அருள்மிகு சுந்தர நாச்சியார் அம்மன்

Status
Not open for further replies.

Raji Ram

Active member
அருள்மிகு சுந்தர நாச்சியார் அம்மன்

அருள்மிகு சுந்தர நாச்சியார் அம்மன் திருக்கோவில்

ராஜ பாளையம் அருகில் அமைந்துள்ளது இத் திருக்கோவில்.

இந்தக் கோவில் பற்றிய கர்ண பரம்பரைக் கதையைக் கூறிய பின்,

இந்த அம்மனைப் பற்றி நான் அமைத்த பாடலையும் தருகிறேன்.

அம்மன் அருள் பெற்று, அனைவரும் நலம் பல பெறுவோம்!

உலகம் உய்ய வேண்டும், :pray2:
ராஜி ராம்
 
சுந்தர நாச்சியார் அம்மன் கதை .....

அருள்மிகு சுந்தர நாச்சியார் அம்மன் கோவில்
அருள் தர, ராஜபாளையம் அருகிலே உள்ளது.

சோலை வனத்திடையே அமைந்த கோவில்.
சோலை வன தேவி, திரிபுர சுந்தரி, திரிசூலி,

அகிலாண்டேஸ்வரி என்றெல்லாம் இந்த
அகிலம் காக்கும் நாயகிக்குப் பெயர்கள்!

சுயம்புவாக எழுந்த இந்த அழகிய அம்மனின்
சுய சரித்திரம், மிகவும் சுவையான ஒன்று!

பல்லாண்டுகளுக்கு முன் இந்த அம்மனை
பல்வேறு பூஜைகளுடன் வழிபட்ட போது,

ஏழை அர்ச்சகன் ஒருவன், தாயே கதி என்று,
கூழைக் குடித்தாலும், பக்தி செய்திருந்தான்.

அவன் வாழ வழி காட்ட, அம்மன் அவனுக்கு
தினம் ஒரு ரூபாய் வாயிற்படியில் வைக்க,

அதில் வாழ்ந்த அவனுக்கு, மணம் முடிந்தது;
மனதில் அம்மனை வேண்டி வணங்கியதில்,

குழந்தைச் செல்வம், மகள் உருவில் கிடைக்க,
குழந்தையைப் பேணி வளர்த்தான். அவள்

குமரிப் பருவம் எய்தியபோது, மணம் செய்யத்
தவறிப் போவோமோ என மிக வருந்தினான்.

:faint2:தொடரும் .....
 
சுந்தர நாச்சியார் அம்மன் கதை ..... தொடர்ச்சி

செல்வம் வேண்டி அம்மனை தியானிக்க,
செல்வம் கிடைக்க, அவள் வழி உரைத்தாள்.

கோவிலில் மறு நாள் பூஜை முடிந்தபின்,
கோவில் வாயிற்படியைத் தள்ளினால்,

அடியில் கிடக்கும் தங்க ஆபரணங்கள்;
நொடியில் ஒரு கை அள்ளிய பின், படியை

மீண்டும் பழையபடி வைத்திட உரைத்தாள்;
வேண்டும் பொருளுக்கு மேல் பேராசை

கொண்டால், தண்டனை ஏற்கவே வேண்டும்
என்றாள்; கனவினின்று அவள் மறைந்தாள்.

மறுநாள் அதேபோல் பூஜை முடித்த அவன்,
'திருநாள் இன்று செல்வம் கிட்ட', என எண்ணி

குனிந்து கோவில் வாயிற்படியைத் தள்ள,
குவிந்து கிடந்தன, பொன் ஆபரணங்கள்!

ஆசை யாரை விட்டது? அம்மன் தடுத்தும்,
பேராசை பேயைப் போல மனதில் நுழைய,

அள்ளி, அள்ளி எடுக்க, தன் காலால் அவனைத்
தள்ளி அக்கணமே முக்தி அளித்தாள், அவள்!

சந்தான பாக்கியம் நல்கிய அம்மன் அருளிய,
சந்தோஷ வாழ்வை நன்கு அனுபவிக்காமல்,

அன்று முக்தி அடைந்தான், அந்த அர்ச்சகன்;
என்றும் பேராசை ஆகாதென உணர்த்தினான்.

ஓராண்டு முடிந்த பின், அவன் மகள் திருமணம்
சீரும் சிறப்புமாய் நடந்ததாகச் சொல்லுவார்!

:thumb:
 
Last edited:
நளினமான நளினகாந்தி ராகம்.

எளிதான ஆதி தாளம்.

பல்லவி:

சுந்தரி நீயே அருள் புரிவாயே

சங்கரி மாயே சரணம் தாயே

அனுபல்லவி:

சுந்தர நாச்சியார் அம்மனாய் விளங்கும்

சந்தான பாக்கியம் நல்கும் தேவியே என்றும்

சரணம்:

கணமும் உனை மறவா தீனன் அர்ச்சகன் அன்று

தினமும் இனிது வாழ வழி காட்டினாய் - அவன்

மனத்தில் பேராவல் தோன்றிய போது

கணத்தில் முக்தி அளித்துக் காத்தாய்

இரண்டாம் காலம் :

கலியுக நாளில் பக்தரைக் காத்திடும்
கருணையால் சுயம்புவாய்த் தோன்றி வந்தாய்

திரிசூலி சோலை வனத்தமர் தேவி
திரிபுர சுந்தரி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி

 
AruLmigu Sundara Naachchiyaar Amman

PC260123.JPG
 
Status
Not open for further replies.
Back
Top