அன்னாபிஷேகம் வழிபாடு

praveen

Life is a dream
Staff member
அன்னாபிஷேகம் வழிபாடு

அன்னாபிஷேகம் வழிபாடு.


ஒவ்வொரு மாதத்தில் பவுர்ணமி அன்று நம் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் நைவேத்தியம் உண்டு


அந்த #வகையில் *வருகிற ஐப்பசி மாதம் 24.10.2018. புதன் கிழமை அனைத்து சிவாலயங்களில்
மஹாஅன்னாபிஷேகவிழா மிகவும் சிறப்பாக நடேபெறவுள்ளது.*


அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெறுமாறு வேண்டுகிறோம்.


அன்னாபிஷேகத்திற்கு #வரலாறு அல்லது தகவல்கள் .


1. தட்சனிடம் பெற்ற சாபம் சிவபெருமானால் சந்திரன் #சாபநிவர்த்தி செய்ததது இம்மாதம் என்று குறிப்பிடப்படுகிறது.


" சந்திரனை தன் சூட்டினார் போலும் - அப்பர் தேவாரம்.


2. அறிவியலின் படி சந்திரன் இம்மாதத்தில் தான் (ஐப்பசி) பூமிக்கு மிக அருகில் இருக்கும் என்று குறிக்கப்படுகிறது.


3. நவகிரகங்களில் சந்திரனுக்கு நெல் (அரிசி) உகந்தது . அதன் பொருட்டு சிவ பெருமானுக்கு லிங்கம் முழுவதும் அன்னத்தால் நிரப்பப்பட்டு வழிபாடு செய்வார்கள் . இதனால் சந்திரனின் கதிர்வீச்சு முழுவதும் #சமன் செய்யப்படுகிறது.


4. சிதம்பர நடராஜர் கோயிலில் நித்யம் ஸ்படிக லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்வது வழக்கமாக உள்ளது.
இன்றும் நீங்கள் கண்டு #களிக்கலாம்.*


5. அன்னாபிஷேகத்தின் பொழுது நான்கு வேதங்களும் திருமுறை பாராயணங்களும் நடைபெறும்.


6. சுவாமிக்கு சாற்றப்பட்ட அன்னத்தை மூன்றில் ஒரு பகுதியை கோயில்ஏரி , குளம் , ஆறு அல்லது கிணற்றில்விட்டு_வழிபாடு செய்வார்கள்.


7. நம் மக்களுக்கு என்றும் உணவுநீர்பஞ்சம் ஏற்படாமல் இருக்க இறைவனுக்கு அன்னாபிஷேத்தை செய்து வழிபாடு செய்து வருகிறோம்.*

8. சிவ பெருமானுக்கு அபிஷேக பிரியர் என்று பெயர் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் அன்னாபிஷேகத்தையும் சேர்த்து அன்று முதல் இன்று வரை வழிபாடு செய்து வருகிறோம்*.


9. சிவ பெருமானுக்கு
சுத்த அன்னம் தான் நித்தலும் நைவேத்யமாக காட்டப்படுகிறது.*


10. எந்த பவுர்ணமியில் இல்லாத ஒன்று இந்த பவுர்ணமிக்கு ஓர் #சிறப்பு உள்ளது. காரணம் இந்த பவுர்ணமியில் தான் சுவாமிக்கும் #அன்னம் #சாத்தப்படுகிறது. பக்தர்களுக்கும் பசி தீர உணவு வழங்கப்படுகிறது


எனவே அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று இறைவனை தரிசித்து புண்ணியம் பெறுமாறு வேண்டுகிறேன்..


ஆலயம் தொழுவது சாலவும் நன்று
 
Back
Top