அனுமன் வால் வழிபாடு..

ஸ்ரீஆஞ்சனேயர் வழிபாடு சர்வமங்களங்களையும் அளிக்கக்கூடியது. அனைத்து உயர்ந்த குணங்களுக்கும் உறைவிடமாகத் திகழும் ஸ்ரீஆஞ்சனேயரின் வலிமை முழுதும் அவரது வாலில் இருக்கிறது. அவரது வாலில் நவகிரகங்களும்vsm ஐக்கியமாகி இருப்பதாக ஐதீகம். ஆஞ்சனேயரின் வாலின் நுனியில் சந்தனம், குங்குமம் இட்டு 48 நாட்கள் பூஜித்து வந்தால் நவகிரகங்களை வழிபட்டதற்கு ஒப்பாகும். இந்தப் பூஜையானது நவகிரகப் பூஜைக்குச் சமமாகக் கருதப் படுகிறது.

முதன் முதலில் பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான பீமன் வால் வழிபாடு செய்ததாகக் கூறப்படுகிறது.

பீமன் பாரிஜாத மலரைத் தேடி காட்டில் சுற்றி அலைந்து கொண்டிருந்தான். களைப்படைந்த நிலையில் அவன் சென்று கொண்டி ருந்தபோது வழியின் குறுக்கே குரங்கின் வால் ஒன்று இடையூறாக இருந்தது. அது ஆஞ்சனேயரின் வால் என்பதை அறியாத பீமன், "பாதையை விட்டு உன் வாலை நகர்த்து'' என்று கோபமாகக் கூறினான்.

அதற்கு ஆஞ்சனேயர், "முதுமையின் காரண மாக என் வாலை நகர்த்த முடியாமல் படுத் திருக்கிறேன். நீயே வாலை ஓரமாக நகர்த்தி வைத்து விட்டுப் போ'' என்றார்.

பீமன் அலட்சியத்தோடு வாலை அகற்ற முயல, அது அசையவில்லை. பலமுறை கடுமை யாக முயற்சித்தும் வாலை நகர்த்த முடியவில்லை. பீமன் மலைத்து நிற்க, அனுமனே தன்னுடைய வாலை நகர்த்திக் கொண்டு, தான் வாயுபுத்திர னான அனுமன் என்று கூறி பீமனை ஆசீர்வதித்தார். தான் கோபப்பட்டதற்காக தன்னை மன்னிக்கும்படி வேண்டிய பீமன், அனு மனின் வலிமையை வியந்து பாராட்டி, அனுமனையும் அனுமனின் வாலையும் வணங்கினான்.

மேலும், ""எனக்கு சர்வ சக்திகளையும் மங்களங் களையும் அளித்து வாழ்த்தி யதுபோல், தங்கள் வாலைப் பூஜித்து வழிபடுபவர்களுக்கும் சகலvsm சௌபாக்கியங் களையும் அருள வேண்டும்'' என வரம் வேண்டினான். அவ்வாறே அனுமனும் வரம் அருள, அனுமன் வாலை வழிபடும் வழக்கம் ஏற்பட்டது.
 
Thanks for bringing up this topic today. I had been wanting to know the exact procedure and the slokams that need to be chanted while performing this poojai. Kindly someone help.
 
Back
Top