அரசியல் வானில் போலி பட்டங்கள்!

  • Thread starter Thread starter V.Balasubramani
  • Start date Start date
Status
Not open for further replies.
V

V.Balasubramani

Guest
அரசியல் வானில் போலி பட்டங்கள்!

அரசியல் வானில் போலி பட்டங்கள்!


  • 1_2454352g.jpg
    • ஸ்மிருதி இரானி - ஜிதேந்திர சிங் தோமர்
      -------------------------------------------------------------------------------------------

ஏதும் தெரியாத அக்காலக் கவிஞர், ‘மலை வாழை அல்லவோ கல்வி, விலைபோட்டு வாங்கவா முடியும்?’ என்று பாடிவைத்தார். இன்றைக்கு லஞ்சமும் ஊழலும் நுழைய முடியாத துறைகளே இல்லை. ‘அரசியல் என்பது அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்’ என்றான் மேலைநாட்டு அறிஞன். நம் நாட்டில் பலரும் நேரத்தை வீணாக்குவதில்லை.

அயோக்கியத்தனத்திலும் வடிகட்டியது ஒன்று உண்டு என்றால், படிக்காமலேயே பட்டம் வாங்குவதும் அதை ஊரறியத் தம்பட்டம் அடித்துக்கொள்வதும்தான். நம் நாட்டு அரசியல்வாதிகள் அதில் கைதேர்ந்தவர்கள். ‘ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண்’ என்றொரு தனிச் சிறப்பும் இதில் உண்டு.

இன்றைய இந்தியாவில் எந்த ஒரு பதவிக்கும் போட்டியிட ‘குறைந்தபட்சத் தகுதி’ என்று எதுவுமே கிடையாது. ‘18 வயதுக்கு மேல் ஆகியிருக்க வேண்டும், திவாலாகியிருக்கக் கூடாது, பைத்தியமாக இருக்கக் கூடாது (வாக்காளர்கள் இருக்கலாம்!)’ என்ற குறைந்தபட்ச நிபந்தனைகளோடு சரி.

குற்ற வழக்குகளில் கடும் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற சட்டத் திருத்தம் பின்னாளில் வந்திருக்கிறது. இவ்வளவுதான் அரசியல்வாதிகளைத் தடுத்து நிறுத்தும் நிபந்தனைகள். அப்படியும் சிலர் தங்களுடைய கல்வியறிவுக் குறைவைப் பெரிய இழப்பாகக் கருதி, அந்தக் குறையைத் தாங்களாகவே தீர்த்துக்கொண்டுவிடுகிறார்கள்.
மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்குப் பிறகு அவர்களுடைய கல்விச் சான்றிதழ்களை ஒப்பிட்டுப் பார்ப்பது இப்போதைய நடைமுறை; அதையே ஒவ்வொரு பொதுத் தேர்தலுக்குப் பிறகும் மாநிலத்திலும் மத்திய அரசிலும் மேற்கொள்ளப்பட்டால் ஏராளமான போலி பட்டதாரிகள் பிடிபடுவார்கள் என்பது நிச்சயம்.
அரசியல் தலைவர்கள் சிலர் மீது இப்போது போலி பட்டதாரிகள் என்று குற்றச்சாட்டு கூறப்படுகிறது. எனவே, மக்களுடைய கவனம் அவர்கள் மீது திரும்பியிருக்கிறது.

ஸ்மிருதி இரானி:
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக ஸ்மிருதி இரானியைப் பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்தபோதே லட்சக்கணக்கான புருவங்கள் உயர்ந்தன. காரணம், அவர் தொலைக்காட்சித் தொடர் நடிப்பால் அறியப்பட்டவரே தவிர, படிப்பால் அல்ல. பட்டப் படிப்பைக்கூட முடிக்காத அவரைப் பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களையும், கல்வியாளர்களையும், சிந்தனையாளர்களையும் சந்திக்க வேண்டிய இடத்தில் அமர வைத்தார் மோடி. நம் நாட்டுக் கல்வியைத் தரம் உயர்த்தி, உலக அரங்கில் ஏற்றி வைக்க பாரதிய ஜனதா கட்சியில் கிடைத்த அதிகபட்சத் தகுதி உள்ள வேட்பாளர் ஸ்மிருதி இரானிதான் என்றால், நாடு என்ன செய்ய முடியும்?

Read more at: http://tamil.thehindu.com/opinion/columns/அரசியல்-வானில்-போலி-பட்டங்கள்/article7361849.ece?homepage=true&theme=true
 
Status
Not open for further replies.
Back
Top