அமாவாசை விரதம் முறைகள்

முதலில் அமாவாசை தினத்தில் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விடவேண்டும். பின்பு வீட்டிலுள்ள எதிர்மறை சக்திகள் விலக உப்பு கலந்த நீரால் வீடு முழுவதையும் கழுவி தூய்மைப்படுத்த வேண்டும். பின்பு வீட்டிலுள்ள பூஜையறையில் காலையிலும், மாலையிலும் விநாயகர் படத்திற்கு முன்பு தீபம் ஏற்ற வேண்டும்.

அமாவாசை தினத்தில் புலால் உணவுகள், பூண்டு, வெங்காயம் சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்த்து சாத்விக உணவுகளை உண்ண வேண்டும். முடிந்தால் அன்றைய தினம் முழுவதும் பால் பழங்களை உண்ணலாம் அதோடு உங்களுக்கு விருப்பமான கோவிலுக்கு சென்று வழிபட்டு வரலாம்.
அமாவாசை பூஜை பெரும்பாலான நாட்கள் பூஜையை தொடங்குவதற்கு முன்னர், பூஜை அறை மற்றும் மற்ற இடங்களில் கோலம் இடுவது வழக்கம். ஆனால் அமாவாசை தினத்தில் பூஜை செய்வதற்கு முன் கோலமிடுதல் கூடாது.

சுவாமி படங்களுக்கு மலர்களை சூட வேண்டும்.
வீட்டில் பூஜை அறையில் ஒற்றை விளக்கு ஏற்றக் கூடாது என்பதால், இரண்டு விளக்குகள் ஏற்றுவது நலன். அதனால் இரண்டு விளக்குகள் ஏற்றவும்.

முன்ன ோர்களுக்கு அமாவாசை தர்ப்பணம் கொடுக்க விரும்புபவர்கள் சுவாமியை கும்பிட்டு தர்ப்பணம் கொடுத்துவிட்டு, அவர்களுக்கு படையல் இடலாம்.
 
Back
Top