• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

அனுமன் பிறந்தகதை

திரேதாயுகத்தில் குஞ்சரன் என்ற சிவபக்தன் வெகுகாலமாக குழந்தை இல்லாமல் வருந்தினார். அதனால் துயருற்ற அவர் சிவபெருமானை நோக்கி தவம்புரிய, ஜோதிச்சுடரான சிவபெருமான் அவர் முன் தோன்றி, ‘உனக்கொரு மகள் பிறப்பாள். அவளுக்கு, அவள் விரும்பியபடி ஒரு மகன் பிறப்பான். அந்த மகன் வலிமையும், வீரமும் பெற்று மரணம் இல்லாதவனாக சிறப்புற்று திகழ்வான்’ என்று கூறிவிட்டு மறைந்தார்.

அவ்வாறே அவர் மனைவிக்கு ஒரு மகள் பிறக்க, அவள் அஞ்சனை என அழைக்கப்பட்டாள். கேசரி என்னும் வானர வீரருக்கு அவளை மணமுடித்துக் கொடுத்தார் குஞ்சரன். ஒருநாள் அஞ்சனையின் முன்பு தர்மதேவதை தோன்றி ‘பெண்ணே! நீ வேங்கடமலைக்கு கணவனுடன் சென்று, மகாதேவனை குறித்து தவம் செய். அவரருளால் விண்ணவர் போற்றும் வண்ணம் மகன்பிறப்பான்’ என்றார். பிறகு அஞ்சனை காற்றை மட்டும் உணவாகக் கொண்டு கடும் தவம் இருந்தாள். அவளது தவத்தைக் கண்டு வாயுதேவன் அதிசயித்தார். இதையடுத்து அவர், சிவசக்தி வடிவான கனி ஒன்றை அஞ்சனையின் கைகளிலே வந்து தங்கும்படி செய்தார்.

அஞ்சனை அக்கனியை உண்டாள். சில தினங்களில் அவர் கருவுற்றாள். அப்போது ஒரு அசரீரி எழுந்தது. ‘அஞ்சனா தேவி! சிவசக்தி வடிவமான அம்சத்தை சிவனின் ஆணைப்படி வாயுதேவன் கனி உருவில் உன்னை உண்ணச் செய்தான். உனக்கு சிவசக்தி அம்சம் கொண்ட மகன் பிறப்பான். அவன் வாயுபுத்திரன் என்று அழைக்கப்படுவான்.

விண்ணும் மண்ணும் அவனைப்போற்றி புகழும்’ என்றது. இதைக் கேட்ட அஞ்சனை பெரிதும் மகிழ்ச்சி அடைந்தாள். அஞ்சனை தன் கணவர் கேசரியிடம் நடந்ததைக் கூறினாள். அஞ்சனையும், கேசரியும் மகன் பிறக்கும் நாளை எதிர்பார்த்து இருந்தனர். மார்கழி மாதம் மூல நட்சத்திரம் கூடிய நன்னாளில், அஞ்சனாதேவிக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது.

அஞ்சனாதேவியின் மகன் என்பதால் ஆஞ்சநேயர் என்று அழைக்கப்பட்டார். வாயுபுத்திரன், மகாபவிஷ்டன், அர்ஜூனசகன் என்று பலபெயர்கள் உண்டு. வாயுதேவனின் அருளால் பிறந்ததால் காற்றைப் போல் எல்லா திசைகளிலும் திரியும் ஆற்றல் பெற்று இருந்தார். குழந்தை பருவத்திலேயே மலை சிகரங்களை தாண்டுவார். தன்னலமற்ற தொண்டர். தன்னிகரற்ற பிரம்மசாரி. எந்தவித பிரதிபலனையும் கருதாமல் தூய அன்புடனும், பக்தியுடனும் அவர் ஸ்ரீராமனுக்கு தொண்டு செய்தார். ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டு கடலைக் கடந்தார்.

