அரிசி அப்பளம் / Arisi Appalam

Status
Not open for further replies.
அரிசி அப்பளம் / Arisi Appalam

அரிசி அப்பளம்
தேவையான பொருட்கள் :

ப.அரிசி : 2 ஆழாக்கு (மாவு அரிசி)
எலுமிச்சம் பழம் : 2 to 3 (நறுக்கி பிழிந்து ஜூஸ் எடுத்துக்கொள்ளவும்)
பெருங்காயப்பொடி : 2 டி ஸ்பூன்
தண்ணீர் : தேவையான அளவு
அரிசி மாவு : தேவையான அளவு
தேங்காய் எண்ணை : தேவையான அளவு

விழுதாக அரைத்துக்கொள்ளவும் :

உப்பு : தேவையான அளவு
பச்சைமிளகாய் : அவரவர் காரத்திற்கேற்ப

செய்முறை :


  • அரிசியை 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • பிறகு நீரை வடிகட்டி வாணலியில் சிறிது சிறிதாக போட்டு பொரித்துகொள்ளவும்.
  • ஆறியவுடன் மாவாக அரைக்கவும்.
  • மாவுடன் அரைத்த பச்சை மிளகாய் உப்பு சேர்த்த விழுதை சேர்க்கவும்.
  • பெருங்காயப்பொடி சேர்த்து தண்ணீரை தெளித்து, எலுமிச்சை பழ ஜூஸ் சேர்த்து பிசறினால் போல் கலந்து கெட்டியாக பிசையவும்.
  • பிறகு உரலில் மாவை போட்டு உலக்கையில் தே.எண்ணை தடவி மாவை இடிக்கவும்.
  • பிறகு மாவை எடுத்து பாம்பு போல் நீளமாக திரட்டி சிறிது சிறிதாக கிள்ளி நன்றாக உருட்டி அரிசி மாவில் தோய்த்து குழவியால் அப்பளமாக இட்டு வெய்யிலில் காய வைக்கவும்.

குறிப்பு : அப்பளம் நன்றாக வருவதற்கு அரிசி ரகம், மாவு பதம் மற்றும் அரிசி மாவை உரலில் இடிக்கும் பதம் மிக முக்கியம். மேல் சொன்ன செய்முறைகளில், ஒரு முறை சிறிய quantity இல் செய்து பார்த்து பக்குவத்தை அறிந்து கொண்டு பெரிய quantity இல் செய்ய முற்படவும்.

????? ??????? / Arisi Appalam - Bama Samayal
 
hi

many mamis makes nice rice appalams in their homes....so we can get home made appalams....
 
Yes it is, Sir!

But who will strive to try the not-easy-to-get-it-right recipe and waste time and energy? :D

Maamiyar in certain house holds!

This is the Spread for Mappilai Virundu - includes applam! looks colourful like Kannu Pidi!!




image001.jpg
 
Status
Not open for further replies.
Back
Top