• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

அப்துல் கலாம்..ஒரு மாறுபட்ட கருத்து.. [tvk ]

Status
Not open for further replies.

kk4646

Active member
அப்துல் கலாம்..ஒரு மாறுபட்ட கருத்து.. [tvk ]

எனக்கும் அப்துல் கலாமை பிடிக்கும்:எதோ ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து நாட்டின் ஜனாதிபதியான ஒரு மனிதனாக எல்லாருக்கும் நம்பிக்கை ஊட்டிய,
தன் துறையில் சிறந்த அறிவாளியாய் இருந்த
உயர்ந்த கனவுகள் கண்டு அதற்காக உழைத்த
குழந்தைகளை/ மாணவர்களை நேசித்த
எளிமையாய் இருந்த
அப்துல் கலாமை எனக்கும் பிடிக்கும்.

எனக்கு அப்துல் கலாமை பிடிக்கும்.
நூறு சதவீதம் பிடிக்கும்.

ஆனால் இந்த அரசாங்கம்(அரசியல்) உருவாக்கிய பொம்மை அப்துல் கலாமை எனக்கு பிடிக்காது

அந்த பொம்மையைத்தான் உங்களுக்கு பிடித்திருக்கிறது,

அதுதான் இங்கு பிரச்சினை

ஏழை குடும்பத்தில் பிறந்து ஜனாதிபதி ஆனதால் அவரைப்போலவே எல்லாரும் ஆகலாம் என்று அதீத நம்பிக்கை ஊட்ட பயன்பட்ட பொம்மை

சிறந்த விஞ்ஞானி என்பதால் எல்லா துறைகளிலும் சிறந்தவர் என்று அரசாங்கத்தின் தேவைகளை நடுத்தர மக்களிடம் திணிக்க பயன்பட்ட பொம்மை

உயர்ந்த கனவுகள் காணுங்கள் என்று கூறி இளைஞர்களை அரசியலை விட்டு ஒதுக்கி வைக்க பயன்பட்ட பொம்மை.

மாணவர்களுக்கு அரசியல் தேவை இல்லை என்று வலியுறுத்த பயன்பட்ட பொம்மை

மாணவர்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமையாக உருவாக்க பயன்பட்ட பொம்மை.

அந்த பொம்மை அப்துல் கலாம் அல்ல.

அது வெறும் பொம்மை

அந்த பொம்மையைத்தான் நீங்கள் விரும்புகிறீர்கள்

அந்த பொம்மையைத்தான் நீங்கள் உங்கள் கதாநாயகனாக வழிபடுகிறீர்கள்.

அந்த பொம்மையை நான் வெறுக்கிறேன்.

நூறு சதவீதம் வெறுக்கிறேன்

[ Source: FaceBook]

P.S. இந்த கருத்தில் எனக்கும் ஓரளவு உடன்பாடு உண்டு...

TVK
 
I agree that Dr. Abdul Kalam, the person and Abdul Kalam, the President (Ex-President) were not one and the same. I also have felt, ever since the book "wings of fire" came into publicity, that every poor boy in India or even in Rameswaram cannot become India's President even if he tries all his best. So, why give rise to expectations and dreams in the mind of our young people unnecessarily?

But I don't think all the things which Abdul Kalam did were "puppet dance" staged by political forces. Partly, Dr. Abdul Kalam, the person himself is also responsible.
 
எனக்கும் அப்துல் கலாமை பிடிக்கும்:எதோ ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து நாட்டின் ஜனாதிபதியான ஒரு மனிதனாக எல்லாருக்கும் நம்பிக்கை ஊட்டிய,
தன் துறையில் சிறந்த அறிவாளியாய் இருந்த
உயர்ந்த கனவுகள் கண்டு அதற்காக உழைத்த
குழந்தைகளை/ மாணவர்களை நேசித்த
எளிமையாய் இருந்த
அப்துல் கலாமை எனக்கும் பிடிக்கும்.
எனக்கு அப்துல் கலாமை பிடிக்கும்.
நூறு சதவீதம் பிடிக்கும்.

எனக்கும் கூட அப்துல் கலாமைப்பிடிக்கும். இந்த எல்லாக்காரணங்களுக்காகவும் இன்னும் சிலவற்றுக்காகவும்.

ஆனால் இந்த அரசாங்கம்(அரசியல்) உருவாக்கிய பொம்மை அப்துல் கலாமை எனக்கு பிடிக்காது
அந்த பொம்மையைத்தான் உங்களுக்கு பிடித்திருக்கிறது,அதுதான் இங்கு பிரச்சினை

பொம்மை எதுவும் இல்லை.

ஏழை குடும்பத்தில் பிறந்து ஜனாதிபதி ஆனதால் அவரைப்போலவே எல்லாரும் ஆகலாம் என்று அதீத நம்பிக்கை ஊட்ட பயன்பட்ட பொம்மை

எல்லாரும் ஜனாதிபதி ஆக முடியாது என்பது தெரியாத அளவுக்கு இளைஞர்கள் முட்டாள்கள் அல்ல.

சிறந்த விஞ்ஞானி என்பதால் எல்லா துறைகளிலும் சிறந்தவர் என்று அரசாங்கத்தின் தேவைகளை நடுத்தர மக்களிடம் திணிக்க பயன்பட்ட பொம்மை

சிறந்த விஞ்ஞானி. சிறந்த Science Manager உம் கூட அவ்வளவே.

உயர்ந்த கனவுகள் காணுங்கள் என்று கூறி இளைஞர்களை அரசியலை விட்டு ஒதுக்கி வைக்க பயன்பட்ட பொம்மை.

உயர்ந்த கனவுகள் காணுமாறு உற்சாகப்படுத்துவது தவறில்லை. துப்பாக்கியை எடுங்கள் சுடுங்கள் சொர்க்கத்துக்கு சென்று இளம் பெண்களுடன் இனியதாய் பொழுதுகழிக்கலாம் என்று சொல்வது தான் தவறு.

மாணவர்களுக்கு அரசியல் தேவை இல்லை என்று வலியுறுத்த பயன்பட்ட பொம்மை

மாணவர்களுக்கு அரசியல் தேவை இல்லை தான்.

மாணவர்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமையாக உருவாக்க பயன்பட்ட பொம்மை.

பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்வது அடிமைத்தொழிலில்லை. பன்னாடுகளில் இந்தியாவும் ஒன்று தான்.

அந்த பொம்மை அப்துல் கலாம் அல்ல.
அது வெறும் பொம்மை அந்த பொம்மையைத்தான் நீங்கள் விரும்புகிறீர்கள் அந்த பொம்மையைத்தான் நீங்கள் உங்கள் கதாநாயகனாக வழிபடுகிறீர்கள்.

வழிபாடெல்லாம் ஒன்றும் இல்லை. பாராட்டுகிரோம். அவ்வளவே.

அந்த பொம்மையை நான் வெறுக்கிறேன்.
நூறு சதவீதம் வெறுக்கிறேன்

வெறுத்துட்டு போப்பா. எக்கேடும் கெட்டுப்போ. எங்களுக்கு ஒன்றும் இல்லை. உன் வெறுப்பைச்சொல்லி எங்களிடம் ஏன் புலம்புற?

P.S. இந்த கருத்தில் எனக்கும் ஓரளவு உடன்பாடு உண்டு...

TVK
[/QUOTE]
 
Status
Not open for further replies.
Back
Top