ராவணனின் இழிசெயல் பொறுக்காமல் இலங்காபுரியை எரித்தார். போர்க்களத்தில் வீழ்ந்த லட்சுமணனை காப்பாற்ற, சஞ்சீவி மூலிகைகள் நிறைந்த மலையை கொண்டு வந்தார். அகிராவணனை பாதாள லோகத்தில் சம்ஹாரம் செய்து ராம, லட்சுமணர்களை மீட்டு வந்தார். இருப்பினும் தமது அறிவையும், ஆற்றலையும் குறித்து அவர் ஒரு போதும் தற்பெருமை பாராட்டியதே இல்லை. ‘நான் ஸ்ரீராமனின் சாதாரண தூதன். அவரின் பணியைச் செய்வதற்காகவே நான் இங்கே வந்துள்ளேன்.

ஸ்ரீராமனின் கிருபையால் எனக்கு அச்சமே கிடையாது. நான் ராமனுக்கு தொண்டு செய்கையில் மரணமடைய நேர்ந்தால் அதை வரவேற்கிறேன்’ என்று ராவணினிடம் சொன்னவர். இதன் மூலம் அனுமானின் பணிவை உணர்ந்து கொள்ள முடியும். வெண்ணெய் சாத்தி ஆஞ்நேயரை வழிபடுவது விசேஷம். வெண்ணெய் எப்படி உருகுகிறதோ, அதைப்போல ராம நாம ஜெபத்தால் அவர் உள்ளம் உருகுகிறார். வெண்ணெய் குளிர்ச்சி தருவதாகும். போர்களத்திலே வீர அனுமன் பாறைகளையும், மலைகளையும் பெயர்த்து எடுத்து கடும் போர் செய்தார்.

இதனால் அவரது உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதற்காகவே வெண்ணெய் சாத்தி வழிபடுகிறோம். போர்களத்தில் கொழுப்பு நிறைந்த அரக்கர்களையும், தமது உடல் வலிமையால் வடை தட்டுவது போல் தட்டி துவம்சம் செய்தவர் ஆஞ்சநேயர். அதனால் தான் கொழுப்பு சத்து நிறைந்த உளுந்தை சேர்த்து அவருக்கு வடை மாலை செய்து சாத்துகின்றனர். சீதாதேவி பரிசாக வழங்கிய முத்து மாலையை சுவைத்து அதில் ராமசுகம் உள்ளதா என்று பார்த்து பிய்ந்து எறிந்தவர் அனுமான். அதுபோலவே கழுத்தில் அணிவிக்கப்பட்ட வடை மாலையையும் அவர் சுவைத்து பார்ப்பதாக ஐதீகம்.
 
சொல்லின் செல்வன் என்று ராமரால் பாராட்டப்பட்ட அனுமன், கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக போற்றப்படுகிறார். இவரைத் துதிப்போருக்கு சகலவிதமான ஆனந்தங்களும் கைவரப்பெறும் என புராணங்கள் கூறுகின்றன. இதிகாசபுராணங்களில் இணையற்ற இடம்பெற்று இருக்கும் அனுமன், ஈரேழு பதினான்கு உலகிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்.

ராமாவதாரத்தின் போது அனைத்து தேவர்களும் பூமியில் வானரங்களாகப் பிறந்தனர் என்றும், சிவபெருமான் ராமனுக்கு உதவிபுரிவதற்காக அதிபராக்கிரமசாலியான அனுமனை அவதரிக்கச் செய்ததாகவும் ஸ்கந்த புராணம் குறிப்பிடுகிறது.

அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதூர்யம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற ஆஞ்சநேயர் ‘சிரஞ்சீவி’ பட்டம் பெற்றவர்.

முழுமுதற்கடவுளான பரமேஸ்வரன் அபிஷேகப்பிரியர். காக்கும் கடவுளான திருமாலோ அலங்காரப்பிரியர். சொல்லின் செல்வன் அனுமனோ ஸ்தோத்திரப்பிரியர் ஆவார். ராமநாமத்தின் உயிர் உருவமான அவர் தமது செவிகளில் ராமநாமமே ஒலிக்க வேண்டும் என்று விரும்புவார்.

