• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

அருந்ததியை ஏன் பார்க்க வேண்டும்?

Status
Not open for further replies.
அருந்ததியை ஏன் பார்க்க வேண்டும்?

[h=2]அருந்ததியை ஏன் பார்க்க வேண்டும்?[/h]
திருமணச் சடங்கில் 'அருந்ததி பார்ப்பது' என்பது முக்கியச் சடங்கு வழக்கமாகப் பின்பற்றப்படுகிறது. யார் இந்த அருந்ததி? அருந்ததி தேவி சப்தரிஷிகளில் ஒருவரான வசிஷ்டரின் மனைவி. வானில் வசிஷ்டரும் அருந்ததியும் நட்சத்திரங்களாக மின்னிக்கொண்டிருப்பதாக நம்பிக்கை உண்டு.
சப்தரிஷி மண்டலத்தை நாம் வானில் எளிதாகக் காண முடியும். அதில் நான்கு நட்சத்திரங்கள் ஒரு நீள்சதுரம்போல் தோன்றும். அதிலிருந்து வளைந்த வால்போல் மூன்று நட்சத்திரங்கள் வரிசையாக நீண்டு இருக்கும். அந்த மூன்றில் நடுவில் உள்ள நட்சத்திரம்தான் வசிஷ்டர். அதற்கு மிக அருகில் ஒளி வீசும் நட்சத்திரம்தான் அருந்ததி.
அருந்ததி தர்ம பத்தினியாகப் புராணக்கதைகளில் போற்றப்படுகிறார். அருந்ததி முன்ஜென்மத்தில் பிரம்மனின் மகளாக இருந்தார் .
அக்னி தேவனுடைய மனைவி ஸ்வாஹா, முனிவர்களின் மனைவியரைப் போல் உருவம் எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவள். ஒருமுறை அவளுக்கு அருந்ததியைப் போல உருமாற விருப்பம். அவளும் பலமுறை உருமாற முயன்றாள். ஆனால் அவளால் அப்படி மாற முடியவில்லை. வேறு ஒருவராக உருமாற, முதலில் அவர்களின் பண்புகளைப் பெற வேண்டும். எவ்வளவோ முயன்றும் அருந்ததியின் பண்புகளை ஸ்வாஹா், பெற முடியவில்லைமனம் தளர்ந்த அவள் இறுதியாக அருந்ததியிடம் சென்று, வணங்கித் தோல்வியை ஒப்புக்கொண்டாள். திருமணத்தின்போது கணவனின் கரம் பிடிக்கையில் அருந்ததியைப் பார்க்கும் பெண் நீண்ட காலம் நல்ல இல்லறத்தையும் செல்வத்தையும் அடைவாள் என்றும் வாழ்த்தினாள்.
திருமணச் சடங்கில் அருந்ததியைப் பார்க்கும் பழக்கம் உருவானது.

ஸப்த ரிஷிகள் பத்னிகளுக்கு க்ருத்திகா என்று பெயர். அவர்களுல் சிறந்தவளான அருந்ததியை மற்ற அறுவர்களும் இவளே எங்களில் மிக உத்தமி என ஏற்றுக்கொண்டனர். அததகைய அருந்ததின் தரிசனத்தினால் இந்த மணபெண் எட்டாவது க்ருத்திகை போல் பாக்யதினாலும் கற்பினாலும் வ்ருத்தி அடையட்டும். என்ற இந்த மந்திரம் சொல்லி காண்பிக்க வேண்டும்.

"ஸப்தர்ஷய: ப்ரதமாம் க்ருத்திகானாம் அருந்ததீம் யத் த்ருவதாம் ஹ நின்யு: ஷட் க்ருத்திகா: முக்ய யோகம் வஹந்தி இயம் அஸ்மாகம் ஏதது அஷ்டமி"
 
Thank you Mr Gopalan sir for your valuable information. PSN
 
Status
Not open for further replies.
Back
Top