அன்றும் இன்றும் என்றும்

Status
Not open for further replies.
அன்றும் இன்றும் என்றும்

அன்றும் இன்றும் என்றும்

மழலையில் சிலிர்த்த நாள் மறக்கும் முன்னே

வார்த்தை மழையில் சிரிக்க வைத்தாய் பெண்ணே
உன் பிஞ்சு பாதத் தொடுகைப் பசியாறும் முன்னே
உன் கால் கொலுசொலி என் செவிக்கு உணவானதென்னே..

உன் தூங்கும் மெத்தையாய் இருந்த மடி
இன்று நீ அமரும் ஆசனம் ஆனதடி
என் தோள் நீ அன்று அமரும் படி
இன்று உன் மருதாணி விரல்களின் மாலையடி

நீ என் காலடிக் கொடியான காலம் சென்று
எழில்மிகு மலர்வனம் நீ ஆன பின்பு
நம் உள்ளம் ஏனடி மாறவில்லை ?
இன்னமும் நான் ஊட்டிடும் நீ சிறுபிள்ளை...

அன்று உன் கண்கள் பேசிய அன்பு மொழி
இன்னமும் சுடர் விடும் பாச ஒளி...
மகளாய் பிறந்த நீ இன்று தோழியடி..
என் மூப்பின் முகப்பினில் நீ தாயின் மடி...

- Dedicated to Sups (my daughter)
 
உருண்டிட்ட காலமெனும் தோணியிலே..

உருவாகி வந்திட்ட என் மகளே..

உள்ளத்தால் என் அன்புநிறை செல்வி ஆயினும்..

உணர்த்திடுவாய் என்றும்... உன் அன்புதனையே...

உணர்வாய் பகிர்ந்திடவே வந்திடுவான் ஓர் ஆண்மகன்..

உருவத்தால் வேறாயினும் உள்ளத்தால் ஒன்றாகி..

உறவுக்கு வழிகாட்டுதலாய்..வாழ்ந்திட வேண்டுமடி

...என் மகளே...

PS :

This was written in 'flash' after reading the poem by 'thebigthinkg'..Pardon me for this..!!

TVK

அன்று குட்டிப் பெண்;

இன்று சுட்டி மங்கை;

நாளை காக்கும் தாய்!

இதுதான் இயற்கை!
 
உருண்டிட்ட காலமெனும் தோணியிலே..

உருவாகி வந்திட்ட என் மகளே..

உள்ளத்தால் என் அன்புநிறை செல்வி ஆயினும்..

உணர்த்திடுவாய் என்றும்... உன் அன்புதனையே...

உணர்வாய் பகிர்ந்திடவே வந்திடுவான் ஓர் ஆண்மகன்..

உருவத்தால் வேறாயினும் உள்ளத்தால் ஒன்றாகி..

உறவுக்கு வழிகாட்டுதலாய்..வாழ்ந்திட வேண்டுமடி

...என் மகளே...

PS :

This was written in 'flash' after reading the poem by 'thebigthinkg'..Pardon me for this..!!

TVK

மிக அருமை
 
Status
Not open for further replies.
Back
Top