சிரஞ்சீவிஅனுமன் வாயுதேவனுக்கும், அஞ்சனா தேவிக்கும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் மகனாகப் பிறந்தார். அன்றைய தினம் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

................................................

வடை மாலை சாத்துவது ஏன்?

போர்களத்தில் கொழுப்பு நிறைந்த அரக்கர்களையும், தமது உடல் வலிமையால் வடை தட்டுவது போல் தட்டி துவம்சம் செய்தவர் ஆஞ்சநேயர். அதனால் தான் கொழுப்பு சத்து நிறைந்த உளுந்தை சேர்த்து அவருக்கு வடை மாலை செய்து சாத்துகின்றனர். சீதாதேவி பரிசாக வழங்கிய முத்து மாலையை சுவைத்து அதில் ராமசுகம் உள்ளதா என்று பார்த்து பிய்ந்து எறிந்தவர் அனுமான். அதுபோலவே கழுத்தில் அணிவிக்கப்பட்ட வடை மாலையையும் அவர் சுவைத்து பார்ப்பதாக ஐதீகம்.

உடல் முழுவதும் செந்தூரம்

அனுமான் கோவில்களில் அனுமாருக்கு செந்தூர திலகமிட்டு பூஜை செய்வது வழக்கம். சீதாதேவி ஒருநாள் தனது நெற்றிக்கு செந்தூர பொட்டை வைத்து கொண்டு இருந்தார். இதை அருகில் இருந்து கவனித்த அனுமான் அதற்கு விளக்கம் கேட்டார். அதற்கு சீதாதேவி பதில் கூறுகையில் எனது கணவர் நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்காகவே செந்தூரம் பூசுவதாக கூறினார். இதையடுத்து அனுமான் கருணைக்கடவுளான ராமபிரான் என்றும் நீடுழி வாழ்வதற்காக தனது உடல் முழுவதும் செந்தூரத்தை பூசிக் கொண்டார்.

இன்றும் அனுமான் கோவிலில் பூஜை செய்யும் பூசாரிகள் அனுமான் சிலைக்கு அபிஷேகம் செய்து பூஜைகள் நடத்திய பிறகு சிலைக்கு எண்ணெய் கலந்த செந்தூர பவுடரை பூசி விடுகின்றனர். பக்தர்களும் கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயரை வணங்கி நலமுடன் வாழ செந்தூரத்தை நெற்றியில் பொட்டாக வைத்து கொள்கின்றனர்.

வெற்றிலையால் வாழ்த்திய சீதை

இலங்கையில் ராமனுக்கும், ராவணனுக்கும் யுத்தம் நடைபெற்ற போது அரக்கர்களை பந்தாடி போர்களத்தில் வெற்றிக்கொடி நாட்டியவர் அனுமான். அதனால் தான் அவருக்கு கொடியிலேயே வளரும் வெற்றிலையை மாலையாக போடுகிறார்கள். இலங்கை அசோகவனத்தில் சீதா பிராட்டியார் சிறைப்பட்டு இருந்த போது, ராமதூதனாக சென்ற அனுமன் சீதையை சந்தித்து ‘ராமர் விரைவில் இலங்கை வந்து உங்களை சிறை மீட்டுச் செல்வார்’ என்று கூறினார். இதைக்கேட்டு மகிழ்ந்து போன சீதை, அருகில் இருந்த வெற்றிலை கொடியில் இருந்து வெற்றிலையை பறித்து அனுமானின் சிரசில் போட்டு ‘சிரஞ்சீவியாக இருப்பாயாக’ என்று கூறி ஆசி வழங்கினார். இதை நினைவுகூரும் விதத்தில் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டி அனுமானுக்கு வெற்றிலை மாலை அணிவிக்கின்றனர்.

Source: Face book
 
அனுமன் உடம்பில் எப்போதும் அரக்கு கலரில் பூசப்படுவதும் அவர் பிரசாதமாக அதையே கொடுப்பது என்ன, எதனால், ஏன் என்று சொல்லமுடியுமா ? thanks
 

Latest ads

Back
Top