அனைத்து விதமான சனி தோஷங்களும் நீங்க..,

Status
Not open for further replies.
அனைத்து விதமான சனி தோஷங்களும் நீங்க..,

அனைத்து விதமான சனி தோஷங்களும் நீங்க..,


நவக்கிரகங்களில் முக்கியமான கிரகம் சனியாகும்.இவரை போல் கொடுப்பாரும் இல்லை.கெடுப்பாரும் இல்லை.ஒருவருக்கு துன்பத்தை கொடுத்தாலும் ந்ல்ல பக்குவத்தையும்,மன முதிர்ச்சியயும் தருபவர்.இருந்தாலும் இவர் பல வடிவங்கள் மனிதர்களை துன்புறுத்துவார்.

ஏழரை சனி,பொங்கு சனி,அஷ்டம சனி,மங்கு சனி மேலும் ஜாதகத்தில் சனி பாவியாக இருந்தால் சனி திசா,சனி புத்தி போன்ற காலங்களில் இவரால் ஏற்படும் துன்பம் அதிகம்.சனியால் ஏற்படும் அனைத்தும் வகையான துன்பங்களும் தீர்வு கிடைகும் தலம் எது தெரியுமா?அதுதான் திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் ஆலயம்.

இந்த தலத்தின் சிறப்பு என்னவென்றால் சனி பகவான் உச்சம் பெற்றதலமாகும்.சனி தோஷம் போக்குவதில் திருநள்ளாறையும் விட இத்தலம் சிறப்பு பெற்றது. சனி பகவானால் உண்டாகும் அனைத்து தோஷங்களும் இத்தலத்திற்கு சென்று வந்தால் உடனடியாக நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.

இக்கோவிலுக்கு இராஜகோபுரம் இல்லை.இறைவன் சந்நிதி மேற்கு நோக்கி உள்ளது. அக்னிதேவன் வழிபட்ட தலமாதலால் திருகொள்ளிக்காடு என்றும் அக்னிதேவன் வழிபட்ட இறைவன் அக்னீஸ்வரர் என்றும் வழங்கப்படுகிறார். இறைவனுக்கு உள்ள மற்றொரு பெயர் தீவண்ணநாதர்.

மேற்கு வெளிப் பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் கிழக்கு நோக்கிய சனி பகவான் சந்நிதி தனி விமானம், தனி மண்டபத்துடன் உள்ளது. மகாலட்சுமியின் சன்னதிக்கு அருகில் சனிபகவானின் சன்னதி அமைந்திருப்பது தலத்தின் மிகச்சிறந்த அம்சமாகும். திருநள்ளாற்றைத் தவிர்த்துப் பார்த்தால் சனீஸ்வரனுக்கு இத்தலத்தில் தான் விசேஷம்.

நளன் இத்தலத்தில் சனீஸ்வரரை வழிபட்டுதான் இழந்த நாடு,செலவங்களை பெற்றான் என்ற சிறப்பு உடையது.இச்சந்நிதி. புரூரவஸ் என்ற சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட சனி தோஷத்தை நீக்கியருளிய மூர்த்தி இங்குள்ள சனி பகவான் என்பது பிரசித்தம். சனி பகவான் இத்தலத்தில் அனுக்கிரக மூர்த்தியாக பொங்கு சனியாக காட்சி அளிக்கிறார்.பொங்கு சனிக்கு மிகச்சிறப்பான பரிகார தலமாகும்.

நவக்கிரகங்கள் பொதுவாக வக்கிரகதியில் ஒன்றை ஒன்று பாராமல் காட்சி தருவார்கள். ஆனால இவ்வாலயத்தில் "ப" வடிவில் ஒருவரையொருவர் நோக்கிய வண்ணம் காட்சி பருகின்றனர். நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் இத்தலத்து இறைவன் அழித்து விடுவதால் இத்தலத்தில் நவக்கிரகங்களுக்கு வேலையில்லை.

திருத்துறைப்பூண்டியில் இருந்து 15 கி.மி. தொலைவிலும், திருத்துறைப்பூண்டி - திருவாரூர் ரயில் மார்க்கத்தில் உள்ள ஆலட்டம்பாடி ரயில் நிலையத்தில் இருந்து 7 கி.மி. தொலைவிலும் இத்தலம் உள்ளது. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் நான்கு சாலை நிறுத்தம் வந்து அங்கிருந்து மேற்கே திருநெல்லிக்காவல் செல்லும் பாதையில் திரும்பி 4 கி.மி. சென்றால் முதலில் திருநெல்லிக்காவல் தலமும் அடுத்து 2 கி.மி. தொலைவில் திருதெங்கூர் தலமும் அதையடுத்து மேலும் 4 கி.மி. சென்றால் திருகொள்ளிக்காடு தலத்தை அடையலாம். இத்தலத்திற்கு கச்சனத்திலிருந்து மினி பஸ், ஆட்டோ வசதி உள்ளது.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.





















??????? ??????? ????: ??????? ?????? ??? ?????????? ?????.., ---------------------------------------------------------------
 
Status
Not open for further replies.
Back
Top