சமாகிய ஸ்ரீமஹாசண்டிகாதேவி சர்வசக்திகள் பொருந்திய அன்னையாக பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். தாயின் கருவரைக்குள் எப்படி குழந்தை உருவாகிறதோ அதே போல அன்னை ஸ்ரீமஹாசண்டிகாதேவியின் கருவறையும் அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கருவரையில் செயற்கை வெளிச்சம் எதுவுமின்றி நெய் தீப வெளிச்சத்தில் மட்டுமே அம்மனை தரிசிக்கின்ற அற்புதத்தை இந்த ஆலயததில் மட்டுமே காண முடியும். விளக்கு வழிபாடுதான் இந்த ஆலயத்தின் முக்கியமான பரிகார வழிபாடு ஆகும். மேலும் இந்த ஆலயத்தின் அருகிலேயே புனித குளம் ஒன்று உருவாக்கப்பட உள்ளது. பக்தர்கள் தங்கள் பாதங்களை சுத்தம் செய்த பிறகே ஆலயத்தில் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இங்கு வருகின்ற ஆண்கள் தூய வஸ்திரம் அனிந்து, மேலாடை இல்லாமல் மட்டுமே அம்பாளை தரிசிக்க அனுமதிக்கபடுவார்கள்.
பசி என்று குழந்தை அழுதால் தாய் மனம் பொறுக்குமோ? அதுபோல தன்னை நாடி வரும் பக்தர்களும் பசி அறியக்கூடாது என்பது அன்னையின் அருள்வாக்கு. இதற்காகவே இந்த ஆலயத்தில் சதா சர்வகாலமும் கோயில் நிர்வாகத்தின் சார்பிலேயே அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் வேறு எங்கும் இது போன்ற வழிபாட்டு முறை இல்லை என்று சொல்லும் வகையில் ஒன்பது கால வழிபாடுகள் தினந்தோறும் நடைபெற உள்ளது. இந்த ஆலயத்தில் தினமும் ஸ்ரீமஹா சண்டிகா ஹோமமும், ஸ்ரீபலி மூன்று முறையும் நடைபெற உள்ளது. இங்கு அம்பாளுக்கு சாற்றப்படும் பூமாலை தர்பையில் தொடுத்து சாற்றப்படும். நித்யமும் தொடர்ந்து ஓன்பது காலங்களுக்கும் அம்பாளின் பிரீத்திக்காக குங்குமார்ச்சனை, பஸ்மார்ச்சனை நடைபெறும் மேலும் நித்தியமும் ஸ்ரீ லலிதாசகஸ்ர்நாமம், பன்னிருதிருமறை ஓதுதலும் நடைபெறும். இந்த ஆலயத்தை சுற்றி வேத பாடசாலை, கல்விச்சாலை, ஆயுர்வேத வைத்திய சாலை, சைவ சமய பயிற்சி, தியான மண்டபம், முதியோர் இல்லம் மற்றும் கோயில் பணி செய்பவர்களுக்கு வீடுகள் போன்ற வசதிகளும் செய்யப்பட உள்ளது. இவ்வாலயத்தில் ஒவ்வொரு வருஷமும் ருத்ர ஏகாதசி ஹோமம் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் ஆண்டுதோறும் பஹவதி ஷேவை ஹோமமும் மற்றும் மார்கழி மாதங்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகிறது.
குறிப்பு:- ஹோமங்களில் மஹாசண்டி ஹோமம் மிக சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதுபோல் அருள்மிகு ஸ்ரீமஹாசண்டிஹாதேவி மலைமகள், அலைமகள், கலைமகள் ஆகிய முப்பெறும் தேவியரின் அம்சமாக மிக சக்திவாய்ந்தவராக கருதப்படுகிறார். பாலமேடு அருகே உள்ள ஸ்ரீவனத்தில் உருவாகும் அருள்மிகு ஸ்ரீமஹாசண்டிகா ஷேத்திரம் இயற்கை எழிலுடன் கர்நாடக மாநிலம் கொல்லூரில் உள்ள ஸ்ரீமுகாம்பிகை அம்மனுக்கு நிகரான சக்தியுடன் அமைய உள்ளது. ஸ்ரீமஹாசண்டிகா அம்பாளை தரிசிப்பவர்களுக்கு எப்படிப்பட்ட தோஷங்களும் விலகிவிடும் மேலும் எந்தவித தீயசக்தியும் அணுகாது என்பது சத்தியம்.
This temple devatsnanam is accepting the offering to temple from devotees, either as materials (Bricks, Sand, or other ) required for temple construction or in form of money for temple.
A Small obligation to members, please can any one translate the above message in ENGLISH and produce in the same thread, Advanced Thanks anna..........
For Contacting the temple, Please see the website, There is a dedicated website for this temple: Welcome to Sri Madam, Madurai.
ohm Namashivaya !